விஜய் செயல்பாடு.. எனக்கு பெரிய சர்ப்ரைஸ்லாம் இல்லை! ஏஆர் முருகதாஸ் ஓபன்
சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான ஏ.ஆர்.முருகதாஸ், தனது புதிய படமான 'மதராஸி', சிவகார்த்திகேயனின் வளர்ச்சி, மற்றும் நடிகர் விஜய்யின் அரசியல் பிரவேசம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். விகடனின் மாணவ பத்திரிக்கையாளர் பயிற்சி முகாமில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற அவர், பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களையும், தனது கருத்துக்களையும் பகிர்ந்துகொண்டார்.
மதராஸி- முருகதாஸின் கம்பேக்
அஜித் நடிப்பில் வெளியான 'தீனா' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான ஏ.ஆர்.முருகதாஸ், தொடர்ந்து விஜயகாந்தின் 'ரமணா', சூர்யாவின் 'கஜினி', விஜய்யின் 'துப்பாக்கி', 'கத்தி', 'சர்கார்' எனத் தொடர் வெற்றிப்படங்களைக் கொடுத்து, பாக்ஸ் ஆபிஸ் இயக்குனராகத் திகழ்ந்தார். கடைசியாக ரஜினிகாந்த் நடிப்பில் இயக்கிய 'தர்பார்' திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

அதன்பிறகு தமிழில் சில வருடங்கள் படம் இயக்காமல் இருந்த ஏ.ஆர்.முருகதாஸ், சுமார் 5 வருட இடைவெளிக்குப் பிறகு தமிழில் 'மதராஸி' என்ற படத்தை இயக்கி வருகிறார். சிவகார்த்திகேயன் நாயகனாக நடித்து வரும் இந்தப் படத்தில், ருக்மணி வசந்த், வித்யூத் ஜாம்வால், பிஜு மேனன், விக்ராந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
'மதராஸி' திரைப்படம் எப்படி வந்திருக்கிறது என்ற கேள்விக்கு பதிலளித்த முருகதாஸ், "கஜினி மாதிரியான ஒரு திரைக்கதையும், துப்பாக்கி மாதிரியான ஒரு ஆக்ஷன் படமாகவும், எடுக்க வேண்டும் என்று முயற்சி செய்திருக்கிறேன். கிட்டத்தட்ட நான் நினைத்ததை எடுத்திருக்கிறேன்," என்று தெரிவித்தார். இது ரசிகர்கள் மத்தியில் 'மதராஸி' மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.
சிவகார்த்திகேயனின் அசுர வளர்ச்சி
சினிமாவுக்கு வருவதற்கு முன் விஜய் டிவியில் இருந்து வந்த சிவகார்த்திகேயனின் வளர்ச்சி குறித்துப் பேசிய முருகதாஸ், "மான் கராத்தே படத்தில் பார்த்தபோது டிவியில் இருந்து வந்த சிவகார்த்திகேயன். சினிமாவில் சாதிக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு அவர் ஒரு நம்பிக்கை. ஆனால் இப்போது, கடந்த 10 வருடங்களில் அதிக வளர்ச்சி கண்டுள்ளார்," என்று பாராட்டினார். சிவகார்த்திகேயன் இளம் தலைமுறையினருக்கு ஒரு உத்வேகமாகத் திகழ்கிறார் என்பதை முருகதாஸின் பேச்சு உணர்த்துகிறது.
விஜய்யின் அரசியல் பிரவேசம்
சினிமாவில் இருந்து அரசியலுக்குச் சென்றுள்ள நடிகர் விஜய், வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட உள்ள நிலையில், தற்போது அவரின் அரசியல் பேச்சுக்கள் குறித்துப் பேசினார் ஏ.ஆர்.முருகதாஸ். "விஜய் அரசியல் பேச்சுக்கள் குறித்த வீடியோவை நானும் பார்த்தேன். அவர் 'கத்தி' படத்தில் பேசியது போல் நிஜத்தில் பேச வேண்டும் என்று சொன்னது எதார்த்தமாக சொன்னதுதான்," என்று முருகதாஸ் குறிப்பிட்டார்.
