சிவாஜி கணேசனின் அன்னை இல்லம் கிச்சனில் யார் பாருங்க.. ஃபிளைட்டில் வந்து பிரியாணி சாப்பிட்டு! அமேஸிங்
சென்னை: சிவாஜி கணேசனின் வாழ்க்கை வரலாற்றை, எழுத்தாளர் முனைவர் கா.வெ.சே மருது மோகன் புத்தகமாக எழுதி உள்ளார். நடிகர் திலகம் குறித்து முனைவர் மருது மோகன் 'சிவாஜி கணேசன்' என்ற நூலை சில வருடங்களுக்கு முன்பு எழுதினார்.. இந்நிலையில் ஒரு சேனலுக்கு பேட்டி தந்துள்ள மருதுமோகன், அன்னை இல்லம் வீடு குறித்தும், சிவாஜி கணேசனின் உதவும் குணம், பரந்த மனப்பான்மை குறித்தும் விரிவாக பேசியிருக்கிறார்..
Wow Tamizhaa என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள மருது மோகன், "சிறுவயதில் சிவாஜியின் அம்மா, ஒரு பசு மாடு வைத்து பால் கறந்து, அதை வைத்துதான் குடும்பத்தை கவனித்து கொண்டிருந்தார்.. அப்போது அந்த காலகட்டத்தில் குடியிருந்த வேற்று இனத்தை சேர்ந்த பெரியண்ணா என்பவர்தான், சிவாஜியின் அம்மாவுக்கு உதவிகளை செய்து வந்துள்ளார்..

குறிப்பாக, பசுமாட்டுக்கு உடம்பு சரியில்லாவிட்டால், அதனை மருத்துவமனைக்கு அழைத்து செல்வது, அந்த பசுமாட்டினை குளிப்பாட்டுவது போன்ற உதவிகளை செய்து வந்தார் பெரியண்ணா.
16 கார் டிரைவர்கள் குடும்பம்
ஒருகட்டத்தில் சிவாஜி கணேசன் நடிகராகி 60-ல் அன்னை இல்லம் வீட்டை வாங்கியதுமே, தன்னுடைய அம்மாவுக்கு அன்று உதவி செய்த பெரியண்ணா என்பவரின் குடும்பத்தையே அன்னை இல்லம் வீட்டில் தங்க வைத்து அழகு பார்த்தவர் சிவாஜி..
1962-ல் 16 கார்களை சிவாஜி வைத்திருந்தார்.. அந்த 16 கார்களை ஓட்டும் டிரைவர்கள், அவர்களின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் என மொத்தம் 100 பேர் அன்னை இல்லம் வீட்டில் சாப்பிட்டார்கள்.. ஒருவேளைக்கு 100 பேர் என்றால், 3 வேளைக்கு 300 பேர் அன்னை இல்லம் வீட்டில் சாப்பிட்டனர்.. சிவாஜி வீட்டில் சாப்பிட வேண்டும் என்றாலே பலரும் ஏங்குவார்கள்.. அந்த வாய்ப்பு இனி யாருக்கும் கிடைக்காது.. சண்டே என்றாலே பிரியாணி டே என்று பெயர்..
அன்னை இல்லம் பெரியண்ணா
16 டிரைவர்களின் பிள்ளைகளை படிக்க வைத்ததும் சிவாஜிதான்.. சங்கிலியாண்டபுரத்தில் தன்னுடைய அம்மாவுக்கு உதவி செய்த பெரியண்ணா என்பவருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது.. அந்த பெண் குழந்தையை, தன்னுடைய மகள்களுடன் சேர்த்து சர்ச் பார்க் கான்வென்ட்டில் படிக்க வைத்தார் சிவாஜி..
அதேபோல பெரியண்ணாவின் பரணி என்ற மகனை, தன் மகன்கள் ராம்குமார், பிரபு படித்த பெங்களூர் பிஷப் காட்டன் பள்ளியிலேயே படிக்க வைத்தார்.. பெரியண்ணாதான் அன்னை இல்லம் வீட்டுக்கே மூத்தவர் என்ற அளவுக்கு மரியாதை தந்து வைத்திருந்தார்..
அதேபோல, அன்னை இல்லம் பெண்கள், நல்லி சில்க்ஸில், யார் எத்தனை பட்டுப்புடவை வேண்டுமானாலும் எடுத்து கொள்ளலாம் என்பது கமலா அம்மாளின் உத்தரவாகும்.. காரைக்குடியில் கருப்பையா ஆசாரி என்பவரிடம்தான் நகை செய்வார்கள்..
நெக்லஸ் நகை ஆர்டர்
நெக்லஸ் செய்வதாக இருந்தால் 20, 30 என்றுதான் ஆர்டர் செய்வார்கள்.. அந்தவகையில் தன்னிடமுள்ள எல்லாருமே நன்றாக இருக்க வேண்டும், நன்றாக சாப்பிட வேண்டும் என்பதில் உறுதி கொண்டவர் சிவாஜி..
மோகன்லால் சிவாஜி வீட்டில் பிரியாணி சாப்பிட வேண்டும் என்பதற்காகவே திருவனந்தபுரத்திலிருந்து அன்னை இல்லம் வீட்டுக்கு ஞாயிற்றுக்கிழமைகளில் ஃபிளைட்டில் வந்து சேர்வார்.. பிரியாணி சாப்பிடும்போது பலவிதமான விஷயங்களை சிவாஜி மோகன்லாலிடம் சொல்வார்.. பிரியாணியை எப்படி சாப்பிட வேண்டும் என்றும் கிளாஸ் எடுப்பார் சிவாஜி..
சமையலறைக்கு 3 வழிகள்
சிவாஜிக்கு மீன் மிகவும் பிடித்த உணவாகும்.. முதல் மரியாதையில் மீன் சாப்பிடுவதைபோலதான், நிஜமாகவே சிவாஜி மீன் சாப்பிடுவார்.. அன்னை இல்லம் வீட்டில் சமையல்கூடத்துக்கு போவதற்கே 2, 3 வழிகள் இருக்கும்.. 50 சமையல் கலைஞர்களுக்கு மேல் இருந்தார்கள்.. பரிமாறும்போது எல்லாருக்கும் ஒரே மாதிரிதான்..
நடிகர் கமல்ஹாசன் திரையுலகில் வந்து 50வது ஆண்டு நிறைவடைந்ததையொட்டி, விழா கொண்டாடப்பட்டது. அப்போது கமலுக்கு சிவாஜி வீட்டில் விருந்து தரப்பட்டது.. அந்த டைனிங் டேபிள் யானை தந்தத்தால் செய்யப்பட்டது.. 20 பேர் அந்த டேபிளில் உட்கார முடியும்.. அன்றைய தினம் உணவு பரிமாறியது சிவாஜி வீட்டு பெண்கள், பையன்கள், பேரப்பிள்ளைகள்தான்" என்று தெரிவித்துள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications