சொர்க்கத்தை விட மூச்சு முட்டும் புழுக்கம்.. ஏ.ஆர் ரஹ்மான் விவாகரத்துக்கு பார்த்திபன் போட்ட பதிவு
சென்னை: இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் மற்றும் அவருடைய மனைவி சாய்ரா பானு இருவரும் விவாகரத்து செய்து பிரிந்து விட்டதாக நேற்று பதிவு வெளியிட்டிருந்தனர். அதைத்தொடர்ந்து நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் எக்ஸ் தள பக்கத்தில் விவாகரத்து பற்றி ஒரு பதிவு வெளியிட்டிருக்கிறார்.
தமிழ் சினிமாவில் முக்கிய பிரபலங்கள் பலர் அடுத்தடுத்து விவாகரத்து செய்தியை அறிவித்து வருகிறார்கள். சமந்தா, தனுஷ், ஜிவி பிரகாஷ், ஜெயம் ரவி என பலர் தங்களுடைய திருமண வாழ்க்கையில் இருந்து விலகியதை அறிவித்திருந்தனர். அவர்கள் வரிசையில் தற்போது இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மானும் அவருடைய மனைவியை பிரிந்திருக்கிறார்.

1992 ஆம் ஆண்டு ரோஜா படத்திற்கு இசையமைப்பு செய்ததன் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமான இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் அவருடைய முதலாவது படத்திலேயே மிகப் பெரிய அளவில் பிரபலமானார். அதற்குப் பிறகு ரஹ்மான் பாடலுக்கு அதிகமான ரசிகர்கள் உருவாகி விட்டனர்.
2008 ஆம் ஆண்டு ஸ்லம்டாக் மில்லினர் என்ற படத்தில் இசையமைத்ததற்காக ஆஸ்கார் விருது வென்றார். அதற்கு பிறகு கோலிவுட் படங்கள் இசையமைக்கும் வாய்ப்பை பெற்ற ரஹ்மான் கடைசியாக தமிழில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான ராயன் திரைப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருந்தார். அந்த பாடல்களும் பெரிய அளவில் வரவேற்பு பெற்றது.
இந்த நிலையில் நேற்று ரஹ்மானின் மனைவி தன்னுடைய விவாகரத்து அறிவிப்பை முதலில் வெளியிட்டிருந்தார். அதைத் தொடர்ந்து ஏ ஆர் ரஹ்மானும் அது உண்மைதான் என்று பகிர்ந்திருந்தார். இந்த நிலையில் இவர்களுடைய விவாகரத்துக்கு பலர் கருத்து தெரிவித்து வரும் நிலையில் நடிகர் மற்றும் இயக்குனர் பார்த்திபன் தன்னுடைய தொணியில் தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டிருக்கிறார்.
அதில் அவர் கூறியதாவது இசை ஸ்வரங்கள் பிரிவதால் தான் பிறக்கும் ஒரு நாதமே. குடைக்குள் மழை நான் எழுதி கார்த்திக் ராஜா இசைக்க, இசையே பாடியது. பிரிவு என்பது துக்கம் மட்டுமல்ல புதிய அமைதியாகவும் பிறக்கலாம்.. நெருக்கம் நிகழ்த்திய சொர்க்கத்தை விட மூச்சு முட்டும் புழுக்கமாகவும் மாறியது, சற்றே மாற்றி விலகி நின்று அவரவர் விருப்பம் போல வாழ இனி(ய) வழி உள்ளதா என சம்பத்தப்பட்டவர்கள் ஆராயலாம். ஊர் கூடி உறவை கொண்டாடி வழி அனுப்புதல் போலவே ஊர் விலகி பிரிவு என்ற முடிவையும் சமமாய் மதித்து அமைதிக்கு உதவிட வேண்டும் என்று பதிவிட்டிருக்கிறார்.

பார்த்திபன் நடிகை சீதாவை காதலித்து திருமணம் செய்து இருந்தார். திருமணத்திற்கு பிறகு சில காரணங்களால் தன்னுடைய மனைவியை பிரிந்து இருந்தார். அது பற்றி சமீபத்தில் பேசும்போது கூட எனக்கு ஆரம்பத்தில் சரியான புரிதல் இல்லாததால் தான் நான் திருமண வாழ்க்கையில் பல கட்டுப்பாடுகள் வைத்திருந்தேன்.
இப்போது இருக்கும் அறிவு எனக்கு அப்போது இருந்தால் என்னுடைய மனைவி நடிக்க போகிறேன் என்று சொல்லும் போது சந்தோஷமா போயிட்டு வாமா உன்னுடைய கனவுகளுக்கு நான் துணையாய் இருக்கிறேன் என்று சொல்லி இருப்பேன். ஆனால் அப்போது அது எனக்கு பெரிய விஷயமாக இருந்ததால்தான் எங்களுக்குள் பிரிவு ஏற்பட்டது என்று பேசி இருந்தார்.
அதுபோல திருமண வாழ்க்கையில் கருத்து வேறுபாடு வந்தால் பிரிந்து விடுவது எவ்வளவோ மேல், ஒன்றாக வாழ வேண்டும் என்று மனப்புழுக்கத்தோடு வாழ முடியாது என்றும் கூறியிருந்தார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications