அப்பா உடல் பக்கத்தில் இருந்தப்ப! ஒருத்தன் போன் செஞ்சு நீ சாகலையானு கேட்டான்! அனிதா சம்பத் கண்ணீர்
சென்னை: அப்பா இறந்தப்ப அவருடைய உடல் பக்கத்தில் உட்கார்ந்திருந்த போது நீ சாவலையான்னு கேட்டார்கள் என பிக்பாஸ் போட்டியாளரும் செய்தி வாசிப்பாளருமான அனிதா சம்பத் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.
சன் டிவியில் செய்தி வாசிப்பாளராக அறிமுகமாகி பிரபலமானவர் அனிதா சம்பத். இவருக்கு இளைஞர்கள் நிறைய பேர் ரசிகர்களாக இருக்கிறார்கள். விஜய் நடிப்பில் வெளியான சர்க்கார் படத்தில் கூட இவர் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அது போல் சூர்யாவின் காப்பான், ரஜினியின் தர்பார் உள்ளிட்ட படங்களிலும் நடித்திருந்தார். இதன் மூலம் இவருக்கு என தனி ரசிகர் பட்டாளமே உள்ளனர். இந்த நிலையில்தான் அனிதா சம்பத் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
எத்தனை ரசிகர்களின் அன்பை அவர் சம்பாதித்து வைத்திருந்தாரோ அவர்களின் வெறுப்பை எல்லாம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அனிதா சம்பத் இழந்துவிட்டார். இதனால் அவர் 80 நாட்களுக்கு பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார். இதைத் தொடர்ந்து அனிதாவுக்கு பட வாய்ப்புகள் வருகின்றன. விளம்பரங்களிலும் நடித்து வருகிறார்.
அவர் ஒரு வீட்டை கூட கட்டியுள்ளார். யூடியூப் சேனலையும் நடத்தி வருகிறார். இவருக்கு தனது தாய், தந்தை என்றால் மிகவும் உயிர். இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து அனிதா வெளியே வந்ததும் தனது தந்தையை பார்க்க ஆவலாக போனார். ஆனால் அவர் கோயிலுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பும் வழியில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது.
இதையடுத்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி அனிதாவின் தந்தை உயிரிழந்தார். இந்த சம்பவம் அனிதா சம்பத்தை முடக்கி போட்டது. அவர் ஒரு பேட்டியில் கூறியிருப்பதாவது: பிக்பாஸுக்கு பின்னர் என் நிம்மதியே போய்விட்டது. என் அப்பா இறந்ததும் நான் தூக்கத்தை இழந்துவிட்டேன்.
இதனால் ஒரு ஆண்டு வரை தூக்க மாத்திரை போட்டுக் கொண்டுதான் தூங்கினேன். சில சமயங்களில் தற்கொலை முயற்சி கூட செய்திருக்கிறேன். என் அம்மா நான் படிப்பதற்காக தனது தாலி செயினை அடகு வைத்திருந்தார். அதை அவருக்கு வாங்கிக் கொடுக்க ஆசைப்பட்டேன். ஆனால் அதற்குள் என் தந்தை இறந்துவிட்டார்.
என் வாழ்க்கையில் சிரிப்பு என்பதே போய்விட்டது. என் அப்பா இறந்தப்ப எனக்கு போன் செய்து எப்படி நீ உயிரோடு இருக்கேன்னு சிலர் கேட்டானுங்க, பிறகு என் அண்ணன திட்டினல்ல உங்கள் அப்பா போனது சரிதான் என்றெல்லாம் என்னை திட்டி தீர்த்தனர். இவ்வாறு அனிதா சம்பத் கண்ணீர் மல்க தெரிவித்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications