சும்மாவே இருக்க மாட்டேங்குறாரு இந்த வேல்முருகன்.. கதறிக் கதறி அழுத அனிதா சம்பத்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் வீடு ஒரே சண்டையும் சச்சரவும், அழுகையுமாக போய்க் கொண்டுள்ளது. இதுவரை காதல் ஏதும் பூக்கவில்லை. மாறாக கலகங்கள்தான் அதிகமாக இருக்கிறது.

வழக்கத்தை விட பிக் பாஸ் ஹவுஸ் இந்த முறை ரொம்பவே சூடாக காணப்படுகிறது. அவருக்கும் இவருக்கும் சண்டை.. இவருக்கும் அவருக்கும் மோதல் என்றுதான் போய்க் கொண்டுள்ளது.

வழக்கமாக பூத்துக் குலுங்கும் காதல் பூ இந்த முறை இன்னும் மலராமல் உள்ளது. ஏன் என்றுதான் புரியவில்லை. இத்தனைக்கும் ஷிவானி இருக்கிறார்.. சனம் இருக்கிறார்.. ஆனால் காதல் மணம் வீசாமல் கமுக்கமாக இருக்கிறது.

சண்டைகள் அழுகாச்சிகள்

சண்டைகள் அழுகாச்சிகள்

பிக்பாஸ் வீட்டிற்குள் காரசாரமாக போய்க்கொண்டிருந்த சண்டை நிகழ்ச்சியில் அழுகைக்கும் பஞ்சமில்லாமல் தான் போய்க் கொண்டிருந்தது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத அளவில் வேஷம் போடாதே அனிதாவின் அழுகை தற்போது வைரலாகி வருகிறது. பிக்பாஸ் வீட்டிற்குள் டிவி செல்போன்கள் எதுவும் இல்லாததால் அவ்வபோது வேல்முருகன் பாட்டுப்பாடி அங்கு இருப்பவர்களை உற்சாகப்படுத்தி கவலைகளை நீக்கியும் கொண்டிருந்தார்.

குமுறி அழுத அனிதா

குமுறி அழுத அனிதா

தற்போது அவர் அந்த வீட்டிற்குள் இரவு நேரத்தில் பாடிய பாடலை கேட்டு அனிதா சம்பத் கதறி அழுத வீடியோஸ் வைரலாகி வருகிறது. இந்த பாடலுக்கு அவருக்கு மட்டுமல்ல ரசிகர்களுக்கும் கூட அழுகை வந்திருக்கிறதாம். அந்த அளவிற்கு மனதை உருக்கமாக அவர் பாடி இருக்கிறார். பல நேரங்களில் அனிதா சம்பத் தன்னுடைய கடந்த காலங்களைப் பற்றி பேசும் போது உணர்ச்சிவசப்பட்டு அழுது இருக்கிறார் .

 கஷ்ட ஜீவனம்

கஷ்ட ஜீவனம்

அனிதா சம்பத் அவ்வளவு கஷ்டப்பட்டு இருக்கிறார் என்று அவருடைய ரசிகர்களும் அவருக்கு ஆதரவு தெரிவித்து வந்தனர் . அவர் சிறு வயதில் இருந்தே பண கஷ்டத்தால் ரொம்பவே கஷ்டப்பட்டு தன்னுடைய குடும்பத்தை இவர் வேலை செய்துதான் வழி நடத்தி வந்திருக்கிறார் . அதை பல நிகழ்ச்சிகளில் கூறியிருக்கிறார். தற்போதுகூட பிக்பாஸ் வீட்டிற்குள்ளும் அவர்களுடைய கடந்த கால வாழ்க்கையையும் தற்போது இந்த வீட்டிற்குள் வருவதற்கான காரணத்தையும் கூறும் போது கூட இவர் இளம் வயதில் தான் பட்ட கஷ்டங்களை அவ்வளவு எமோஷனலாக கூறியிருந்தார்.

