நடிகை அனிதா சம்பத் வீட்டில் திடீர் இறப்பு.. காரணம் இதுதானா? கண்கலங்கி அவரே வெளியிட்ட பதிவு.. குவியும் ஆறுதல்
சென்னை: செய்தி வாசிப்பாளராக பிரபலமடைந்த அனிதா சம்பத் இப்போது சின்னத்திரை, வெள்ளி திரைகளில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். சில நாட்களுக்கு முன்பு அவருடைய வீட்டில் இறப்பு சம்பவம் நடந்திருக்கிறது அது குறித்து சோகமான பதிவை அனிதா சம்பத் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு அனிதா சம்பத் சோசியல் மீடியா பக்கங்களில் பெரிய அளவில் பிரபலமாகிவிட்டார். அதுபோல தமிழில் சில திரைப்படங்களிலும் முக்கிய கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கிறார். அது மட்டுமல்லாமல் சின்ன திரையிலும் சில சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி போட்டோ ஷூட் மற்றும் புகைப்படங்களை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்.

அனிதா சம்பத் பதிவு
அதுபோல அனிதா சம்பத் தனக்கு கிடைக்கும் இடங்களில் எல்லாம் தன்னுடைய கணவர் மற்றும் குடும்பத்தை பற்றி உருக்கமாக பேசிக்கொண்டிருப்பார். தன்னுடைய ஆரம்ப காலத்தில் எவ்வளவு கஷ்டப்பட்டு இன்று இருக்கும் நிலைமைக்கு முன்னேறினார் என்பது குறித்து பேசும்போதே அனிதா சம்பத் பல இடங்களில் அழுது இருக்கிறார். அது அவர் பட்ட வலி வேதனையின் வெளிப்பாடாக இருந்தாலும் இன்று அவருடைய வாழ்க்கையில் எதிர்பார்க்காத ஒரு துயர சம்பவமும் நடந்திருக்கிறது.
மாமியார் இறப்பு
அதாவது அவருடைய மாமியார் சில நாட்களுக்கு முன்பு காலமாகி இருக்கிறார். அனிதா சம்பத் பிரபா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் ஆரம்பத்தில் ஒரே இடத்தில் வேலை பார்த்து இருக்கிறார்கள். அப்போதுதான் இருவருக்கும் காதல் தொடங்கியது. பிறகு இரண்டு வீட்டினரின் சம்மதத்தோடு திருமணம் செய்து கொண்டனர் தன்னுடைய எல்லா வெற்றிக்கும் காரணம் பிரபா தான் என்று அனிதா கூறி இருக்கிறார்.
ஆப்ரேஷன்
இந்த நிலையில் பிரபாவின் அம்மா இறந்துபோனது குறித்து தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் அனிதா சம்பத் நீண்ட பதிவு வெளியிட்டிருக்கிறார். அதில் அன்புள்ள நண்பர்களே குடும்பத்தினர் மற்றும் அன்பான பின் தொடர்பவர்களே! கடந்த சில மாதங்களாக என் மாமியாரின் உடல் நிலையை பரிசோதித்ததற்கு நன்றி. அவருக்கு சிறுநீரக செயலிழப்பு இருந்தது. கடந்த சில மாதங்களாக இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்து விட்டது அதனால் அவருக்கு டயாலிசிஸ் நடந்து கொண்டிருந்தது. அதனால் அவர் 15 கிலோ எடை குறைந்து விட்டார்.
பல பிரச்சனை
கடந்த மே 16ஆம் தேதி அன்று அவருக்கு கால்களில் கடுமையான வலி இருந்தது. அடைப்பை அகற்ற ராமச்சந்திரா மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதற்குப் பிறகு மூன்று நாட்களுக்குள் டிஸ்சார்ஜ் செய்யப்பட இருந்தார். ஆனால் திடீரென்று மே 18 அன்று அவர் உடல்நிலை குறைபாடு குறைந்துவிட்டது. சுமார் 7 நாட்களில் அவர் கண்களை திறப்பார் என்று நாங்கள் எதிர்பார்த்தோம். ஏதாவது அதிசயம் நடக்கும் என்று எதிர்பார்த்தோம். எல்லா கடவுளிடமும் வேண்டினோம் ஆனால் இறுதியில் நாம் அனைவரும் மனிதர்கள் தானே...
உயிர் பிரிந்தது
நுரையீரல் பிரச்சனை, இதய பிரச்சினை, சிறுநீரக செயலிழப்பு போன்ற பல பிரச்சனைகளுடன் அவருடைய உடல்நிலை உயிர் வாழ ஆதரிக்கவில்லை. அவருடைய குழந்தைகள் பிரபாவும் அவரது சகோதரியும் அம்மா மீண்டு வருவார் என்று மருத்துவமனையில் கடந்த நான்கு ஐந்து மாதங்களாக தூங்கவே இல்லை. இருப்பினும் நாங்கள் எங்கள் மாமியாரிடம் மகிழ்ச்சியான பக்கத்தை மட்டுமே காட்டினோம். அவருடைய உடல்நிலை குறித்து நாங்கள் மனதளவில் நிறைய கஷ்டப்பட்டோம்.
மருத்துவ செலவு
பிரபா ஒரு நாளைக்கு அரை மணி நேரம் கூட தூங்கவில்லை. மருத்துவர்கள் தொடர்ந்து அழைத்தனர். அவருடைய உடல்நிலை குறித்து தினமும் அனைத்து உறவினர்களுக்கும் தொடர்ந்து தகவல் அளித்தனர். மிகப்பெரிய மருத்துவ செலவும் ஆனது. அவருடைய அம்மாவை இங்கே காப்பாற்ற நிறைய போராடினார். அவருடைய உடல் உயிர் வாழ நிறைய முயற்சித்தது ஆனால் அவருடைய உடல்நிலை அதை ஆதரிக்கவில்லை.
இரங்கல்
மெதுவாக அவரது நாடி துடிப்பு நாளுக்கு நாள் குறைய தொடங்கியது. அவருடைய உயிரை காப்பாற்றுவது கடினம் என்று மருத்துவர்கள் அறிவித்தனர். 12 நாட்கள் இருந்த பிறகு அவர் சில நாட்களுக்கு முன்பு கடந்த மே 25ஆம் தேதி இரவு எங்களை விட்டு சென்றார். என்னுடைய மாமியாரின் உடல்நிலை குறித்து பலரும் என்னிடம் கேள்வி கேட்டுக்கொண்டே இருந்தனர் அதற்கு மிகப்பெரிய நன்றி. பெற்றோரை விட்டு செல்வது வாழ்க்கையில் மிகப்பெரிய சாபம். இந்த உலகம் எங்கள் பெற்றோரை எப்படி நேசிக்க வேண்டும் என்பதை எங்களுக்கு கற்றுக் கொடுத்திருக்கிறது என்று தன்னுடைய மாமியார் மற்றும் குடும்ப சூழ்நிலை குறித்து அனிதா சம்பத் பகிர்ந்து இருக்கிறார். அவருக்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து ஆறுதல் கூறி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications