ஆம்பள புள்ள வேணும்னு தவமிருந்து பெத்த குழந்தை.. அவங்களால இறந்துட்டு! அனிதா குப்புசாமி எமோஷனல்
சென்னை: நாட்டுப்புற பாடகியான அனிதா குப்புசாமி தனக்கு ஒரு மகன் பிறந்து இறந்தது குறித்து கண்கலங்க பேசியிருக்கும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அனிதா குப்புசாமிக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கும் நிலையில் அவர் ஒரு ஆண் குழந்தை வேண்டும் என்று கடவுளிடம் வேண்டிக் கொண்டிருந்த நிலையில் பிறந்த குழந்தை மருத்துவர்களின் அலட்சியத்தால் இறந்துவிட்டது என்று கண்ணீரோடு கூறி இருக்கிறார்.
நாட்டுப்புற பாடகர் ஆகவும் பின்னணி பாடகர்கள் ஆகவும் வலம் வருபவர்கள் தான் புஷ்பவனம் குப்புசாமி மற்றும் அனிதா தம்பதி. இவர்கள் இருவரும் நாட்டுப்புற இசையின் மூலமாக அதிகமான ரசிகர்களை கவர்ந்திருக்கின்றனர். அது மட்டும் இல்லாமல் புஷ்பவனம் குப்புசாமி தமிழக அரசின் கலைமாமணி விருதையும் பெற்றிருக்கிறார்.

அதோடு சென்னை பல்கலைக்கழகத்தில் இவர்கள் இருவரும் சேர்ந்து படிக்கும் போது பல்வேறு போட்டிகளிலும் கச்சேரிகளிலும் ஒன்றாக பாடி இருக்கிறார்கள். அப்போதுதான் இவர்கள் இருவருக்கும் காதல் ஏற்பட்டதாம். பிறகு வீட்டின் எதிர்ப்பையும் மீறி இவர்கள் திருமணம் செய்து இருக்கின்றனர். திருமணத்திற்கு பிறகு பண ரீதியாக அதிகமான கஷ்டப்பட்டு இருந்தாலும் தங்களுடைய காதல் குறைந்ததில்லை என்று அனிதா குப்புசாமி பல இடங்களில் கூறியிருக்கிறார்.
அதை தொடர்ந்து இப்போது அவர்களுக்கு சினிமா மேடை நிகழ்ச்சிகள், டிவி நிகழ்ச்சிகள் என்று பாடல்களை பாட வாய்ப்பு கிடைத்து இவர்கள் இந்தியாவில் மட்டுமல்லாமல் இப்போது உலக அளவிலும் பல இசைக்கச்சேரிகளை நடத்திக் கொண்டிருக்கின்றனர். அதே நேரத்தில் தங்களுடைய பாடல்கள் மூலமாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் சமீபத்தில் அனிதா குப்புசாமி யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கியிருக்கிறார். அதில் மாடித்தோட்டம், பூஜை அறை, சமையல் குறிப்பு போன்ற பலவற்றையும் வீடியோவாக வெளியிட்டுக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் தன்னுடைய வாழ்க்கையில் தன்னால் மறக்க முடியாத சில நினைவுகள் குறித்தும் பேசி இருக்கிறார். அதில் அவர் பேசுகையில் எனக்கு பல்லவி, மேகா என்ற இரண்டு மகள்கள் இருக்கின்றனர்.
ஆனால் பல்லவி பிறந்த பிறகு எனக்கு ஆண் குழந்தை வேண்டும் என்று கடவுளிடம் வேண்டிக் கொண்டிருந்த நேரம்தான் நான் கர்ப்பமானேன். பிறகு நான் நினைத்த மாதிரியே எனக்கு ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்தது அந்த குழந்தையின் முகம் அவ்வளவு வசீகரமாக இருந்தது. ஆனால் குழந்தை பிறந்த 24 மணி நேரத்தில் நான் மயக்கமாக இருந்த போது டாக்டர்கள் ஏதோ தவறான ஒரு ஊசியை போட்டு விட்டார்கள்.

அதனால் நன்றாக இருந்த குழந்தை நெஞ்செல்லாம் எரிந்து இறந்து போய்விட்டது என்று அந்த பேட்டியில் கண் கலங்கி அழுதவாறு பேசியிருக்கிறார். இந்த வீடியோவிற்கு ரசிகர்கள் ஆறுதல் கூறி வருகிறார்கள். அதே நேரத்தில் அனிதா குப்புசாமி தம்பதியினரின் இரண்டு மகள்களில் பல்லவிக்கு கடந்த ஆண்டுதான் கௌதம் ராஜேந்திர பிரசாத்தோடு திருமணம் நடைபெற்று இருந்த நிலையில் பலரும் வாழ்த்துக்கள் கூறி வந்தனர். அதுபோல பல்லவி பல் மருத்துவராகவும் இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
பிரச்சனை இருந்தது.. விட்டு கொடுக்க மனசு இல்ல.. ஆனாலும், கருப்பு படம் குறித்து நடிகர் இந்திரன்ஸ் உருக்கம் -
பொற்காலம் படத்தில் முரளியின் தங்கச்சியாக நடித்த நடிகை மரணம்.. இப்படியா நடக்கணும்? கலங்கி நிற்கும் குடும்பம் -
இந்த வார இறுதியில் ஓடிடியில் என்ன பார்க்கலாம்? ‘வாரண்ட்’ சீரிஸ் விமர்சனம்! விலங்கு கொடுத்த அதே தரமா? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி?











Click it and Unblock the Notifications