Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எந்த பிரச்சனை என்றாலும் நண்பராக வந்து நிற்பது உதயநிதி ஸ்டாலின் தான்.. அறந்தாங்கி நிஷா கொடுத்த விளக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகையும் பட்டிமன்ற பேச்சாளருமான அறந்தாங்கி நிஷா சமீபத்தில் ஒரு பட்டிமன்றத்தில் பேசி இருந்தார். அப்போது அந்த பட்டிமன்றத்தில் பேசும்போது உதயநிதி ஸ்டாலின் பற்றியும் கலைஞர் மற்றும் மு க ஸ்டாலின் என பலரைப் பற்றி பேசி இருக்கிறார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

சின்னத்திரையில் இருந்து ஒரு சிலர் வெள்ளி திரையில் அடி எடுத்து வைத்து தனக்குன்னு ஒரு இடத்தை பிடித்திருக்கிறார்கள். அந்த வரிசையில் ஒருவர் தான் அறந்தாங்கி நிஷா. ஆரம்பத்தில் பட்டிமன்ற பேச்சாளராக தன்னுடைய வாழ்க்கையை தொடங்கி அறந்தாங்கி நிஷா விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு உட்பட ஒரு சில நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார்.

Aranthangi Nisha Udhayanidhi Stalin vijay tv

பிறகு விஜய் டிவியில் பிரபலமாகி வந்து சமயத்தில்தான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அதிகமாக ட்ரோல் சந்தித்திருந்தார். ஆனாலும் அந்த நிகழ்ச்சிக்கு பிறகு தொடர்ந்து விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியும், போட்டியாளராகவும் கலந்து கொண்டு வருகிறார். சின்னத்திரை மட்டுமல்லாமல் வெள்ளித்திரையிலும் குணசித்திர வேடங்களிலும், காமெடி கேரக்டரிலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.

சினிமா மற்றும் சின்னத்திரை என பிஸியாக இருக்கும் அறந்தாங்கி நிஷா சோஷியல் மீடியாவிலும் அவ்வப்போது வீடியோக்கள் வெளியிட்டுக் கொண்டிருக்கிறார். இதுவெல்லாம் ஓரங்கட்டுற மாதிரி தனக்கு பிரபலம் கொடுத்த பட்டிமன்றங்களிலும் கலந்து கொண்டிருக்கிறார். அப்படி ஒரு பட்டிமன்றத்தில் அறந்தாங்கி நிஷா பேசியது தான் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த பட்டிமன்றத்தில் அறந்தாங்கி நிஷா பேசும் போது, நான் கர்ப்பமாக இருக்கும் சமயத்தில் என்னுடைய கணவரிடம் அதை நேரடியாக சொல்லாமல் நம்ம வீட்டிற்கு ஒருத்தங்க வர போறாங்க என்று சொன்னதும்.. உன் தங்கச்சி வரப்போகிறாளான்னு கேட்டாரு. அப்புறம் உங்களை தட்டி கேக்க ஒரு ஆளு வர போறாங்க என்று சொன்னதும் உங்க அப்பன் வரப்போறாரா? என்று கூட கேட்டாரு.

அப்போது கூட நான் என்ன சொல்ல வரேன்னு அவருக்கு புரியல. எனக்கு சாம்பல் திங்கணும்னு தோணுதுன்னு சொல்ல, உங்க குடும்பம் சுடுகாட்டுல சாம்பல் தின்ன குடும்பாமடி என்று கேட்டார். இதனால் நான் கடுப்பாகி அடேய் நான் மாசமா இருக்கேன்னு சொன்னேன். அப்புறம் தான் அவருக்கு புரிஞ்சது. இப்படி தான் ஆண்களுடைய மனநிலை இருக்கிறது.

நாம ஒரு விஷயத்தை சொன்னா அவங்களால ஈஸியா புரிஞ்சிக்க முடியாது. ஆனா இப்ப இருக்கிற பெண்கள் எல்லாம் அப்படி கிடையாது. இன்ஸ்டாகிராம் லைவ்ல நான் கன்சீவா இருக்கிறேன் ஃபிரண்ட்ஸ் என்று சொல்லிட்டு இருந்தாங்க. அது ஒரு பக்கம் இருக்கட்டும் ஆனால் தற்போதைய தமிழக அரசு ஒரு குழந்தை பிறந்தால் இது இனி எங்க குழந்தை என்று அந்த குழந்தைக்கு 16 ஆயிரம் ரூபாய் கொடுத்து, குழந்தை பிறந்ததும் நான்காயிரம் ரூபாய் மதிப்புள்ள கிட் கொடுக்கிறார்கள்.

இது பலருக்கு உதவியாக இருக்கும். இப்படி ஒரு மனநிலையில் உள்ள எங்கள் முதல்வரின் மகன் அவர் வழியில் வந்து இன்னும் அதிகமாக செய்ய போகிறார். கலைஞரை பற்றி சொல்லும் போது தொண்டர்களுக்காக நிறைய செஞ்சு இருக்காரு என்று சொல்லுவாங்க. நம்முடைய முதல்வரை பற்றி சொல்லும் போது தொண்டனாகவே நிறைய விஷயம் பண்ணியிருக்காங்க. ஆனால் உதயநிதி அவர்களை பற்றி சொல்லும் போது நண்பனாகவே எல்லோரிடமும் பழகிட்டு இருக்கிறார்கள்.

நட்பு ரீதியாக எல்லோரிடமும் பழகி யாருக்கு என்ன பிரச்சனை நடந்தாலும் அங்கு சக நண்பராக உதயநிதி நிற்கிறார். அவருக்கு என்னுடைய பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று அந்த விழாவில் அறந்தாங்கி நிஷா பேசியிருக்கிறார். இதுதான் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+