மழையால் பாதிக்கப்பட்ட 1000 பேருக்கு உணவோடு வந்த அறந்தாங்கி நிஷா.. பெண் சொன்ன அதிர்ச்சி வார்த்தை
சென்னை: சென்னையில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட லட்சக்கணக்கான மக்கள் உணவு இல்லாமல் தவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் விஜய் டிவி பிரபலமான நடிகை அறந்தாங்கி நிஷா திருச்சியில் இருந்து சென்னைக்கு தன்னுடைய சொந்த செலவில் வந்து தன்னால் முடிந்த அளவிற்கு ஆயிரம் மக்களுக்கு சாப்பாடு, தண்ணி பாட்டில் போன்றவற்றை வாங்கிக் கொடுத்திருக்கிறார்.

புயலால் பாதிக்கப்பட்ட இடத்திற்கு சென்ற அறந்தாங்கி நிஷா அங்கு மக்களிடம் பேசிக் கொண்டிருக்கும்போது அங்கு ஒரு பெண் தான் காலையிலிருந்து இன்னும் சாப்பிடவில்லை என்று சொல்லி இருக்கிறார். அந்த வீடியோவை அறந்தாங்கி நிஷா பகிர்ந்து இருக்கிறார்.
தென்மேற்கு வங்க கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக மிக்ஜாம் புயல் உருவானது. இதனால் சென்னையில் டிசம்பர் 4ஆம் தேதி மழை கொட்டோ கொட்டு என்று கொட்டி தீர்த்தது. இதனால் பெரும்பாலான ஆறுகள் நிரம்பி விட்டதால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வீடுகளுக்குள் மழை நீர் புகுந்து சாமானிய மக்கள் மட்டுமல்லாமல் பல பிரபலங்களும் இந்த மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர்.
சென்னையில் மட்டும் 50க்கும் மேற்பட்ட நிவாரண முகாம்களில் 6000திற்கு மேற்பட்ட மக்கள் தங்க வைக்கப்பட்டு இருக்கின்றனர். பெரும்பாலான பகுதிகளில் இன்னும் மழை நீர் வடியாததால் பலர் பசி பட்டினியோடு அத்தியாவசிய பொருட்கள் வாங்க முடியாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர்.
https://tamil.oneindia.com/television/aranthangi-nisha-donated-food-items-to-michaung-affected-chennai-people-563555.html
இந்த நிலையில் விஜய் டிவி நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமான அறந்தாங்கி நிஷா தன்னுடைய சொந்த ஊரான திருச்சியில் இருந்து சென்னை மக்களுக்கு உதவி செய்வதற்காக தன்னால் முடிந்த அளவிற்கு தண்ணீர் பாட்டியல்கள், உணவுப் பொருள்கள் போன்றவற்றை வாங்கிக் கொண்டு வந்திருக்கிறார்.
அதோடு சென்னைக்கு வருவதற்காக பல வாகனங்களில் பேசி இருந்ததாகவும் அவர்கள் சென்னைக்கு என்றால் எங்களால் வர முடியாது என்று மறுத்துவிட்டதாகவும் வீடியோ ஒன்று வெளியிட்டு இருந்தார். இது பெரிய அளவில் வைரலாகி வந்தது. இந்த நிலையில் சென்னைக்கு வந்து இப்போது அறந்தாங்கி நிஷா சொன்னது போலவே ஆயிரம் சாப்பாடுகளை வாங்கி அங்கு சாப்பாடு இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கும் மக்களுக்கு கொடுத்து இருக்கிறார்.

அந்த வீடியோவையும் அறந்தாங்கி நிஷா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். அப்போது ஒரு பகுதியில் இருக்கும் மக்களுக்கு அந்த சாப்பாடை எடுத்துக் கொடுத்துக் கொண்டிருக்கும் போது அங்கிருந்தவர்கள் நாங்கள் இன்னும் காலையிலிருந்து சாப்பிடவில்லை என்று சொல்லிக் கொண்டிருக்கின்றனர். இதைக் கேட்டு அறந்தாங்கி நிஷா அதிர்ச்சியாகி இருக்கிறார். காரணம் அவர் சாப்பாடு கொடுக்கும் போது நேரம் மதியம் தாண்டி விட்டது.
https://www.instagram.com/reel/C0gUBYqxGe3/?utm_source=ig_web_copy_link&igshid=MzRlODBiNWFlZA==
அதோடு நிஷா அங்கிருக்கும் பெண்களிடம் யாருக்கேனும் நாப்கின் தேவைப்படுகிறதா? அதுவும் நான் கொண்டு வந்திருக்கிறேன் என்று அத்தியாவசிய பொருள்களை தன்னால் முடிந்த அளவிற்கு வாங்கி கொடுத்து இருக்கிறார். இது பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. பல பிரபலங்கள் தங்களிடம் பெரிய அளவில் பணம் வசதி இருந்தாலும் யாருக்கும் உதவி செய்யாமல் இருக்கும் நிலையில் வளர்ந்து வரும் நடிகையான அறந்தாங்கி நிஷா எடுத்து வைத்திருக்கும் முயற்சிக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications