அன்னபூரணியின் அடுத்த அத்தியாயம்.. திருவண்ணாமலையில் திருமணம்.. மலேசியாவில் தேனிலவு?: பிரபலம் ஓபன்டாக்
சென்னை: நாட்டிலுள்ள போலி சாமியார்களில் அன்னபூரணியும் ஒருவர் என்று குறிப்பிட்டுள்ள பயில்வான் ரங்கநாதன், அன்னபூரணி என்பவர் யார்? அவருடைய பின்னணி என்ன? என்பது குறித்தெல்லாம் விலாவரியாக தெரிவித்து, ஒரு பேட்டி தந்துள்ளார்.
தன்னை தானே கடவுள் என்று சொல்லிக்கொள்ளும் பிரபல பெண் சாமியார் அன்னபூரணி, இன்று திருவண்ணாமலையில் 3வது திருமணம் செய்து கொண்டார். ஆன்மீகத்துக்காகவே தன்னை அர்ப்பணித்த ரோஹித் என்பவரை அன்னபூரணி திருமணம் செய்துள்ளார்.

திருமணம்: முன்னதாக இந்த திருமணத்தையொட்டி, திருவண்ணாமலை முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன.. அன்னபூரணியை திருமணம் செய்யும் ரோகித், அவருடைய முன்னாள் கணவர் அரசுவின் புதிய பரிணாமம் என்று அந்த பேனரில் குறிப்பிடப்பட்டிருந்தது.
பிரபஞ்சத்திலேயே அற்புதமான நிகழ்வு நடைபெற போகிறது, தெய்வீக சங்கமத்திற்கு குடும்பத்தோடு வாங்க என்று பக்தர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இனி இவர்கள் இருவரும் இணைந்து ஜோடியாக அருள் வழங்க உள்ளதாக தெரிவித்திருக்கிறார்கள்.
இந்நிலையில், KING 24X7 என்ற யூடியூப் சேனலுக்கு மூத்த பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் பேட்டி ஒன்றை தந்துள்ளார்.. அந்த பேட்டியில், "கோடீஸ்வர பெண் சாமியார் அன்னபூரணி யார்? சோஃபாவுக்கு அடியில் ஸ்பிரிங் வைத்துவிட்டால், அதன்மீது லேசாக அசைத்தாலும், சோபா குலுங்கிவிடும்.. ஆனால், இது தெரியாமல், அன்னபூரணியின் குலுக்கல் ஆசீர்வாதத்தை பெறுவதற்காகவே மணிக்கணக்கில் பலர் காத்து கிடக்கிறார்கள். யார் இந்த அன்னபூரணி?
ஏற்கனவே 2 வருடங்களுக்கு முன்பு இதைபற்றி பேசியிருக்கிறேன்.. செங்கல்பட்டில் இதே சாமியார் விழுந்தடித்து கொண்டு ஓடும்போது நான் அந்த செய்தியை வெளியிட்டிருக்கிறேன். அழகான, நடிகையை போல முகக்கவர்ச்சி உள்ள பெண் அன்னபூரணி.
நாட்டசரன்கோட்டை: சொந்த ஊர் நாட்டரசன்கோட்டை.. இங்கு அனைவருமே வணிகச்செட்டியார்கள்.. இதில் பலரும் சினிமா தயாரிப்பாளர்களாக வந்துள்ளனர். அதில் ஒருவர்தான், மரியாதைக்குரிய ஏவிஎம் செட்டியார் அவர்கள்.
முழுக்க முழுக்க செட்டியார் சமூகத்தை சேர்ந்தவர்கள்தான் இங்கு இருப்பார்கள். அன்னபூரணி என்பவர் சங்கரன்நாராயணன் என்பவரை திருமணம் செய்து வாழ்ந்து வந்துள்ளார்.. அந்த வீட்டில் சம்பாதிக்கும் நபராக இருந்தவர் அன்னபூரணி.. கணவர் சங்கரன் நாராயணனோ ஐயோ பாவம்.
சங்கரநாராயணன்: திடீரென சங்கர நாராயணன் மர்மமான முறையில் இறந்துவிடுகிறார்.. இதையடுத்து, அன்னபூரணி தனியான வாழ்ந்து வரும்போது, இவரது வீட்டுக்கு எதிரே அரசு என்பவர் குடியிருக்கிறார்.. இவர் இன்டீரியர் டெக்கரேட்டர் பணியை செய்து கொண்டிருந்தவர்.. அப்போது அரசுக்கும், அன்னபூரணிக்கும் கொடுக்கல் - வாங்கல் இருந்து வந்துள்ளது.. ஒருகட்டத்தில் நாட்டரசன்கோட்டையில் தங்களுக்கு சிக்கல் வந்துவிடும் என்று நினைத்து சென்னைக்கு வந்துவிட்டார்கள்.
