அப்பாவின் பிறந்தநாளில் சர்ப்ரைஸ்.. பல நாள் கண்ட கனவு நிறைவேறியது! அனிதா சம்பத் உருக்கம்
சென்னை: அனிதா சம்பத் ஆரம்பத்தில் செய்தி வாசிப்பாளராக அறிமுகம் ஆகி தற்போது நடிகையாகவும், தொகுப்பாளினியாகவும் கலக்கிக் கொண்டிருக்கிறார். அதே நேரத்தில் அவர் இன்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமாக வெளியிட்ட வீடியோ இணையத்தில் அதிகமான கமெண்ட் பெற்று வருகிறது. தன்னுடைய தந்தையின் பிறந்த நாளில் தான் தன்னுடைய அம்மாவுக்கு கொடுத்த சர்ப்ரைஸ் குறித்து அந்த வீடியோவில் பேசியிருக்கிறார்.
பொதுவாக நடுத்தர வர்க்கத்தில் இருப்பவர்களுக்கும் அதற்கு கீழே இருப்பவர்களுக்கும் எந்த விஷயமும் எளிதாக நடந்து விடாது. ஒரு சின்ன விஷயமாக கூட பெரிய போராட்டத்திற்கு பிறகு தான் கிடைக்கும். அதுபோல ஆரம்பத்தில் இருந்தே அதிகமாக கஷ்டப்பட்டு இன்று தனக்குன்னு ஒரு நிலையை உருவாக்கிய அனிதா சம்பத் சின்னத்திரை மற்றும் வெள்ளி திரை ரசிகர்கள் பலருக்கும் பரிச்சயம் ஆனவர்தான்.

அம்மாவிற்கு கொடுத்த சர்ப்ரைஸ்
அதேபோல சமூக வலைதளத்திலும் செம ஆக்டிவாக இருக்கிறார். தன்னுடைய youtube சேனல்களில் தான் செய்யும் சின்ன சின்ன வேலைகளையும் வீடியோக்களாக வெளியிட்டுக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் தன்னுடைய தந்தையின் பிறந்த நாளில் தான் தன்னுடைய அம்மாவிற்கு கொடுத்த சர்ப்ரைஸ் குறித்து ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.
செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத்
அனிதா சம்பத் செய்தி வாசிப்பாளராக சின்னத்திரையில் அறிமுகமானார். அதற்கு பிறகு அவருக்கு பெரிய பிரபலத்தை கொடுத்தது பிக் பாஸ் நிகழ்ச்சி தான். பிக் பாஸ் நிகழ்ச்சியில் தன்னுடைய காதல் கணவர் பிரபா குறித்து அடிக்கடி பேசிக்கொண்டே இருந்தார். அதுபோல தன்னுடைய அம்மா, அப்பா தனக்காகப்பட்ட கஷ்டங்கள் அவர்களை வாழ்க்கையில் மாற்றம் ஏற்படுத்துவதற்காக தான் பட்ட கஷ்டம் என்று பல இடங்களில் பேசுகிறார்.

பிக் பாஸ் போட்டியாளர்
அதே நேரத்தில் அனிதா சம்பத் பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த நேரத்தில் அவருடைய தந்தை புனித யாத்திரைக்கு சென்று வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது ட்ரெயினில் வரும்போது மாரடைப்பால் காலமாகிவிட்டார். தன்னுடைய தந்தையின் முகத்தை தான் பார்க்கவில்லை என்று அவர் கதறி அழுத வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வந்தது.

இரண்டாவது புதிய வீடு
அதுபோல தன்னுடைய தந்தை குறித்து பல இடங்களில் அனிதா சம்பத் பேசி இருக்கிறார். தற்போது தந்தையின் பிறந்த நாளில் தன்னுடைய அம்மாவிற்கு தான் புதியதாக வாங்கிய வீட்டின் சாவியை கொடுத்து அம்மாவிடம் அனிதா சம்பத் ஆசிர்வாதம் வாங்கி இருக்கிறார். இதற்கு முன்பு ஒவ்வொரு வருஷமும் தன்னுடைய தந்தையின் பிறந்த நாளில் குடும்பத்தில் யாருக்காவது ஏதாவது கிப்ட் கொடுத்துக் கொண்டே இருப்பாராம்.
அப்பாவிற்காக கிப்ட்
கடந்த பிறந்தநாளில் அவருடைய பாட்டிக்காக கிப்ட் கொடுத்தாராம். அதுபோல அப்பாவின் ஒவ்வொரு பிறந்தநாளிலும் நான் என்னுடைய குடும்பத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைப்பேன். இந்த வருடம் அப்பா மற்றும் அம்மா ஆசைப்பட்ட மாதிரி அம்மாவுக்கு ஒரு வீடு வாங்கி கொடுத்து விட்டேன் என்று எமோஷனலாக அந்த வீடியோவில் அனிதா சம்பத் பேசியிருக்கிறார்.

கனவு நிறைவேறியது
ஆரம்பத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்து அனிதா சம்பத் இப்போது சென்னையில் இரண்டு வீடு வாங்கி இருக்கும் நிலையில் தன்னுடைய இரண்டாவது வீட்டை தன் அம்மாவிற்காக வாங்கி கொடுத்ததாக கூறியிருக்கிறார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications