திடீரென மருத்துவமனையில் அட்மிட் ஆன அனிதா சம்பத்.. கணவர் வெளியிட்ட உருக்கமான பதிவு
சென்னை: செய்தி வாசிப்பாளராக அனைவருக்கும் பரிட்சையமான அனிதா சம்பத் தற்போது இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட புகைப்படம் பலருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
திடீரென்று ஹாஸ்பிடலில் ட்ரிப் போட்டது போன்ற ஒரு புகைப்படம் ஒன்றை அனிதா தன்னுடைய இன்ஸ்டாவில் பகிர்ந்திருக்கிறார்.

அதற்கு அவருடைய கணவர் அந்தப் புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து ஆறுதல் கொடுக்கும் விதமாக பதிவையும் வெளியிட்டு இருக்கிறார்.
செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத் பலருக்கும் பரிட்சயமாகி இருந்தாலும் அவருடைய நிஜமான கேரக்டரை வெளியே காட்டியது பிக் பாஸ் நிகழ்ச்சி தான். பிக் பாஸ் நிகழ்ச்சியில் தன்னுடைய கடந்த கால கஷ்டங்கள் மற்றும் தன்னுடைய காதல் போன்றவற்றை அனிதா கிடைக்கும் நேரங்களில் எல்லாம் கூறிக் கொண்டே இருந்தார்.
அத்தோடு எனக்கு பிக்பாஸில் "ஸ்பேஸ்" கிடைக்கவில்லை என்று அடிக்கடி புலம்பி கொண்டிருந்ததை வைத்து கமல்ஹாசன் கூட அவரை கிண்டல் செய்து இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் கடந்து வந்த சோகங்களை எல்லோரும் சொல்லிக் கொண்டிருக்கும் போது அனிதா சம்பத் சொன்ன கதையை கேட்டு பலர் கொட்டாவி விட்ட வீடியோவும் இணையத்தில் வைரலானது.
இதுவெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அனிதா சம்பத் எந்த பிரச்சனை யாருக்கு நடந்தாலும் குரல் எழுப்பி கேட்டுக் கொண்டிருந்தார். அதனாலயே பலர் அவரை பிடிக்கவில்லை என்று கமெண்ட்களில் திட்டிக் கொண்டிருந்தனர். ஆனால் அனிதா சம்பத்தை விட அதிகமாக குரலை உயர்த்தி சண்டையிட்டுக் கொண்டிருந்த ஆண் போட்டியாளர்களுக்கு ஆதரவு கிடைத்தது பாரபட்சமானது தான்.
இருந்தாலும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அனிதா சம்பத் ஒரு சில திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் சமீபத்தில் தான் இரண்டு நாட்களுக்குள் முன்பு தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் பாலிக்கு சுற்றுலா சென்று இருந்த நேரத்தில் அங்கு எடுத்த புகைப்படங்கள் மற்றும் தான் பல நாட்களாக ஆசைப்பட்டு இருந்த பறக்கும் ஊஞ்சலில் தான்
பறந்தது குறித்தும் தன்னுடைய ரசிகர்களிடம் மகிழ்ச்சியாக பகிர்ந்து இருந்தார்.

இந்த நிலையில் இவருக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை. திடீரென்று தன்னுடைய கையில் ட்ரிப் ஏறிக் கொண்டிருப்பது போன்றும் ஹாஸ்பிடலில் இருப்பது போன்றும் சில புகைப்படங்களை தன்னுடைய instagram பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். அதற்கு ரசிகர்கள் அதிகமானோர் அவருக்கு ஆறுதல் கூறி என்னாச்சு என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால் என்ன நடந்தது என்பதை பற்றி இன்னும் அனிதா சம்பத் தெளிவாக கூறவில்லை.
அதே நேரத்தில் அனிதா சம்பத் வெளியிட்ட புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டா ஸ்டோரியில் பகிர்ந்து அவருடைய கணவர் எல்லாம் சில நாளில் மாறிவிடும் பப்பு என்று தன்னுடைய காதல் மனைவியான அனிதா சம்பத்துக்கு ஆறுதல் கூறியிருக்கிறார். இந்த நிலையில் அவரும் எந்த தகவலையும் தெரிவிக்கவில்லையே என்று ரசிகர்கள் தொடர்ச்சியாக என்ன ஆச்சு என்ற கேள்வியை மட்டும் கேட்டுக் கொண்டிருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications