அனிதா எவ்வளவு அழகு பாருங்க.. பக்கத்தில் யாருன்னு கவனிச்சீங்களா...!
சென்னை : ஐந்து வருடத்திற்கு முன்பு தன்னுடைய கணவருடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்ட அனிதா சம்பத்தைப் பார்த்து அக்கா நீங்களா இது என்று ரசிகர்கள் ஆச்சரியம் காட்டி வருகின்றனர்.
குறையாத காதலோடு மலரும் நினைவுகளோடு வலம்வரும் அனிதா சம்பத்தின் போட்டோஸ்கள் தான் இப்போது இன்ஸ்டாகிராமில் செம வைரலாக சுற்றிக்கொண்டிருக்கிறது. சும்மாவே அனிதாவுக்காக ரசிகர்கள் ஓடி வருவார்கள்
இப்போது அவர் போட்டுள்ள அந்த பழைய காலத்து போட்டோவைப் பார்த்து அக்கா அக்கா என்று பாசத்தைக் கொட்டிக் குவிக்கின்றனர். அப்பவே இவங்க இப்படித்தானா என்று ரசிகர்களும் தங்களுடைய கருத்துக்களை பகிரங்கமாக வெளியிட்டு வருகின்றனர்.

மீண்டும் மீண்டும் பார்க்கும் அழகுதான்
தானும் தன்னுடைய ஆசைக்கணவரும் ஒன்றாக வேலை செய்யும் போது எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறார் அனிதா சம்பத். இவர் செய்தியாளராக பலருக்கும் தெரிந்திருந்தாலும் தற்போது நடிகையாகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார். நாட்டு நடப்புகளை தன்னுடைய துல்லியமான தமிழ் பேச்சால் ரசிகர்களுக்கு தெளிவாக புரியும்படி எடுத்துரைப்பதில் சிறந்தவர்தான் அனிதா சம்பத். இவருடயை தமிழ் மிகமிக ரசிக்கும்படியாகவே இருக்கும். அதை விட இவரது புன்னகைக்கு ஈடு இணையே கிடையாது. அப்படி க்யூட்டாக இருக்கும்.

பிக் பாஸ் வீட்டுக்குள்ள கெத்து தான்
இவர் செய்தியாளர் என்பதையும் தாண்டி நடிகையாகவும், பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரு கன்டஸ்டன்டாக கலந்து கொண்ட பிறகு ரசிகர்களின் மத்தியில் நன்றாகவே அறிமுகமாகி விட்டார். தன்னுடைய படபடப்பான பேச்சாலும் எதற்கும் பயப்படாத குணத்தையும் அனைவரையும் விடவும் இவர் தனித்துவமாக இருக்கிறார். இதனாலேயே இவருக்கு ரசிகர்கள் அதிகமாகி விட்டனர். இவர் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருக்கும்போது அவருடன் கலந்து கொண்ட மொட்டை சுரேஷ் எனப்படும் சுரேஷ் சக்கரவர்த்தியுடன் ஏற்பட்ட பிரச்சனைகள் பூதாகரமாக சமூக வலைத்தளத்தில் வெடித்து கிளம்பியது.

தனித்துவமான திறமைதான்
இவர் எந்த சூழ்நிலையும் யாருடைய சாயலும் இல்லாமல் தன்னுடைய கேரக்டரில் விடாப்பிடியாக பிடிவாதமாக இருந்து கொண்டிருப்பதை பார்த்து சிலர் நெகட்டிவ் கமெண்டுகளை போட்டு வந்தாலும் அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் தனக்கு ஆதரவு தந்து ரசிக்கும் ரசிகர்களை மட்டுமே பின் தொடர்ந்து கொண்டிருக்கிறார். இவர் இந்த அளவிற்கு வெற்றி பெற்றதற்கு தன்னுடைய தைரியம் ,முயற்சி மட்டுமல்லாமல் காதலும் என்று அடிக்கடி கூறியிருக்கிறார். அது அனைவருக்குமே தெரியும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கூட தன்னுடைய காதல் கணவர் மீது அவர் வைத்திருக்கும் பாசத்தை வெளிப்படையாக வெளிக்காட்டி இருந்தார்.

தினம்தினம் அதிகரிக்கும் காதல்
அதுமட்டுமல்லாமல் எந்த ஒரு இன்டர்வியூ நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டிருந்தாலும் அதில் அவருடைய கணவரான பிரபாவை பற்றி பேசும்போது குரல் தழுதழுத்து உணர்ச்சி வசப்பட்டு விடுவார். இதைப் பார்த்து பல ரசிகர்கள் இவருக்கு ஆறுதல் கொடுப்பதிலும் தவறுவதில்லை. இப்போ தன்னுடைய இன்ஸ்டாகிராமில் ஒரு போஸ்ட் போட்டிருக்கிறார். அதுதான் வைரலாக வலம் வருகிறது. 2016 அக்டோபர் 20அன்று இவர்கள் இருவரும் நியூஸ் 7 தமிழில் ஒன்றாக வேலை செய்யும் போது எடுத்த போட்டோஸ் என்று கேப்ஷன் கொடுத்திருக்கிறார். அப்போது பிரபா அங்கு கிராபிக் டிசைனராக வேலை செய்திருந்தாராம்.

காதலால் கையை கட்டி விட்டாரே
அந்த போட்டோவில் பிரபா பக்கத்து சீட்டில் அமர்ந்தபடி வாயில் கையை வைத்து போட்டோக்கு போஸ் கொடுக்க அனிதா சம்பத் அழகு தேவதையாக குட்டி பெண் போல தனக்கே உரிய சாந்தமான சிரிப்பால் மனதை கவர்ந்து இழுத்து இருக்கிறார். இந்த போட்டோவை பார்த்ததும் அனிதாவின் ரசிகர்கள் குழந்தைகள் மாதிரி இருக்கீங்க அக்கா என்று கொஞ்சி வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் இன்னொரு ரசிகர் அனிதா அழகான, அறிவான, அற்புதமான பெண் .வாழ்த்துக்கள் கண்ணு குட்டி ,செல்ல குட்டி ,எப்பவும் சந்தோசமா பிரபாவுடன் பிரபஞ்சத்தில் வாழ வாழ்த்துக்கள் தங்கமே என்று ஆசீர்வாதத்தை பூப்போல பொழிகின்றனர்.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங்












Click it and Unblock the Notifications