ராத்திரியில் அந்த நடிகரோடு கொண்டாட்டம்..திவ்யா பற்றி அர்ணவ் குற்றச்சாட்டு..வெளியிட்ட ஆதாரங்கள்
சென்னை: நடிகை திவ்யா ஸ்ரீதர் பற்றி அவருடைய கணவர் அர்ணவ் அடுக்கடுக்கான பல குற்றச்சாட்டுகளை வைத்திருக்கிறார்.
அதில் தான் திவ்யாவால் ஜெயிலுக்கு போன அன்று இரவு சீரியல் நடிகர் ஈஸ்வரனோடு சேர்ந்து திவ்யா கேக் வெட்டி கொண்டாடியதாக அர்ணவ் கூறி இருக்கிறார்.
அதுமட்டுமல்லாமல் எனக்கு முன்பு சன் டிவி சீரியல் நடிகர் ஒருவரை திவ்யா காதலித்தார், இப்போதும் அந்த நபர் என் வீட்டுக்கு வந்து போய்க் கொண்டிருக்கிறார் என்று அர்ணவ் அடுத்த குற்றச்சாட்டு வைத்திருக்கிறார்.

சமூக வலைதளத்தில் சில மாதங்களுக்கு முன்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய திவ்யா ஸ்ரீதர் மற்றும் அர்ணவ் குடும்பப் பிரச்சனை மீண்டும் தலை தூக்கி இருக்கிறது. இதில் யார் பக்கம் சரி யார் பக்கம் தவறு என்று யூகிக்க முடியாத வகையில் தான் இவர்கள் இருவரும மாறி மாறி குற்றம் சுமத்தி வருகின்றனர்.
சுமார் ஐந்து வருடங்களாக காதலித்து திருமணம் செய்த இந்த தம்பதி இரண்டு மாதங்களுக்குள் கருத்து வேறுபாடால் பிரிந்து விட்டது. திவ்யா ஸ்ரீதர் கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் என்னுடைய கணவர் என்னை அடித்தார் இன்னொரு நடிகையோடு தொடர்பில் இருக்கிறார் என்று அர்ணவ் மீது கொடுத்த கம்ப்ளைன்ட் காரணமாக அர்ணவ் ஜெயிலுக்கு போயிட்டு மீண்டும் திரும்ப வந்து சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் திவ்யாவிற்கு சமீபத்தில் தான் பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த பிறகு மீண்டும் தன்னுடைய நடிப்பில் கவனத்தை வருத்தி வரும் நிலையில் திடீரென்று பிரபல செய்தி சேனல் ஒன்றிருக்கு பேட்டி அளித்து அர்ணவைப் பற்றி பல ஆதாரங்களை வெளியிட்டு அடுக்கடுக்கான குற்ற சாட்டுகளை வைத்திருந்தார்.
அதில் அர்ணவ் தன்னை காதலிக்கும் முன்பு திருநங்கை ஒருவரோடு சில வருடங்களாக குடும்ப நடத்தியிருக்காரு. எங்க பிரச்சனை மீடியாவில் வெளியே தெரிய ஆரம்பித்த பிறகுதான் அந்த திருநங்கை என்னை தொடர்பு கொண்டு அர்ணவ் பற்றி எனக்கு பல ஸ்க்ரீன் ஷாட் ஆடியோ மெசேஜ் எல்லாம் அனுப்புனாங்க. அதுக்கு பிறகு தான் எனக்கு இந்த ரகசியம் எல்லாம் தெரிய வந்துச்சு.
அது மட்டும் இல்ல இலங்கை பெண் ஒருவரை காதலித்து கர்ப்பம் ஆக்கி பிறகு அந்த கர்ப்பத்தை அபார்ஷன் செய்து விட்டு அந்தப் பெண்ணையும் கழட்டி விட்டுட்டாரு. அது குறித்தும் இன்ஸ்டாகிராம் மூலமாக அந்த பொண்ணோட பிரண்ட் தான் எனக்கு சொல்லுச்சு. அந்த இலங்கைப் பெண்ணின் பெற்றோர் சென்னையில் வாழ்ந்த போது அவங்க குடும்பத்தோட தான் அர்ணவ் வாழ்ந்து இருக்காரு பிறகு அங்கிருந்தும் வந்துட்டாராம்.