அப்போது அன்னபூரணிக்கு அருள் வாக்கு சொல்வது போன்ற பிரம்மை ஏற்பட்டுள்ளது.. அருள்வாக்கு என்பதே ஏமாற்றுத்தனமாகும்.. உங்களது பலவீனத்தை தெரிந்துகொண்டு, உங்களிடமே வாக்குமூலம் வாங்கிக்கொண்டு, உங்களையே திருப்திப்படுத்துவது போல பேசினால், அதைத்தான் அருள் வாக்கு என்பார்கள். இதற்கு பிறகு, அன்னபூரணியின் புகழ், பெண்களிடம் வளர்ந்து கொண்டேயிருந்தது. நிறைய பெண்கள் அன்னபூரணியை தேடி துவங்கினார்கள்.. இந்த பெண்களுக்கு ஆதரவாக அவரவர் கணவன்மார்களும் வர துவங்கிவிட்டார்கள்.
இயற்கை ஒலி: பிறகு இருவரும் சேர்ந்து "இயற்கை ஒலி" என்ற அறக்கட்டளையை ஆரம்பித்தனர்.. பணம் லட்சக்கணக்கில் கொட்ட துவங்கியது.. மேல்மருவத்தூரை சேர்ந்த ஒரு மிகப்பெரிய ஆனமீக குருவின் இளைய மகன், அன்னபூரணியுடன் கூட்டு வைத்தால் வருமானம் வரும் என்று நினைத்தார்.. பிறகு, "மேல்மருவத்தூர் ஆன்மீக அறக்கட்டளை" என்று உருவானது.. ஆனால், அவருக்கும் 50 சதவீதம் பங்கு தர வேண்டியிருக்கிறதே என்பதால், அவரையும் தவிர்த்துவிட்டு, சென்னைக்கு வந்துவிட்டார் அன்னபூரணி
இந்நிலையில், 2வது கணவர் அரசு, மர்மமான முறையில் இறந்துவிட்டார்.. பிறகு ரோஹித் என்பவர் பாதுகாப்பாக இருந்து வருகிறார் .. பணத்துக்கும் பாதுகாவலனாக உள்ளார் ரோஹித் ..
திருமணம்: இவர்கள் இருவரும் திருவண்ணாமலையில் நவம்பர் 28ம் தேதி (நேற்று) திருமணம் கல்யாணம் செய்து கொள்ளப்போவதாக அறிவிப்பு வெளியிட்டார்கள்.. காரணம், இதே நவம்பர் 28ம் தேதிதான் அரசு இறந்துவிட்டார். எனவே, கணவர் இறந்த அதே நாளில், தன்னுடைய பாதுகாவலரான ரோஹித்தை திருவண்ணாமலையில் திருமணம் செய்ய போவதாக அறிவித்தார்.
எல்லா யூடியூப் சேனல்களையும் தன்னுடைய திருமணத்துக்கு அழைத்திருக்கிறாராம். நான் சொல்லும் இந்த தகவல்கள் எல்லாமே நிரூபிக்கப்பட்டவையே.. இதனால், திருவண்ணாமலைக்கு செல்ல அனைவரும் தயாரானபோதுதான், மலேசியாவில் அன்னபூரணி ஒரு வாரம் தங்கி இருந்தது தெரியவந்துள்ளது.
வாழ்த்துக்கள்: திருமணத்துக்கு முன்பே, மலேசியாவை சுற்றிப்பார்த்துவிட்டு, தேனிலவு கொண்டாடுகிறார் பெண் சாமியார் அன்னபூரணி.. எப்போதுமே, இந்த அருள்வாக்கு என்பது சிலநேரத்தில் பலிக்கலாம்... சில வார்த்தை சுடும் - சில வார்த்தை கெடும் என்பார்கள்.. நாட்டிலுள்ள போலி சாமியார்களில் அன்னபூரணியும் ஒருவர்.. எனினும் KING 24X7 சேனல் சார்பாக, அவருக்கு திருமணத்துக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்" என்றார்.
அன்னபூரணிக்கு இந்த திருமணம் 3வது திருமணமாகும். முதல் திருமணத்தின்போது அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. அதன்பிறகு கணவர் மற்றும் குழந்தையை விட்டுவிட்டு பிரிந்துதான் அரசுவை 2வதாக திருமணம் செய்திருந்தார். இப்போது அம்மனின் அவதாரம் எனக் கூறிக் கொள்ளும் அன்னபூரணி 3வது திருமணம் செய்துள்ளதும், . தங்களை அம்மை - அப்பர் என்று அழைக்க வேண்டும் என்றும் அறிவித்திருப்பதும், சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியுள்
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications