Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

என் இந்த நிலைமைக்கு காரணம் இதுதான்.. நான் செய்த அந்த முட்டாள்தனம்! திருமணத்திற்கு பிறகு அமீர் பேட்டி

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் அமீர் மற்றும் பாவனியின் திருமணம் கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த திருமணத்தில் விஜய் டிவி பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்திருந்தனர். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலரும் இவர்களுடைய திருமணத்தில் கலந்து கொண்டனர். இந்த நிலையில் திருமணத்திற்க்கு பிறகு தன்னுடைய வாழ்க்கையில் நடந்த பல விஷயங்கள் குறித்து அமீர் பேசி இருக்கிறார்.

கடந்த சில நாட்களாகவே சின்னத்திரை பிரபலங்களில் திடீர் திருமணம் தான் பெரிய அளவில் பேசப்படுகிறது. விஜய் டிவி தொகுப்பாளரான பிரியங்காவின் இரண்டாவது திருமணம் பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிரியங்காவிற்கு ஏற்கனவே விஜய் டிவி பிரபலம் ஒருவருடன் திருமணம் முடிந்து விவாகரத்தான நிலையில் தன்னைவிட 10 வயது அதிகமான வசி என்பவரை இரண்டாவது திருமணம் செய்திருந்தார்.

Vijay TV Bhavani Priyanka

பிரியங்காவின் திடீர் திருமணம்

திருமணத்திற்கு முன்பு எந்த இடத்திலும் தன்னுடைய திருமணம் குறித்து பிரியங்கா தெரிவிக்காமல் இருந்த நிலையில் திடீரென தன் திருமண புகைப்படங்களை அவர் பகிர்ந்தது இணையத்தில் பலருக்கும் இன்ப அதிர்ச்சியை கொடுத்திருந்தது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் பாவனி மற்றும் அமீர் இருவரும் திருமணம் செய்து இருந்தனர். அமீர் மற்றும் பாவனி இருவரும் கடந்த மாதத்திலேயே தங்களுடைய திருமண தேதியை அறிவித்திருந்தனர்.

ஆரம்பகால கஷ்டம்

அது போல இவர்களிடையே திருமணம் இந்து மற்றும் முஸ்லிம் என எந்த அடையாளமும் இல்லாமல் செய்ய போகிறோம் என்று ஏற்கனவே அறிவித்திருந்தார்கள். அதுபோல இவர்களுடைய திருமணம் நடைபெற்றது. திருமணத்தில் பல பிரபலங்களும் கலந்து கொண்டனர். இந்த நிலையில் திருமணத்திற்கு பிறகு அமீர் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டிருக்கிறார். அதில், ஆரம்பத்தில் நான் அதிகமாக கஷ்டப்பட்டேன். இரண்டு நேரம் சாப்பாட்டுக்கு கூட வழியில்லாமல் இருந்திருக்கிறேன்.

தன்னம்பிக்கை

ஆனாலும் என்னுடைய தன்னம்பிக்கையை எப்போதும் விட்டது கிடையாது. கல்லூரி படிக்கும் போது 24 கிலோமீட்டருக்கு நடந்தே பல டான்ஸ் கிளாஸுக்கு சென்று டான்ஸ் கற்று கொடுத்து இருக்கிறேன். நான் அப்போது நடந்த தூரம் தான் என்னுடைய வாழ்க்கையில் என்னால் எதையும் செய்ய முடியும் என்ற தன்னம்பிக்கையை கொடுத்தது. ஆரம்பத்தில் நான் பிரபுதேவாவை சந்திக்க முடியுமா என்று நினைத்திருந்தேன். பிறகு பிரபுதேவாவுக்கே கொரியோகிராபி பண்ணும் அளவிற்கு உயர்ந்திருக்கிறேன்.

எமோஷனலுக்கு அடிமை

அது மட்டுமல்லாமல் எமோஷனலுக்கு அடிமையாகி சில விஷயங்களை இழந்திருக்கிறேன். என்று பேசியிருந்தார். பிறகு அவர் பேசும்போது ஆரம்பத்தில் எனக்கு லேப்டாப் பயன்படுத்தவே தெரியாது. ஆனால் பிறகு லேப்டாப்பில் தான் எடிட்டிங் எல்லாம் கற்றுக் கொண்டேன். அதுவும் ஒரு வாரத்திற்குள் கற்றுக் கொண்டேன். அந்த எடிட்டிங்கில் அடுத்த லெவலுக்கு சென்று அந்த லெவலையும் கற்றுக்கொள்ள நான்கு வருடம் ஆனது. அதற்கு காரணம் எமோஷனல் பாண்டிங் இருந்ததுதான். இதுதான் நான் என்னுடைய முட்டாள்தனம் என்று கூறுவேன் (எந்த எமோஷனலுக்கு அடிமையாக இருந்தார்) என்பதை அதில் அமீர் கூறவில்லை.

கான்ஃபிடன்ட்

ஆனால் நான் இன்று இந்த அளவிற்கு வளர்ந்து இருக்கிறேன் என்றால் அதற்கு முக்கிய காரணம் என்னுடைய கான்பிடன்ட் தான். அந்த கான்பிடன்ட் இல்லை என்றால் இன்று பாவனியை திருமணம் செய்திருக்க முடியுமா?. நான் விஜய் டிவியில் எப்படியாவது கலந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தேன். பிக் பாஸ் நிகழ்ச்சி எனக்கு ஒரு வாய்ப்பு கொடுத்தது. அந்த நிகழ்ச்சியில் நான் கலந்து கொள்வதற்கு முன்பே பாவனி நடிகையாகவும் மாடலாகவும் இருந்திருக்கிறார். என்னை விட பல மடங்கு உயரத்தில் இருந்த பாவனியை காதலித்து இன்று திருமணம் செய்து இருக்கிறேன் என்றால் அதற்கு முக்கிய காரணம் என்னுடைய கான்பிடென்ட் தான் என்று அமீர் பேசி இருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+