Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மிஸ்டர் கிளீன் ஏஆர் ரஹ்மான்.. பூ பூக்குற நொடி போல நடந்தாச்சு, நீரடித்து நீர் விலகாது: உருகிய பிரபலம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஏ.ஆர். ரகுமான் தம்பதிக்குள், பூ பூக்குற நொடி போல தான் இந்த பிரிவு நடந்துள்ளது.. நீரடித்து நீர் விலகவே விலகாது.. குழந்தைகள் 3 பேருக்காகவும் ஒன்று சேருவார்கள்.. அந்த இறைவன் இவர்களுக்கு துணை புரியட்டும்" என்று மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு தெரிவித்துள்ளார்.

Cheyyaru Balu Official என்ற யூடியூப் சேனலில், மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு ஏ.ஆர். ரகுமான் விவகாரம் குறித்து பேசியிருக்கிறார்.. அதில், தம்பதிக்குள் என்ன பிரச்சனை என்பது குறித்து சில தகவல்களை வெளிப்படுத்தியிருக்கிறார்.

ar rahman saira banu

'யாருமே எதிர்பார்க்காத ஜோடி, இத்தனை வருடம் கழித்து ஒரு டைவர்ஸா? என்று பலரும் வியப்புற்றனர்.. இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் மனைவி நேற்று ஒரு பதிவு போட்டிருந்தாங்க.. அதுதான் பெரிய டிரெண்டாங்கிவிட்டது.. தமிழகம், இந்தியாவை தாண்டி உலகம் முழுவதுமே பரபரப்பு தொற்றிக்கொண்டது.

ரகுமான் தம்பதி: இவர்களுக்குள் இப்படி ஒரு பிளவா? என்னதான் பிரச்சனை? என்று ஆளாளுக்கு கேள்விகளை கேட்டு குடைய துவங்கிவிட்டார்கள்.. "இது எங்களுடைய தனிப்பட்ட சுதந்திரம். இதற்குள் நீங்கள் யாரும் தலையிட வேண்டாம்" என்று இவர்களது மகன் பதிவிட்டார்.

இந்த பதிவும் இணையத்தில் வைரலானது.. "உங்கள் தனிப்பட்ட விஷயம் என்றால், தனிப்பட்டதாகவே இருக்க வேண்டும். பொதுவெளியில் ஏன் பதிவிட்டீர்கள்? பொதுவெளியில் பதிவிட்டால், அனைவரும் விவாதிக்கதான் செய்வார்கள்" என்று இணையவாசிகள் பதில் தந்தார்கள்..

மணவாழ்க்கை: எந்த மணவாழ்க்கையுமே பிரிந்து போய்விடக்கூடாது என்றுதான் அனைவருமே நினைப்பார்கள்.. அதுவும் ரஹ்மான் போன்ற நல்ல உள்ளங்கள், அதிலும் அதிர்ந்துகூட பேசாத மனிதர்.. தமிழனை உலக அரங்கில் கொண்டு போய் சேர்த்தவர். தம்பதிக்குள் என்னதான் பிரச்சனை? இவர்களுக்குள் என்ன நடந்தது?

ரகுமான் சாதாரண மிடில் கிளாஸ் குடும்பத்திலிருந்து வந்தவர்.. சின்ன வயதிலேயே குடும்பத்தை தன்னுடைய தோளில் சுமந்தவர் ரகுமான்.. "எனக்கு கல்யாண செய்து வைக்க சொல்லி நானே என் அம்மாவிடம் கேட்டேன்.. ஒரு தர்காவில் பிரார்த்தனை செய்துவிட்டு வெளியே வந்தபோது அந்த பெண்ணை பார்த்தேன்.. எனக்கு அவரை பிடித்திருந்தது.. அவர்தான் சாய்ரா பானு. அவர் குஜராத்தை சேர்ந்தவர்.. எனக்காக அம்மா தான் சென்று பெண் பார்த்தார்.

சாய்ரா பானு: திருமணமாகி கொஞ்ச நாளில், சுதந்திரம் கிடைக்காத உணர்வு சாய்ரா பானுவுக்கு வந்தது.. ஷாப்பிங் மால், சினிமாவுக்கு போகணும்னு நினைக்கிறாங்க.. ஆனால், என்னால முடியாது என்றேன். அதை அவர் மனமுவந்து ஏற்றுக் கொண்டார்.

பிறகு கூட்டுக்குகுடும்பத்தில், அவர் நுழைவது சிரமமாக இருந்தது.. என் அம்மாவுடன் பயணிப்பது சிரமமாக இருந்தது. என் சகோதரியுடன் பழகுவது சிரமமாக இருந்தது. பிறகு, இதையும் அவர் போகப்போக பழகி கொண்டார்" என்றெல்லாம் பேட்டிகளில் ரகுமான் மனைவியை பாராட்டி சொல்லியிருக்கிறார்.

தன்னுடைய மகளுக்கு தகுதி குறைவான ஒரு சவுண்ட் என்ஜினியரை திருமணம் செய்து தந்துவிட்டதால்தான், ரகுமானுக்கும், சாய்ரா பானுவுக்கும் தகராறு வெடித்தது என்று சிலர் சொன்னார்கள். அத்தனையும் தவறான தகவல்.. இனிமையான வாழ்க்கையையே இவர்கள் இத்தனை ஆண்டு காலம் வாழ்ந்து வந்துள்ளனர்.

