அங்காடித்தெரு சிந்துவின் சோகமான மறுபக்கம்... இந்த நிலைமை எந்த பெண்ணுக்கும் வரக்கூடாது

Subscribe to Oneindia Tamil

சென்னை: அங்காடி தெரு படத்தின் மூலமாக பலருக்கும் பரிச்சயமான சிந்து தற்போது புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது பலருக்கும் தெரிந்திருந்தாலும் அந்த நோயோடு அவர் தினமும் போராடி வந்தாலும் தன்னுடைய வாழ்க்கையின் மறுபக்கத்தை பற்றி வெளிப்படையாக பேசியிருக்கிறார்.

எந்தப் பெண்ணும் தன்னுடைய வாழ்க்கையில் இப்படி ஒரு சோகங்களை அனுபவிக்க கூடாது என்று சிந்துவின் கதையை கேட்ட ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

14 வயதில் திருமணம் முடிந்து அதே வருடத்தில் ஒரு குழந்தைக்கு அம்மாவாக மாறி கணவரின் கொடுமையால் அப்பா வீட்டிற்க்கே மீண்டும் வந்து அந்த குழந்தைக்காக சிந்து வாழ்க்கையில் பல போராட்டங்களை செய்திருக்கிறாராம்.

குழந்தை நட்சத்திரமாக அறிமுகம்

குழந்தை நட்சத்திரமாக அறிமுகம்

பொதுவாக பலரும் சிறு தலைவலி கால் வலி என்றாலே துவண்டு போய்விடும் நிலையில் புற்றுநோயால் பாதிக்கப்படுதல் என்பது மிகப்பெரிய கொடுமை தான். அதுவும் அதை எதிர்த்துப் போராட தனக்கென்று மன பலமும், ஆல் பலமும் இல்லாமல் வேதனையோடு ஒவ்வொரு நிமிடங்களையும் கடப்பது கொடுமையிலும் கொடுமை தான். அதைத்தான் தற்போது சிந்துவும் அனுபவித்து வருகிறாராம். அவர் குழந்தையாக இருக்கும்போதே அவருடைய தந்தை சத்தியம் ஸ்டூடியோவில் மணிகளைப் கோர்க்கும் வேலை செய்து வந்தாராம் அதனால் இவருக்கும் குழந்தை நட்சத்திரமாக நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

சின்ன வயசிலே திருமணம்

சின்ன வயசிலே திருமணம்

குழந்தை நட்சத்திரமாக சினிமாக்களில் நடித்திருந்தாலும் இவருடைய வீட்டில் அப்போதே வறுமை தான் தலை விரித்து ஆடி இருந்ததாம். இவருடைய அம்மாவும் இவர் குழந்தையாக இருக்கும்போதே இறந்து விட்டாராம். அதனாலே இவருடைய தந்தை இவருக்கு 14 வயதில் திருமணம் செய்து முடித்து விட்டாராம். அதே வருடத்தில் இவரும் ஒரு குழந்தைக்கு அம்மாவாக மாறிவிட்டாராம். திருமணம் ஆன ஒரு சில நாட்களில் இருந்தே அவருடைய கணவரின் கொடுமை இவருக்கு அதிகமாக இருந்ததாக கூறி இருக்கிறார். குடித்துவிட்டு வந்து தினமும் அடித்து துன்புறுத்துவாராம். அதனால் இரண்டு வருடங்களில் மீண்டும் அவருடைய அப்பாவின் வீட்டிற்கே வந்து சேர்ந்து விட்டாராம்.

அங்காடித்தெரு சிந்து

அங்காடித்தெரு சிந்து

தன்னுடைய குழந்தையை வளர்ப்பதற்காக சிந்து பல திரைப்படங்களில் நடித்தும், ஹோட்டல், சித்தாள் போன்ற கிடைத்த வேலை எல்லாம் செய்து வந்திருக்கிறார். அந்த சமயத்தில் சிந்துவின் அப்பாவும் இறந்து விட்டாராம். திரைப்படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்து வந்த சிந்துவுக்கு பெரிய அளவில் பெயர் வாங்கி கொடுத்தது என்றால் அங்காடித்தெரு திரைப்படம் தான். இந்த திரைப்படத்தில் இவர் ஒரு விபச்சாரம் செய்யும் பெண்ணாக நடித்திருப்பார். அவர் குள்ள கணேஷை திருமணம் செய்து அவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்தது போல ஒரு சீன் இருக்கும் அதில் சிந்துவின் செண்டிமெண்ட் வசனம் பலருடைய மனதையும் கரைத்து இருந்தது என்று இப்ப வரைக்கும் அந்த திரைப்படத்தை பார்ப்பவர்கள் எல்லாம் கூறி வருகிறார்கள்.

 ஷகிலா செய்த உதவி

ஷகிலா செய்த உதவி

சிந்துவுக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாத நேரத்தில் அவர் ஹாஸ்பிடல் சென்று செக் பண்ணி பார்த்த போது தான் அவருக்கு புற்றுநோய் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. புற்று நோய்க்கான மருத்துவ செலவு அதிக அளவில் இருக்கும் என்பதால் இவருடைய கையில் இருந்த ஒரு சில சேமிப்புகளையும் ஹாஸ்பிடல் செலவுக்கே முடித்து விட்டாராம். அதற்குப் பிறகு எந்த பணமும் இல்லாமல் திரைத்துறையில் இருந்த பலரிடமும் இவர் உதவி கேட்டு சென்றிருக்கிறாராம். ஆனால் அவர்கள் எல்லாம் இல்லை என்ற ஒரே வார்த்தையை கூறி இருக்கிறார்களாம். அப்போது நடிகை சகிலா தான் இவரிடம் பேசி இவருக்காக ஒரு வீடியோவை வெளியிட்டாராம். அதற்கு பிறகு ரசிகர்கள் பிரபலங்கள் என ஒரு சிலர் இவருக்கு உதவி செய்திருக்கிறார்களாம்.

கண்ணீர் பதிவு

கண்ணீர் பதிவு

சிந்துவுக்கு புற்று நோய் கண்டறியப்பட்ட நேரத்தில் அவருடைய மகளும் அவரை விட்டு போய்விட்டார் என்ற செய்தியை அப்போது சிந்து கூறி இருந்தார். ஆனால் தற்போது மீண்டும் சிந்துவின் மகள் வந்து சேர்ந்திருக்கிறாராம். தற்போது கூட செலவுக்கும், வீட்டு வாடகை கொடுப்பதற்கும் கூட அதிகமாக கஷ்டமாக இருக்கிறது என்று கூறி இருக்கிறார். தன்னுடைய கஷ்டத்தை எந்த பெண்ணும் அனுபவித்து விடவே கூடாது என்று அவர் உருக்கமாக கூறியிருக்கிறார். புற்றுநோய் என்பது எவ்வளவு பெரிய கொடிய நோய் என்று கேள்விப்பட்டிருப்போம். அதோடு போராடி வருபவர்களுக்கு தான் அதன் வலியும், வேதனையும் புரியும். உடல் அளவிலும் மனதளவிலும் அந்த நோயின் தாக்கத்திலிருந்து விரைவில் சிந்து மீண்டு வர வேண்டும் என்று அவருடைய ரசிகர்கள் உருக்கமாக கூறி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+