அண்ணா சீரியல் : ஷண்முகத்துக்கு வில்லியாக களமிறங்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை.. யார் தெரியுமா?
சென்னை: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. ஒவ்வொரு நாளும் விறுவிறுப்புக்கு பஞ்சமின்றி ஒளிபரப்பாகும் இந்த சீரியல் ரேட்டிங்கும் ஒவ்வொரு வாரமும் உயர்ந்த வண்ணம் இருந்து வருகிறது. தற்போது இந்த சீரியலில் சௌந்தரபாண்டி தன்னுடைய தர்மகத்தா பதவியை பாதுகாத்து கொள்ள சண்முகத்தை தேர்தலில் நிற்க விடாமல் செய்ய வேண்டும் என்று அதற்கான முயற்சிகளை செய்து வருகிறார்.
ஷண்முகம் சூடாமணியின் வார்த்தையை ஏற்று தர்மக்கத்தா தேர்தலில் நின்று சௌந்தரபாண்டியின் தவறுகளை வெளியே கொண்டு வருவேன் என்று வாக்கு கொடுத்திருக்கிறார். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் ஷண்முகம் வீட்டிற்கு வந்த முத்துப்பாண்டி ஷண்முகம் இல்லாததால் வைகுண்டத்தை கைது செய்ய முடிவெடுக்க பரணி என்னை கூட்டிட்டு போ, நான் தானே அவன் பொண்டாட்டி என்று அதிர்ச்சி கொடுத்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது, முத்துப்பாண்டி அந்த ஷண்முகம் மட்டும் என் கையில் கிடைச்சா என்கவுண்டர் தான் என்று வார்னிங் கொடுத்து விட்டு செல்ல வெளியே வரும் ஷண்முகம் எல்லாத்தையும் என் அப்பன் முருகன் பாத்துப்பான் என்று சொல்கிறான். ஆனால் பரணி நீ உன்மேல தப்பு இல்லனு முதல்ல நிரூபி. அதுவரைக்கும் உன் தங்கச்சிகளுக்கு பிரச்சனை என்று சொல்லி சண்முகத்தை அனுப்பி வைக்கிறாள்.

அடுத்து முத்துப்பாண்டி இன்னைக்கு சண்டே வீட்டிற்கு போய் சாப்பிட்டு சண்முகத்தை தேடலாம் என்று உடன் இருக்கும் போலீஸ்காரர்களையும் கூட்டி கொண்டு வீட்டிற்கு வர பாக்கியம் சாப்பாடு பரிமாற அங்கு வரும் சௌந்தரபாண்டி சண்முகத்தை பிடிச்சாச்சா என்று கேட்க முத்துப்பாண்டி இன்னும் இல்ல என்று சொன்னதும் சாப்பாட்டு தட்டை தூக்கி வீசி என் பிள்ளையா இருந்தா அவனை பிடிச்சிட்டு வந்து சாப்பாட்டுல கையை வை என்று திட்ட முத்துப்பாண்டி அவனை பிடிச்சிட்டு வரேன் என்று வீராப்புடன் கிளம்புகிறான்.

பாக்கியம் என் மருமகனை அவ்வளவு சீக்கிரம் பிடிக்க முடியாது, அவன் ஒன்னும் பூனை குட்டி இல்ல, புலிக்குட்டி என்று சொல்ல சௌந்தரபாண்டி கோபப்பட்டு துப்பாக்கியை எடுக்க சனியன் அங்கிருந்து ஓட்டம் எடுக்க நீ எதுக்குடா ஓடுற என்று கேட்க யாரும் இல்லனா என்னை தான் சுடுவீங்க அதான் என்று சொல்கிறான். முத்துப்பாண்டி அந்த சண்முகத்தை கைது பண்ணிட்டு வந்து சாப்பாட்டுல கையை வைக்கிறேன் என கிளம்பி செல்கிறான்.
அதனை தொடர்ந்து ரத்னா வேலை செய்யும் ஸ்கூல் அருகே வரும் முத்துப்பாண்டி அக்கியூஸ்ட் தங்கச்சி தானே நீ வண்டியில ஏறு, உன் அண்ணனை எப்படி வர வைக்கணும்னு எனக்குநல்லா தெரியும் என்று ரத்னாவை தூக்கி கொண்டு செல்ல இதை பார்த்து விடும் வெட்டுக்கிளி பதறி அடித்து ஓடி வந்து பரணியிடம் விஷயத்தை சொல்கிறார்.

இப்படி அதிரடியான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் அதிரடியாக களமிறங்க உள்ளார் ஸ்ரீலேகா ராஜேந்திரன், வெள்ளித்திரையில் பல படங்களில் நடித்து மக்களின் மனங்களை கவர்ந்த இவர் சின்னத்திரையிலும் எண்ணற்ற சீரியலில் நடித்து வருகிறார்.
மேலும் தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலிலும் நடித்து வரும் நிலையில் அண்ணா சீரியலில் பயங்கரமான வில்லியாக களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சௌந்தரபாண்டியின் அக்காவாக பாண்டியம்மா என்ற கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. விரைவில் இவரது காட்சிகள் சீரியலில் இடம் பெறும் என எதிர்பார்க்கலாம்.
-
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்! -
மொத்தமாக மாறிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் தொனியை மாற்றிய அமெரிக்க அதிபர்.. அடேங்கப்பா! -
2 வெர்ஷன்.. ஜனநாயகன் படம் இணையத்தில் லீக்கானது எப்படி? அதிகம் பலன் அடைவது யார்? அந்த மர்ம கை -
23000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த பின்பும்.. டிசிஎஸ் நிறுவனத்தில் கட்டுப்படுத்த முடியாத செலவு! -
லீக் ஆன ஜனநாயகன்.. நானே ரீலிஸ் பண்ணித்தரேன்னு சொன்னேனே விஜய்.. விட்டு விளாசிய சாட்டை! -
செந்தில் பாலாஜி பெயரை சொல்லும்போது ‘டங் ஸ்லிப்’.. கோவை தெற்கில் உளறிய பியூஷ் கோயல் -
மும்பை ரெஸ்டாரண்டில் நடந்த சந்திப்பு.. சமாதானமான ஸ்மிருதி மந்தனா குடும்பம்.. மீண்டும் திருமணம்? -
ஜனநாயகன் ரூ.500 கோடி பட்ஜெட் படம்! HD பிரிண்ட்டில் வெளியானது எப்படி? தமிழக டிஜிபியிடம் புகார் -
நம்பர் 5.. அடித்து சொல்லும் சர்வேக்கள்! திமுக+ 180 இடங்களை தாண்டுகிறது! அதிமுக ஓவர்? முக்கிய கணிப்பு












Click it and Unblock the Notifications