தியாகம்

தியாகம்

சாப்பாடு கூட ஒரு வேளை உண்ணாமல் அந்த காசை அம்மாவிடம் கொடுத்து இருப்பதாகவும் , டிக்கெட் குறைந்த பஸ்ஸில் செல்வதற்காக மணிக்கணக்கில் காத்திருந்து தான் அலுவலகத்திற்கு சென்றதாகவும் கூறி இருந்தார் . பிக்பாஸ் வீட்டிற்குள் மட்டுமல்லாமல் பல நிகழ்ச்சிகளில் இன்டர்வியூலயும் இதை வெளிப்படையாக சொல்லியிருக்கிறார். அவ்ளோ கஷ்டப்பட்டுதான் வளர்ந்ததாகவும் அந்த கஷ்ட காலங்களில் தன்னுடன் கூட இருந்தவரை தான் காதலித்து திருமணம் செய்து கொண்டதாகவும் கூறியிருந்தார்.

பெரும் ரசிகர்கள்

பெரும் ரசிகர்கள்

ரசிகர்களின் மனதில் நல்ல இடத்தில் இருந்து வரும்அனிதா சம்பத்துக்கு பெரும் ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இந்த வீட்டிற்குள் வந்த பிறகு அவருக்கும் சுரேஷ் சக்கரவர்த்திக்கும் அடிக்கடி சண்டை வந்து கொண்டே இருக்கிறது .அவருடைய ரசிகர்கள் சுரேஷ் சக்கரவர்த்தியை கலாய்த்து தள்ளிக் கொண்டிருக்கிறார்கள். அது மட்டுமல்லாமல் சில இடங்களில் இவர் எதற்கெடுத்தாலும் அழுது கொண்டிருக்கிறார். இவர் இவ்வளவு கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்து இருந்தாலும் இன்னும் மெச்சூர் ஆகவில்லை அப்படி என்று இவரைப் பற்றியும் சில ரசிகர்கள் பேசி வந்து கொண்டிருக்கிறார்கள்.

 உருக வைத்த வேல்முருகன்

உருக வைத்த வேல்முருகன்

ஆனால் தற்போது வேல்முருகன் பாடிய பாடலை கேட்டதும் புல் தரையில் படுத்துக் கொண்டிருந்த அனிதா சம்பத் கதறி அழுததை பார்த்து ரசிகர்கள் எல்லோருமே இது அவருடைய வாழ்க்கையை உள்ளதை அப்படியே வேல்முருகன் பாடியதால்தான் இவர் அழுகிறார். இந்த பாடலை கேட்டு அனைவருக்குமே அழுகை வந்துவிடும் என்று கூறியிருக்கிறார்கள். அந்தப் பாடல் "அன்புள்ளம் கொண்ட அம்மாவுக்கு மகன் எழுதும் கடிதம் ஏதோ நான் கிடக்கிறேன் உருப்படியா படிக்கிறேன் யாருமில்லா நமக்கு இனி எப்படி இருக்குன்னு நினைக்கிறேன் அன்புள்ளம் கொண்ட அம்மாவுக்கு மகன் எழுதும் கடிதம் விடுதி சோறு குழம்புன்ணு வீதியிலே கொட்டுராங்க விடுதி சோறு குழம்பு ன்னு வீதியிலே கொட்டுறாங்க நான் மட்டும் தம்பிக்கு ஊட்டுரேன்ணு நெனப்பில் அழுது கிட்டே திண்ணுகிறேன்".

கதறிக் கதறி அழுதார்

கதறிக் கதறி அழுதார்

இதைக்கேட்டதும் புல் தரையில் படுத்துக் கொண்டிருந்த அனிதா சம்பத் முகத்தை மூடி கதறி அழுது கொண்டிருக்கிறார். இவர் அழுததைப் பார்த்து ரியோ வேல்முருகன் எல்லோரும் போய் அவரை தூக்கி ஆறுதல் கூறினாலும் அவர் அழுது கொண்டே இருக்கிறார். இந்த வீடியோவை பார்த்ததும் அவருடைய ரசிகர்களும் அவரின் வேதனைகளை நன்றாக புரிந்து கொண்டு அவருக்கு ஆதரவாக கமெண்டுகளை போட்டு வருகிறார்கள். இப்படியே அழுதுட்டே இருந்தா எப்படி அனிதா.. வெளியில் வாங்க.. தன்னம்பிக்கைதான் எப்பவும் ஜெயிக்கும்.. கமான் அனிதா. கமான்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+