“அன்பே வா” விராட்டின் திருமணத்தில் இதுதான் சிக்கலா? மனைவியின் முதல் குழந்தை மேடையில் செய்த செயல்
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அன்பே வா சீரியல் மூலம் பிரபலமடைந்த நடிகர் விராட் சமீபத்தில் அவருடைய காதலியை திருமணம் செய்திருந்தார். ஆனால் விராட்டின் மனைவிக்கு ஏற்கனவே ஒரு திருமணம் நடைபெற்று இருக்கும் நிலையில் அது விவாகரத்தில் முடிவடைந்து இருக்கிறது.
அதோடு விராட்டின் திருமணத்திற்கு அவருடைய வீட்டில் முதலில் சம்மதிக்காமல் இருந்திருக்கின்றனர். அதற்கு காரணம் என்ன என்பது பற்றி விராட் சமீபத்தில் பேட்டி ஒன்றில் மனம் திறந்து பேசி இருக்கிறார்.

அந்த வகையில் சமீபத்தில் ஒரு சில பிரபலங்களின் திருமணங்கள் இணையத்தில் பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே நடிகர் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜாவின் திருமணம் அதிகமாக இணையத்தில் பேசப்பட்டுக் கொண்டிருந்தது. அதைத் தொடர்ந்து இயக்குனர் ஷங்கரின் மகளின் திருமணமும் பெரிய அளவில் பேசப்பட்டு கொண்டிருக்கிறது.
இதைத்தொடர்ந்து இப்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அன்பே வா சீரியலின் மூலம் பிரபலம் அடைந்த நடிகர் விராட் திருமணம் பலரையும் வியக்க வைத்திருக்கிறது. அதாவது அன்பே வா சீரியலில் வரும் கேரக்டரில் நடித்து சின்னத்திரை ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த நடிகர் விராட் இணையத்திலும் ஆக்டிவாக இருந்து வருகிறார். இவருக்கு அதிகமான இளம் ரசிகர்கள் பாலோவர்ஸ்களாக இருக்கின்றனர்.
இப்படியான நிலையில் தான் கடந்த சில நாட்களுக்கு முன்பு இவருடைய நீண்ட நாள் காதலியான நவீனா என்பவரை மகாபலிபுரத்தில் வைத்து விராட் திருமணம் செய்திருந்தார். சில மாதங்களுக்கு முன்பு இவர்களுடைய என்கேஜ்மென்ட் முடிவடைந்து இருந்தது. அதைத் தொடர்ந்து இப்போது திருமணம் எளிமையாக நடைபெற்றிருக்கிறது. திருமணத்தில் ஒரு சில சின்னத்திரை பிரபலங்களும் தம்பதிகளின் குடும்பத்தினரும் கலந்து கொண்டிருக்கின்றனர்.
அதுபோல விராட்டின் மனைவி நவீனா ஒரு மேக்கப் ஆர்டிஸ்ட் என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்படியான நிலையில் விராட் சமீபத்தில் அளித்த பேட்டியில் என்னுடைய திருமணத்திற்கு வீட்டில் சம்மதிக்கவில்லை. அதற்கு காரணம் என்னுடைய மனைவி என்னை விட ஐந்து வயது மூத்தவர் என்பது ஒரு காரணம். அது போல இன்னொரு விஷயம் என்னவென்றால் அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து ஆகிவிட்டது.
அதோடு அவருக்கு முதல் திருமணத்தில் ஒரு பெண் குழந்தையும் இருக்கிறது. அதனால் பலர் குழந்தையோடு இருக்கும் பெண்ணை திருமணம் செய்ய வேண்டாம் என்று அட்வைஸ் கொடுத்தார்கள். என்னுடைய அம்மாவும் என்னுடைய திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை. அதனாலேயே நான் வீட்டிலிருந்து இரண்டு வருடங்களாக வெளியேறி வெளியே தான் தங்கி இருந்தேன்.
ஷூட்டிங் கலந்துகொண்டு தனியாகத்தான் வசித்து வந்தேன். வீட்டிற்கு போனால் தேவையில்லாத சண்டை பிரச்சனைகள் தான் வரும் என்று நான் நினைத்திருந்தேன். அதற்கு பிறகு அம்மா என்னுடைய காதலை புரிந்து திருமணத்திற்கு சம்மதம் சொல்லி இருக்கிறார். என்னுடைய மனைவியின் முதல் குழந்தை எனக்கும் குழந்தை தான். நான் அவரை நல்லபடியாக வளர்ப்பேன்.
அவருடைய ஆசை, கனவுகளை எல்லாம் நிறைவேற்றுவேன் என்று விராட் கூறி இருக்கும் நிலையில், அவருடைய மனைவி நவீனா பேசுகையில் ஆரம்பத்தில் நாங்கள் இருவரும் நண்பர்களாக தான் இருந்தோம். பிறகு என்னுடைய வளர்ச்சிக்கும் எனக்கு ஆதரவாகவும் விராட் இருந்து வருகிறார்.
அதோடு என்னை முழுமையாக புரிந்து கொண்டது விராட் தான். என்னுடைய குழந்தைக்கு நல்ல அப்பா கிடைத்திருக்கிறார் என்று கண் கலங்க விராட் குறித்து பேசி இருக்கிறார். இந்த நிலையில் விராட் செயலை பெரும்பாலானோர் பாராட்டி வருகிறார்கள்.
அதுபோல விராட் மற்றும் அவருடைய மனைவியின் திருமணத்தில் அவருடைய முதல் குழந்தை இருவரோடு புகைப்படங்களை எடுத்து இருக்கிறார். விராட் மற்றும் அவருடைய அம்மாவின் கன்னத்திலும் மாறி மாறி முத்தங்களை கொடுத்திருந்தது. இந்த புகைப்படங்களும் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications