எனக்கு குழந்தை இல்லை..அதனால் பட்ட அவமானம்..உருக்கமாக பேசிய அனந்த் வைத்தியநாதன்
சென்னை: பாடகர் அனந்த் வைத்தியநாதன் தன்னுடைய குடும்ப வாழ்க்கை மற்றும் தன்னுடைய திரைப்பட வாழ்க்கை குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார்.
கடந்த சீசன் வரைக்கும் விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் வாய்ஸ் சேன்சராக கலந்து கொண்ட அனந்த் வைத்தியநாதன் தற்போது எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளாமல் இருக்கிறார்.
இந்த நிலையில் தனக்கு குழந்தை இல்லை என்றும் அதனால் தான் பட்ட கஷ்டங்கள் பற்றியும் உருக்கமாக பேசியிருக்கிறார்.
விஜய் டிவியில் மிகவும் பிரபலமாக ஓடிக் கொண்டிருக்கும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி தற்போது ஒன்பதாவது சீசன் வரை விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியை மாகாபா ஆனந்த் மற்றும் பிரியங்கா தொகுத்து வழங்குகிறார்கள். அதோடு இந்த நிகழ்ச்சியில் நடுவராக பலர் கலந்துகொண்டு இருக்கின்றனர்.

ஆனால் கடைசி சீசன் வரை அனந்த் வைத்தியநாதன் தொடர்ச்சியாக கலந்து கொண்டிருந்தார். ஆரம்ப காலத்தில் இருந்தே இவர் இந்த நிகழ்ச்சியில் இருந்த நிலையில் தற்போது இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை. இந்த நிலையில் பல நாட்களுக்குப் பிறகு பேட்டி ஒன்றில் தன்னுடைய ரகசியங்கள் பலவற்றையும் மனம் திறந்து பேசி இருக்கிறார்.
அதில் அனந்த் வைத்தியநாதன் பேசுகையில், நான் விஜய் டிவி நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தது பலருக்கும் பயன்பட வேண்டும் என்று தான். ஆனால் நான் கடந்த 2015 ஆம் ஆண்டு அகாடமி ஒன்று ஆரம்பித்தேன். அதில் சேர்வதற்கு நிறைய பேர் வந்தாங்க. ஆனா எல்லோரும் இவரிடம் சேர்ந்தால் விஜய் டிவிக்குள் ஈசியா போயிடலாம்னு நினைச்சு வந்திருக்காங்க. இது எனக்கு ரொம்ப கஷ்டத்தை கொடுத்துட்டு.
என்கிட்ட இருக்கிற விஷயத்தைக் கற்றுக்கொண்டு அவர்களுடைய திறமையை முன்னுக்கு கொண்டு வருவாங்க நினைக்கிறேன். ஆனா அப்படி பலர் செய்வதற்கு தயங்குகிறார்கள். எப்படி ஈசியா நம்மகிட்ட பழகி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்துக்கலான்னு தான் அவங்க யோசிக்கிறாங்க. அதுக்காக என்னை பயன்படுத்துகிறார்கள் என வருத்தத்தோடு பேசி இருக்கிறார்.
மேலும் அவர் பேசுகையில் எனக்கு குழந்தை எல்லாம் இல்லங்க. குழந்தை இருந்திருந்தால் நான் எப்படி எல்லாம் இருந்து இருப்பேன்னு தெரியல. பொதுவா குழந்தைகளை ரொம்ப கட்டாயப்படுத்த கூடாதுன்னு நான் சொல்லுவேன். ஆனா எனக்குன்னு இருந்துச்சுன்னா நான் எப்படி எல்லாம் அதற்கு குழந்தையை எப்படி கொடுமைப்படுத்தி இருப்பேன்னு என்று எனக்கு தெரியல.
பலர் என்னை பார்க்கும்போது உங்களுக்கு ஒரு குழந்தை இருந்தா நல்லா இருக்கும்னு சொல்றாங்க. அதுக்கு கேக்குறதுக்கு வருத்தமாகத்தான் இருக்கு. இல்லாத விஷயத்தை பற்றி பேசி என்னதுக்கு. குழந்தைகளை கொஞ்சம் ஃப்ரீயா விடணும். அவங்கள ரொம்ப கட்டுப்படுத்த கூடாதுன்னு நான் எப்பவும் சொல்லுவேன். குழந்தைகளுக்கு ஆரம்பத்திலேயே அவங்க திறமைக்கு தகுந்த மாதிரியே வளர்க்கணும்.
நான் ரொம்ப கோபப்படுவேன். யார்கிட்டயும் எல்லாத்தையும் வெளிப்படையா பேச மாட்டேன். எனக்குன்னு பெரிய அளவில் நண்பர்கள் எல்லாம் கிடையாது. அந்தந்த நேரத்தில் யாரு கொஞ்சம் பாசமா இருக்காங்களோ அவங்க கிட்ட நான் கொஞ்சம் கேரிங்கா இருப்பேன். ஆனா என்னோட பர்சனல் லைஃபை எல்லாம் சொல்ற அளவுக்கு பெரிய அளவில் எனக்கு நண்பர்கள்னு யாரும் இல்ல. இதுவும் எனக்கு வருத்தமாக தான் இருக்கு. ஆனா என்ன செய்ய இவ்வளவு நாளா அப்படியே பழகிட்டு. இனியும் அப்படியே இருந்துற வேண்டியது தான் என்று அனந்த் வைத்தியநாதன் கூறி இருக்கிறார்.
-
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
அஜித்துக்கு அடுத்த பேரிழப்பு.. தந்தையை தொடர்ந்து தாயாரும் மறைவு.. சோகத்தில் பிரபலங்கள் வருத்தம் -
உருவ கேலியால் உடைந்த மனம்... அந்த நடிகர் கேட்ட கேள்வியால் கதறி அழுதேன்.. நடிகை ஊர்வசி உருக்கம் -
ஒருபுறம் அஜித் அம்மா மறைவு... மறுபுறம் அனாதையாக விடைபெற்ற சத்யேந்திரா! சமூகத்தின் இரட்டை முகமா? -
Blast Movie Review: ப்ளாஸ்ட் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! அர்ஜுனுக்கு கம்பேக்? முழு விமர்சனம் இதோ! -
பிரச்சனை இருந்தது.. விட்டு கொடுக்க மனசு இல்ல.. ஆனாலும், கருப்பு படம் குறித்து நடிகர் இந்திரன்ஸ் உருக்கம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ்












Click it and Unblock the Notifications