ஆர்யாவுடன் நடிக்க மறுத்த நடிகை.. அந்த 100 நாள் மெமரீஸ் மறக்க முடியாது என உருக்கம்.. குவியும் கமெண்ட்ஸ்
சென்னை: கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியின் மூலம் மக்கள் கவனத்திற்கு வந்த அபர்ணதி, தற்போது மீண்டும் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளார். காரணம் - முன்னணி நடிகரான ஆர்யா உடன் திரையில் இணைந்து நடிக்க விருப்பமில்லை என்று அவர் பேசியதுதான்.
அபர்ணதி விளக்கம்
ஒரு சமீபத்திய பேட்டியில் அபர்ணதி கூறியதாவது, "100 நாட்களுக்கு மேலாக ஆர்யாவுடன் ஒரே பயணத்தில் இருந்திருக்கிறேன். அந்த அனுபவம் எனக்கு ரொம்ப ரியலான நினைவுகளை கொடுத்தது. அதனால் பின்னர் சினிமாவில் போலியான காதலி அல்லது தங்கை மாதிரி கதாபாத்திரத்தில் நடிக்க விருப்பம் இல்லை" என்றார்.

இந்தக் கருத்து ரசிகர்கள் மத்தியில் விவாதத்தை உருவாக்கியுள்ளது. சிலர் இது ஒரு உண்மையான மற்றும் நேர்மையான நிலைப்பாடு என்று பாராட்ட, மற்றவர்கள் "ஒரு நடிகையாக எல்லா கதாபாத்திரங்களையும் ஏற்க வேண்டும்" என்ற கருத்தையும் முன்வைக்கிறார்கள்.
ரியாலிட்டி ஷோவிலிருந்து நடிகையாக
எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் ஆர்யாவிடம் அதிக உரிமையுடன் நடந்துகொண்டதற்காக ஒருகாலத்தில் கடுமையாக விமர்சிக்கப்பட்ட அபர்ணதி, அதன்பின் சினிமாவை தேர்வு செய்தார். அவரது தேன் திரைப்படம் அவரை ஒரு திறமையான நடிகையாக காட்டியது. அதைத்தொடர்ந்து விக்ரம் பிரபு - ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்த இறுகப்பற்று படத்தில் விதார்த் மனைவியாக நடித்த அவரது நடிப்பு கவனம் பெற்றது.
வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்வதில் அவர் காட்டும் கவனம், அவருக்கு தனி ரசிகர் வட்டத்தை உருவாக்கியுள்ளது.

இன்ஸ்டாகிராம் பெயர்
அபர்ணதி தனது இன்ஸ்டாகிராம் ஹேண்டிலில் "6ya" என ஆர்யாவை குறிப்பது போன்ற பெயரை வைத்திருப்பதும் மீண்டும் விவாதத்தை கிளப்பியுள்ளது. இதற்கு ஒரு தரப்பு ரசிகர்கள், "அது ஒரு நினைவாக வைத்திருக்கிறார்" என ஆதரிக்க, மற்றொரு தரப்பு, "ஆர்யா தற்போது சாயீஷா உடன் குடும்ப வாழ்க்கையில் இருக்கிறார்; இதை விட வேண்டும்" என அறிவுரை கூறி வருகின்றனர்.
ஃபாலோயர்ஸ்
சமீபத்தில் நடிகர் ஷா ரா சமூக வலைதள ஃபாலோயர்களின் அவசியத்தை பற்றி பேசிக் கொண்டிருந்த சூழலில், "பட வாய்ப்புக்கு ஃபாலோயர்கள் தான் முக்கியம் என்றில்லை" என அபர்ணதி கூறியதும் கவனம் பெற்றது.
ஆர்யா - தனி பாதை
21 ஆண்டுகளாக சினிமாவில் இருக்கும் ஆர்யா தற்போது பல படங்களில் பிஸியாகவும் குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்தியும் இருக்கிறார். ரியாலிட்டி ஷோவில் தொடங்கிய ஒரு நினைவை தொழிலிலும் பின்பற்ற வேண்டுமா? என்ற கேள்விகளை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தொடர்ந்து விவாதித்து வருகின்றனர்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications