இழந்த என் சிரிப்பை மீட்டு தந்ததற்கு நன்றி.. அனிதா சம்பத் வெளியிட்ட பதிவு.. குவியும் வாழ்த்துக்கள்
சென்னை: செய்தி வாசிப்பாளராக பிரபலமான அனிதா சம்பத் இப்போது நடிகையாக பல திரைப்படங்களிலும் சீரியல்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் இன்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு நெகிழ்ச்சியான பதிவு ஒன்று வெளியிட்டு இருக்கிறார். தன்னுடைய தோழிகளோடு தான் வெளியே அவுட்டிங் போயிருக்கும் இடத்தில் எடுத்த வீடியோக்களை அதில் பகிர்ந்து தன்னுடைய "இழந்த மகிழ்ச்சியை திருப்பி தந்ததற்கு நன்றி" என்று அவர் பதிவிட்டு இருக்கிறார்.
தனியார் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பல வருடங்களாக பணியாற்றிய அனிதா சம்பத் விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பட்டி தொட்டி எல்லாம் பிரபலம் அடைந்து விட்டார். ஆரம்பத்திலேயே அனிதா சம்பத்திற்கு அதிகமான ரசிகர்கள் ஃபேன்ஸ் பேஜ் தொடங்கி விட்டனர். நிகழ்ச்சி தொடங்கிய பிறகு அனிதா சம்பத் அந்த நிகழ்ச்சியில்
ஆரம்பத்தில் சுரேஷ் சக்கரவர்த்தியோடு சண்டை போட்டு பெரிய அளவில் அவர் மீது கவனத்தை திருப்பி இருந்தார்.

அதற்கு பிறகு நல்ல படியாக தான் அவருடைய நடவடிக்கைகள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்தது. ஆனால் சில வாரங்கள் கழித்து ஆரியோடு அனிதாவிற்கு ஏற்பட்ட வாக்குவாதம் ரசிகர்கள் மத்தியில் அவருக்கு நெகட்டிவ் இமேஜை உருவாக்கியது. அதோடு பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் இருக்கும்போது தன்னுடைய கணவர் பற்றியும் தன்னுடைய தந்தை குறித்தும் அடிக்கடி அனிதா பேசிக் கொண்டிருந்தது ரசிகர்கள் மத்தியில் சலிப்பை ஏற்படுத்தி இருந்தது.
ஒரு சிலர் அவருடைய காதலை பாராட்டி வந்திருந்தாலும், பல இடங்களில் தன்னுடைய கஷ்டப்பட்ட காலங்களை மட்டுமே அனிதா சம்பத் சொல்லிக் கொண்டிருந்ததை சிலர் விமர்சித்தும் வந்தனர். இதனாலேயே அனிதா சம்பத் எவ்வளவு பாசிடிவ் ரசிகர்களை பெற்றிருந்தாரோ அதே அளவிற்கு நெகட்டிவ் ரசிகர்களையும் பெற்றிருந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்ததுமே அனிதா நிஜ வாழ்க்கையில் பெரிய அதிர்ச்சி அவருக்கு காத்திருந்தது.
அப்பா இறந்த பிறகு ஒரு "பட்டாம்பூச்சி" அமானுஷ்யம்.. அனிதா சம்பத் உருக்கமாக வெளியிட்ட திடீர் போஸ்ட்
அவருடைய தந்தை பெங்களூருக்கு சாய்பாபா தரிசனத்திற்கு சென்றிருந்த நிலையில் ட்ரெயினில் வரும்போது மாரடைப்பால் ட்ரெயினில் இறந்து விட்டார். இந்த செய்தி அனிதா சம்பத்தை பெரிய அளவில் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அந்த சோகத்தில் இருந்து நான் இப்ப வரைக்கும் வெளியே வரவில்லை என்று பல இடங்களில் அனிதா சம்பத் கூறி இருக்கிறார். அதே நேரத்தில் தன்னுடைய வேலைகளிலும் கவனத்தை செலுத்தி வருகிறார்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அவருக்கு ஒரு சில திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. தங்கையாகவும் முக்கிய கேரக்டரிலும் தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கும் அனிதா சம்பத் சின்னத்திரையையும் விட்டு வைக்காமல் அதிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் கூட பாக்கியலட்சுமி சீரியலில் தொகுப்பாளராக கலந்து கொண்டு இருந்தார்.
அதுபோல ஜீ தமிழிலும் அதிகமான சீரியல்களில் ஹெஸ்ட் ரோலில் அடிக்கடி என்ட்ரி கொடுத்து கொண்டிருக்கிறார். இந்த நிலையில் இன்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டு இருக்கிறார். அதில் வெயில் திரைப்படத்தில் இடம்பெற்ற "வெயிலோடு விளையாடு" என்ற பாடலுக்கு வரும் காட்சிகளைப் போலவே தன்னுடைய தோழிகளோடு கிராமத்திற்கு சென்று அங்கு வயலில் பம்பு செட்டில் குளியல், மாட்டு வண்டி பயணம், மண் சட்டி செய்வது போன்ற பல விளையாட்டு மற்றும் வேடிக்கைகளில் ஈடுபட்டு அதை வீடியோக்களாக எடுத்து தன்னுடைய instagram பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.
அந்த பதிவிற்கு நான் இவ்வளவு சந்தோசமாக இருந்தேனா? என்பது எனக்கே இந்த வீடியோவை எடிட் செய்யும்போது தான் தெரிகிறது. என்னுடைய இழந்து போன சந்தோஷத்தை மீண்டு கொண்டு வந்த என்னுடைய தோழிகளுக்கு நன்றி என்று அந்த பதிவில் அனிதா சம்பத் பகிர்ந்திருக்கும் நிலையில் அனிதா சொன்னது போல நாங்களும் எங்களுடைய 90ஸ் வாழ்க்கையை மிஸ் பண்ணி இருக்கிறோம் என்று பலர் கருத்து கூறி வருகிறார்கள். இன்னும் ஒரு சிலர் அனிதா சம்பத் பழைய நிலையில் மீண்டும் சந்தோஷமாக எப்போதுமே இருக்க வேண்டும் என்றும் அவருக்கு கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications