தீபாவளி முடிஞ்சு 3 நாளுக்கு பிறகு கல்யாணம்.. அனிருத் 11:11 தேதியை செலக்ட் செய்தது ஏன்? இப்படி ஒரு விஷயமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: இசையமைப்பாளர் அனிருத் காவியா மாறன் கல்யாண புகைப்படங்கள் தான் இப்போ சோசியல் மீடியாவில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. கிரீஸ் நாட்டில் நவம்பர் 11ம் தேதி நெருங்கிய உறவினர்கள் மற்றும் பிரபலங்கள் முன்னிலையில் இவர்களுடைய திருமணம் நடைபெற்று இருக்கிறது. திருமண போட்டோக்களை அனிருத் வெளியிட்டு "My once in lifetime for your lifetime 11.11" என்று குறிப்பிட்டு இருந்தார். இதில் அவர் குறிப்பிடப்பட்டிருந்த 11:11 என்ற தேதியும் 11:11:11 என்ற எண்ணும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

Anirudh Kavya Maran Wedding Numerology

அனிருத் திருமணம்

அனிருத் கல்யாணத்தில் ரஜினிகாந்த், லதா ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ரஜினிகாந்த், மு க ஸ்டாலின், கலாநிதி மாறன், உதயநிதி ஸ்டாலின் முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டு இருக்கின்றனர். திருமண கொண்டாட்டங்கள் 2 நாட்களாக கிரீஸில் நடைபெற்று வருகிறது. நவம்பர் 21ஆம் தேதி சென்னையில் திருமண வரவேற்பு நடைபெற இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது ஒரு பக்கம் இருந்தாலும் அனிருத் தனது திருமண பதிவில் சொல்லியிருந்த 11:11 என்ற எண்ணை பார்த்தது இதற்கு பின்னால் ஏதாவது காரணம் இருக்கிறதா? என்று பலரும் பேச ஆரம்பித்து விட்டனர்.

Anirudh Kavya Maran Wedding Numerology

எண் கணிதம்

குறிப்பாக எண் கணித நம்பிக்கையில் 11:11 என்பது மாஸ்டர் நம்பர் என்று அழைக்கப்படுகிறது. இந்த எண்ணம், உள் உணர்வு, ஆன்மீக விழிப்புணர்வு புதிய தொடக்கம் மற்றும் நேர்மையான மாற்றங்களுடன் தொடர்புபடுத்தி பார்க்கிறார்கள். அதுபோல 11: 11 என்ற நேரத்தை பார்க்கும்போது பலரும் தங்களுடைய விருப்பத்தை மனதில் நினைத்துக் கொள்வார்கள். அந்த நேரத்தில் வேண்டிக் கொண்டால் நினைத்தது நடக்கும் என்ற நம்பிக்கையும் சிலரிடம் இருக்கிறது. இதன் காரணமாகவே 11:11 போன்ற தேதியில் திருமணம், நிச்சயதார்த்தம் உள்ளிட்ட முக்கியமான நிகழ்வுகளுக்கு சிலரால் விரும்பி தேர்வு செய்யப்படுகிறது.

Anirudh Kavya Maran Wedding Numerology

அனிருத் காவியா கல்யாணத்திலும் இந்த எண் முக்கியமாக இடம் பெற்று இருப்பதால் எண் கணித நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டு இந்த தேதியை தேர்வு செய்தார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் இந்த தேதியை தேர்வு செய்ததற்கான குறிப்பிட்ட காரணத்தை அனிருத் அல்லது காவியா இதுவரை வெளிப்படையாக சொல்லவில்லை. இந்த திருமணத்தில் இன்னொரு சுவாரசியமான விஷயமும் இருக்கிறது.

Anirudh Kavya Maran Wedding Numerology

தலை தீபாவளி

இந்த ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி தீபாவளி கொண்டாடப்பட்டது. அதற்கு 3 நாட்கள் கழித்து தான் நவம்பர் 11ஆம் தேதி அனிருத் காவியா கல்யாணம் நடந்திருக்கிறது. அதாவது இந்த ஆண்டு தீபாவளி முடிந்த பிறகு தான் இருவரும் திருமண வாழ்க்கையில் இணைந்து இருக்கிறார்கள். பொதுவாக திருமணத்திற்கு பிறகு வரும் முதல் தீபாவளி தலை தீபாவளியாக கொண்டாடுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு தீபாவளி முடிந்து விட்டதால் அனிருத் காவியா தங்களுடைய தலை தீபாவளியை அடுத்த வருஷம் தான் கொண்டாட போகிறார்கள். அதனால் நெட்டிசன்கள் போன வாரமே கல்யாணத்தை செய்து இருந்தால் இந்த வருஷமே நீங்க தலை தீபாவளி கொண்டாடி இருக்கலாமே என்று ஜாலியாக கமெண்ட் கொடுத்து வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+