ஆனந்தம் சீரியல் “அபிராமி”யை நினைவிருக்கா? மகன் நடிகர் கிஷன் தாஸ் பற்றி பெருமிதம்.. இவர் மாறவே இல்லையே
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பான ஆனந்தம் சீரியலில் அபிராமி எனும் வில்லியாக நடித்து கலக்கி ஏராளமான ரசிகர்களின் கவனம் பெற்ற நடிகை பிருந்தா தாஸ் தன்னுடைய மகன் கிஷன் தாஸோடு எடுத்த புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். அது அதிகமான கருத்துக்களை பெற்று வருகிறது.
அந்த வகையில் ஒரு சில நடிகைகள் தான் பார்த்ததும் ரசிகர்கள் மனதில் பதிந்து விடுவார்கள். அந்த வகையில் வில்லியாக நடித்தாலும் பலருடைய மனதை கொள்ளை கொண்டவர்தான் பிருந்தா தாஸ். அதாவது சீரியலில் சைலன்டான வில்லியாக நடித்தார் என்பதை விடவும் வாழ்ந்தார் என்று தான் சொல்ல வேண்டும். இந்த சீரியலில் இவருடைய உடை மற்றும் நகைகள் பார்ப்பதற்காகவே இவரை ரசித்தவர்கள் ஏராளம். அதிலும் இவருடைய நீண்ட முடி பலருக்கும் ஃபேவரைட்.

என்னதான் இவர் சீரியலில் வில்லத்தனம் செய்தாலும் இவரை ரசிக்காதவர்கள் இல்லை என்று சொல்லும் அளவிற்கு அதிகமான ரசிகர்களை கவர்ந்திருந்தார். இவர் நடிகையாக மட்டுமல்லாமல் நடன கலைஞர், டப்பிங், சினிமா தயாரிப்பாளர், இயக்குனர் என பல திறமையாளராக விளங்கும் பிருந்தா தாஸூக்கு இன்று வரை அடையாளமாக இருப்பது ஆனந்தம் சீரியலில் வில்லி தான்.
இப்பொழுது உள்ள சீரியல்களில் பல வில்லிகள் எதற்கெடுத்தாலும் கத்திக் கொண்டும், விதவிதமான நகை நட்டுகளோடு நகைக்கடை விளம்பரத்தில் வருவது போன்று மிரட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இவர் எளிமையாக அதே நேரத்தில் பார்ப்பவர்களே மிரளும் வகையில் நடித்திருந்தார். பிறகு பல ஆண்டுகளாக சினிமா, சின்னத்திரை, மெகா தொடர் என்று பிஸியாக இருந்து வந்த பிருந்தா தாஸ் நடிப்பிலிருந்து கொஞ்சம் விலகி "ஹாய் டா" என்ற படத்தின் மூலமாக பெண் இயக்குனர் வரிசையில் இணைந்தார்.
அந்த திரைப்படத்தில் சில சின்னத்திரை நடிகர்களையும் நடிக்க வைத்திருந்தார். அதைத் தொடர்ந்து கார்ப்பரேட் நிறுவனத்திலும் வேலை செய்து இருந்தார். அதே நேரத்தில் இவருக்கு இப்போதும் சீரியல் வாய்ப்புகள் வந்த வண்ணமாக இருந்தாலும் குறுகிய காலத்திற்குள் முடிவது போன்று நல்ல கதையாக அமைந்தால் நான் நிச்சயமாக நடிப்பேன் என்று பிருந்தா தாஸ் கூறியிருக்கிறார்.
அதே நேரத்தில் பிருந்தா தாஸின் மகன் கிஷன் தாஸும் மீடியாவில் ஆக்டிவாக இருக்கிறார். ஆரம்பத்தில் ஆங்கராக தன்னுடைய பயணத்தை தொடங்கி அதற்கு பிறகு ஷார்ட் பிலிம், விளம்பர படங்கள் போன்றவற்றில் கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் வெளியான "முதல் நீ முடிவும் நீ" படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான கிஷன் தாஸுக்கு அந்த படம் நல்ல பாராட்டுகளை பெற்றுக் கொடுத்தது.
அதைத் தொடர்ந்து ஆர்.ஜே பாலாஜியுடன் சிங்கப்பூர் சலூன் படத்திலும் நடித்திருந்தார். அதுபோல பிருந்தா தாஸ் மற்றும் அவருடைய மகன் கிஷன் தாஜும் சேர்ந்து மீட் அவர் மம்மி என்ற ஷார்ட் பிலிம் ஒன்றில் நடித்திருந்தனர். இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு கிஷன் தாஸுன் பிறந்தநாளுக்கு பிருந்தா தாஸ் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவருடைய எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து இருந்தார்.
அதில், "என்னுடைய பூ, கிகி, கேடிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். அன்பு , அதிர்ஷ்டம், மகிழ்ச்சி, ஆரோக்கியம் மற்றும் வெற்றி என்றுமே உன் வாழ்க்கையில் நிலைத்திருக்க வாழ்த்துக்கள்" என்று மகனை வாழ்த்தியிருக்கிறார். அதற்கு அவருடைய மகன் கிருஷ்ணன் தாஸ் நன்றி அம்மா வாழ்க்கையில் எது நடந்தாலும் அதை எதிர்த்து போராட நான் என்றும் உங்களுடன் இருப்பேன் லவ் யூ அம்மா என ரிப்ளை செய்திருக்கிறார்.
இது இணையத்தில் அதிகமான லைக்களை குவித்து வருகிறது. இந்த நிலையில் பல வருடங்களுக்குப் பிறகு ஆனந்தம் அபிராமியை பார்த்த சீரியல் ரசிகர்கள் இவர் இன்னும் மாறவே இல்லை. ஆனந்தம் சீரியலில் எப்படி அழகாக இருந்தாரோ அதே அழகில் இண்ணமும் இருக்கிறாரே என்று கமெண்ட் அனுப்பி வருகிறார்கள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications