வலிகளோடு வாழ்க்கை நடத்திய அங்காடி தெரு “சிந்து” காலமானார்.. கடைசி நேரத்தில் பிரபலம் வெளியிட்ட பதிவு
சென்னை: அங்காடித்தெரு திரைப்படத்தின் மூலமாக பரீட்சையமான சிந்து புற்றுநோயால் பாதிக்கப்பட்டு பல வருடங்களாக போராடி கொண்டு இருந்த நிலையில் இன்று அதிகாலை 2.15க்கு காலமானார்.
அது குறித்து நடிகர் கொட்டாங்குச்சி தன்னுடைய instagram பக்கத்தில் பதிவு வெளியிட்டு தன்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து இருக்கிறார்.

வலிகளோடு இத்தனை வருடங்களாக போராடிக் கொண்டிருந்த சிந்து ஆன்மா சாந்தியடைய வேண்டும் என்று பலரும் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.
பொதுவாக பலரும் சிறு தலைவலி, கால் வலி என்று துவண்டு போய்விடும் நிலையில் புற்று நோயால் பாதிக்கப்படுவது மிகப்பெரிய கொடுமை தான். அதுவும் அதை எதிர்த்து போராட தனக்கென்று மன பலத்தோடு, ஆள் பலம் இல்லாமல் அதை எதிர்த்துப் போராடுவது கொடுமையிலும் கொடுமைதான். அதைத்தான் இத்தனை வருடங்களாக நடிகை சிந்துவும் அனுபவித்து வந்தார்.
குழந்தையாக இருக்கும்போதே அவருடைய தந்தை சத்தியம் ஸ்டூடியோவில் மணிகளை கோர்க்கும் வேலை செய்து வந்த நிலையில் அங்கு சிந்துவும் சென்று இருக்கிறார். பிறகு குழந்தை நட்சத்திரமாக பல சினிமாக்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது.பல படங்களில் நடித்திருந்தாலும் வீட்டில் வறுமை தலைவிரித்து ஆடி இருக்கிறது. அதுவும் அம்மா இவர் குழந்தையாக இருக்கும் போது இறந்துவிட்டாராம்.
இதனால் அவருடைய தந்தை சிந்துவிற்கு 14 வயது இருக்கும் போது திருமணம் முடித்து வைத்து விட்டாராம். திருமணத்திற்கு பிறகு ஒரு குழந்தைக்கு அம்மாவாக மாறிய சிந்து திருமணம் ஆன சில நாட்களில் இருந்தே கணவரின் கொடுமையால் அதிகமாக கஷ்டங்களை அனுபவித்து இருந்தாராம். அவருடைய கணவர் குடித்துவிட்டு தினமும் வந்து அடித்து துன்புறுத்துவாராம்.
அதனால் இரண்டு வருடங்களில் தன்னுடைய அப்பா வீட்டுக்கு சிந்து போயிருக்கிறார். தன்னுடைய குழந்தையை வளர்ப்பதற்காக சிந்து பல திரைப்படங்களில் நடித்தும் ஹோட்டல், சித்தாள் போன்ற வேலை கிடைத்த வேலைகள் எல்லாம் செய்து வந்திருக்கிறார். அந்த சமயத்தில் சிந்துவின் அப்பாவும் இறந்து விட்டாராம். திரைப்படங்களில் சின்ன சின்ன கேரக்டரில் நடித்து வந்த சிந்துவுக்கு பெரிய அளவில் பெயர் வாங்கி கொடுத்தது என்றால் அங்காடி தெரு திரைப்படம் தான்.
இந்த திரைப்படத்தில் இவர் ஒரு விபச்சாரம் செய்யும் பெண்ணாக நடித்திருப்பார். இவரை கணேசன் திருமணம் செய்து அவருக்கு ஒரு குழந்தை பிறந்தது போன்று சீன் இருக்கும். அந்த நிலையில் சிந்து செண்டிமெண்ட் வசனம் பேசும் பலருடைய மனதையும் கரைத்து இருக்கும். இந்த நிலையில் சிந்துக்கு அடிக்கடி உடம்பு சரியில்லாமல் இருந்ததால் அவர் ஹாஸ்பிடலுக்கு சென்று செக் பண்ணி பார்த்தபோது அவருக்கு புற்றுநோய் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
புற்று நோய்க்கான மருத்துவ செலவு அதிகம் இருப்பதால் அவருடைய கையில் இருந்த பணம் சேமிப்பு எல்லாம் ஹாஸ்பிடல் செலவு செய்ய முடிந்துவிட்டது. பிறகு எந்த பணமும் இல்லாமல் திரை துறையில் பலருடைய உதவியை கேட்டு சென்றிருக்கிறார். ஒரு சிலர் அவருக்கு உதவிகளை செய்திருந்தாலும் பலர் கண்டுகொள்ளாமல் விலகிப் போய் இருக்கின்றனர். வலிகளோடு இத்தனை வருடங்களாகவே அதில் போராடிக் கொண்டிருந்த சிந்து இன்று அதிகாலை 2:15 மணி அளவில் இயற்கை எய்திருக்கிறார். அவருடைய ஆன்மா சாந்தி அடைய பலரும் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
அதைத்தொடர்ந்து இறந்த நடிகை சிந்துவின் உடலுக்கு அவருடைய நண்பர்களும், சினிமா பிரபலங்களும் அவருடைய வீட்டில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் இன்று மாலை விருகம்பாக்கத்தில் உள்ள இடுகாட்டில் அவருடைய உடல் தகனம் செய்யப்படும் என்று கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்து தெரிவித்து இருக்கின்றனர்.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி












Click it and Unblock the Notifications