இந்த தகவல் எல்லாமே எனக்கு அர்ணவ் பிரிஞ்ச பிறகு தான் கிடைச்சிருக்கு. ஆனால் இதையெல்லாம் மிஞ்சும் வகையில் அர்ணவ் ஆண் பைலட் ஒருவரிடமும் அவரை காதலிப்பது போன்று பேசி அவரிடமும் பணம் வாங்கி பிறகு அவரையும் ஏமாற்றி இருக்கிறார். அதனால் அவர் தற்கொலையும் செய்துவிட்டாராம். அது குறித்தும் அவருடைய உறவினர்கள் எனக்கு மெசேஜ் அனுப்புனாங்க என்று அடுக்கடுக்கான பல குற்றச்சாட்டுகளை கூறியிருந்தார்.
அதைத்தொடர்ந்து திவ்யா என்ன பத்தி மட்டும் குறை சொல்றாளே, அவங்க மட்டும் யோக்கியமா? அவ புருஷன் கூட வாழ்ந்துகிட்டு இருக்கும்போது தான் என்கூடயும் வாழ்ந்துகிட்டு இருந்தா. டைவர்ஸ் கூட வாங்காமலேயே என் கூட வாழ்ந்துகிட்டு இருந்தா. அவளுக்கு ஒரு குழந்தை இருந்ததே எனக்கு அப்போ தெரியாது. எங்க கல்யாணத்துக்கு கொஞ்ச நாள் முன்னாடி தான் அதெல்லாம் தெரிய வந்துச்சு. இது மட்டும் தப்பு இல்லையா?
அது மட்டும் இல்ல, நான் ஏற்கனவே சொன்ன மாதிரி எங்க பிரச்சனையில் காரணமா இருந்தது நான் நண்பனு நெனச்சிட்டு இருந்த சீரியல் நடிகர் ஈஸ்வரன் தான். என் கல்யாணம் முடிஞ்ச பிறகு 45 நாளு நான் திவ்யா கூட பேசாம இருந்தேன். அதுக்கு காரணம் அந்த ஈஸ்வரன் தான். வெளிய தான் திவ்யா ஈஸ்வரனை அண்ணன்னு கூப்பிடுவா, ஆனா அவங்க சாட்டிங்ல எப்பவுமே நீ நான்னு தான் உரிமையா பேசி இருப்பாங்க.
நான் செய்யாத தப்புக்கு என்னை ஜெயிலுக்கு அனுப்பி வச்ச அன்னைக்கு ராத்திரி கூட ஈஸ்வரனோடு கேக் வெட்டி திவ்யா கொண்டாடி இருக்காங்க. அது மட்டும் இல்ல இன்னும் இருக்கு, என்ன காதலிக்கிற முன்னாடி சன் டிவியில் ப்ரைம் டைம் சீரியல் நடிகர் ஒருவரோடு திவ்யாவுக்கு காதல் இருந்தது.
பிறகு என்ன காதலிச்சதனால கொஞ்ச நாள் அமைதியா இருந்தாங்க. இப்போ என்னுடைய வீட்டிலேயே வந்து அந்த நடிகர் திவ்யாவை பார்த்துட்டு போறாரு என்று அர்ணவ் ஆடியோ ஒன்றில் பேசி செய்தி சேனலுக்கு அனுப்பி இருக்கிறார். தற்போது இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
-
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
Tamil New Year Wishes in Tamil: சித்திரை திருநாளில் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் பகிர அழகிய படங்கள் -
ஜனநாயகன் லீக்.. இயக்குநர் அமீர் கருத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு.. ஆர்கே செல்வமணி விளக்கம்












Click it and Unblock the Notifications