விஜய்யின் இயல்பு குறித்துப் பேசியபோது, முருகதாஸ் ஒரு சுவாரஸ்யமான தகவலை வெளிப்படுத்தினார்: "விஜய் மிகவும் அமைதியானவர். அவர் பேசுவது அவருக்கே கேட்குதா இல்லையா என்ற சந்தேகம் வர அளவுக்கு மெதுவாகப் பேசுவார். அதனால்தான் நான் அவர் நேரில் பேச வேண்டும் என்று சொன்னேன். செட்டுக்குள் ஒரு மாதிரியும், வெளியில் ஒரு மாதிரியும் இருக்கக்கூடியவர். ஒரு 'ஸ்பிளிட் பர்சனாலிட்டி' மாதிரி பேசிட்டு இருப்பார். இப்போது அவர் பேசுவது எனக்கு சர்ப்ரைஸ் இல்லை. நான் நேரிலேயே பார்த்துவிட்டேன்," என்று கூறினார்.
முருகதாஸின் கூர்மையான பார்வை
விஜய்யுடன் 'துப்பாக்கி', 'கத்தி', 'சர்கார்' என மூன்று வெற்றிப் படங்களில் இணைந்து பணியாற்றிய அனுபவம் கொண்ட முருகதாஸின் இந்த வெளிப்படையான கருத்து, விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. விஜய்யின் அரசியல் பேச்சுக்களுக்குப் பின்னால் இருக்கும் அவரது தனிப்பட்ட குணாதிசயங்களை முருகதாஸ் துல்லியமாகப் பதிவு செய்திருப்பதாகப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். விஜய்யின் அரசியல் பிரவேசமும், முருகதாஸின் 'மதராஸி' படமும் தமிழ் சினிமாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
விஜய் அரசை தாண்டி.. பரந்தூர் விமான நிலையத்துக்கு புதிய சிக்கல்.. ஆந்திரா மூலம் வந்த புது பிரச்சனை! -
எம்ஜிஆர் வழிபட்ட அதே கோவில்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்லும் விஜய்! அந்த தங்க வாள் ரகசியம் -
தவெகவின் வியூகம்.. புஸ்ஸி ஆனந்துடன் பேச்சுவார்த்தை நிறைவு.. அடுத்த வாரத்தில் இணையும் விஜயபாஸ்கர்? -
திடீரென போனை போட்டு பேசிய விஜய்.. பொருளாதார ஜாம்பவான்களுடன் ரகசிய ஆலோசனை.. என்ன காரணம்? -
மத்திய அரசுடன் இணக்கமான உறவு வச்சுக்கலாம்.. விஜய் எடுத்த புதிய ரூட்! காரணத்தை கேட்டா ஷாக் ஆகிடுவீங்க -
டெல்லி தமிழ்நாடு இல்ல கேண்டீனில் தீ விபத்து.. முதல்வர் விஜய் புறப்பட்ட சிறிது நேரத்தில் பரபரப்பு -
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: மீண்டும் சூடுபிடிக்கும் சிபிஐ விசாரணை.. 10 போலீசாருக்கு சம்மன் -
பாரதிராஜா உடலுக்கு முழு அரசு மரியாதை வழங்கப்படும்.. முதல்வர் விஜய் அறிவிப்பு! -
இருக்குற இடம் தெரியாம இருந்துட்டு போயிடனும்.. பாஜக மீது லேசான பாசம்! ‘இந்தியா’வுக்கு நோ சொன்ன விஜய்! -
திராவிட அரசியலை உடைத்த தவெக.. விஜய் வெற்றியால் டென்ஷனான பாஜக? சாணக்கிய அமித்ஷா அடுத்த பிளான் இதுதானா -
கே.என்.நேரு மீது FIR.. உள்ளே இழுக்கப்பட்ட உதயநிதி நண்பர் ரத்தீஷ்! விஜய் கையில் எடுத்த பிரம்மாஸ்திரம்












Click it and Unblock the Notifications