சினிமா பிரபலங்கள்: அப்படியானால் என்னதான் பிரச்சனை? வழக்கறிஞர் வந்தனா ஷா இதுகுறித்து ஒரு பதிவு போட்டுள்ளார். ரகுமானுக்கும், சாய்ராவுக்கும் இவர் ஒருவரே வழக்கறிஞர்.. சினிமா பிரபலங்களின் லாயர் இவர்தான்.. நிறைய பேருக்கு விவாகரத்து வாங்கி தந்தவர்.. ரகுமான் தம்பதி பிரிவு குறித்து சொல்லும்போது, "2 பேருமே கருத்தொருமித்தே பிரிகிறார்கள். இந்த பிரிவுக்கு காரணம் செக்ஸ் கிடையாது. இல்லீகலான வேறு விஷயமும் கிடையாது.

பிரபலங்களுக்கு ஒருகட்டத்தில் வாழ்க்கை போரடித்துவிடும். அதனால் பிரிந்துவிடலாம் என்று பரஸ்பரம் பேசி பிரிகிறார்கள். மேலைநாடுகளில் மட்டுமே இருந்த பழக்கம், தற்போது இந்தியாவுக்குள்ளும் வந்துவிட்டது. சில பிரபலங்கள், திருமணம் முடிந்து ஒரு இரவு மட்டும் சேர்ந்து இருப்பார்கள்.. அடுத்த நாள் அவரவர் வேலையை பார்த்து பிரிந்து சென்றுவிடுவார்கள்..

தொடை நடுங்கி: இப்படித்தான் தென்னிந்தியாவை சேர்ந்த நடிகை ஒருவர், பிரபல நடிகரை திருமணம் செய்தார்.. மகிழ்ச்சியான வாழ்க்கையை அவர்கள் வாழ்ந்துட்டு இருந்தாங்க.. ஆனால், தன்னுடைய அப்பாவை பார்த்ததுமே அந்த நடிகர் தொடை நடுங்கும் பூனையாக மாறிவிடுவார்.. அந்த நடிகையின் வாழ்க்கையை இப்படி கெடுத்தவர் அந்த மாமனார்.. இதனால் மகனின் திருமண வாழ்க்கையில் பிரச்சனை ஏற்பட்டுவிட்டது" என்றெல்லாம் வழக்கறிஞர் வந்தனா ஷா சொல்லியிருக்கிறார்.

ஈசிஆர் ரோட்டில் சில மாதங்களுக்கு முன்பு, "மறக்குமா நெஞ்சம்" என்ற இசை நிகழ்ச்சி நடந்தது.. ரகுமானுக்கு அவரது சினிமா வாழ்வில் சின்ன கரும்புள்ளி என்றால், இந்த நிகழ்ச்சியைதான் சொல்லணும்.. இதுக்கு இவர்கூட காரணம் இல்லை.. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள்தான் காரணம். 5 ஆயிரம் பேர் கூடவேண்டிய இடத்தில், 21 ஆயிரம் டிக்கெட்கள் விற்கப்பட்டுள்ளன..

ஈசிஆர் ரோடு: இது களேபரமாகி, ஈசிஆர் சாலையே ஸ்தம்பித்துவிட்டது.. மிகப்பெரிய சர்ச்சையாகிவிட்டது.. ரகுமான் ஒரு பதிவு போட்டு, "நீங்க வாங்கின டிக்கெட்டை எனக்கு மெயிலில் அனுப்பி வையுங்கள், நான் பணம் தருகிறேன்" என்று பதிவிட்டார். இந்த விவகாரம்தான் கணவன் மனைவி பிரச்சனைக்கு காரணம் என்று சிலர் சொல்கிறார்கள். ஆனால் இதுவும் தவறான தகவல்.

வழக்கறிஞர் வந்தனா ஷா சொன்னது, எல்லா கோடீஸ்வரர்களுக்கும் வரக்கூடிய சின்ன கசப்புததான்.. அந்த கோடீஸ்வரர்களுக்கு மாறக்கூடிய மனநிலைமைதான்.. அதில் ஒருசிலர் பிரிந்துவிடுவார்கள். அதுதான் இந்த விஷயத்திலும் காரணம். தங்கள் குழந்தைகளுக்காக எத்தனையோ தம்பதிகள் ஒன்றுசேர்ந்த சம்பவம் நிஜத்திலும் உண்டு, சினிமாவிலும் உண்டு. இப்படியொரு நிகழ்வு இவர்களுக்குள் நடக்கும்.

சேரவேண்டும்: ரகுமான் தம்பதிக்குள், பூ பூக்குற நொடி போல தான் இந்த பிரிவு நடந்துள்ளது.. நீரடித்து நீர் விலகவே விலகாது.. குழந்தைகள் 3 பேருக்காகவும் ஒன்று சேருவார்கள்.. அந்த இறைவன் இவர்களுக்கு துணை புரியட்டும்" என்று செய்யாறு பாலு தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+