கனத்த இதயத்தோடு எழுதுறேன்! இப்போதான் எல்லாம் தெரிகிறது? பாலா பற்றி அருண் விஜய் போட்ட போஸ்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் விஜயகுமாரின் மகனான நடிகர் அருண் விஜய் இயக்குனர் பாலா பற்றி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட போஸ்ட் அதிகமான கமெண்ட்களை பெற்று வருகிறது.

இயக்குனர் பாலா இயக்கிய படங்கள் எல்லாமே வித்தியாசமான கதை அம்சத்தோடு தான் இருக்கும். சேது திரைப்படத்தில் தொடங்கிய இவருடைய பயணம் நந்தா, பிதா மகன், நான் கடவுள், அவன் இவன், பரதேசி, தாரதப்பட்டை என்று நீண்டு கொண்டே இருக்கிறது. இவருடைய திரைப்படங்களில் நடிக்கும் நடிகர்கள் இவரை விட வேறு எந்த இயக்குனரும் கஷ்டப்படுத்தவே மாட்டார், இவர் திரைப்படத்தில் நடித்து விட்டால் மற்ற திரைப்படங்களில் நடிப்பது ரொம்பவும் எளிமை என்று பல பேட்டியில் பேசி இருக்கிறார்கள்.

vijayakumar anitha

இந்த நிலையில் தான் 2022 ஆம் ஆண்டு பாலா இயக்கத்தில் சூர்யா, கீர்த்தி செட்டி உட்பட பலர் நடிப்பில் வணங்கான் திரைப்படம் தொடங்கப்பட்டது. இந்த திரைப்படத்தில் இருந்து சூர்யா விலகி விட சூர்யாவிற்கு பதில் நடிகர் அருண் விஜய் நடிக்க தொடங்கி இருந்தார்.

நடிகர் விஜயகுமாரின் மகனான அருண் விஜய் சூர்யாவின் கேரக்டருக்கு அப்படியே பொருந்தி போக வணங்கான் திரைப்படம் தொடர்ந்து நடைபெற்று வந்தது. தற்போது பணிகள் முடிந்து ரிலீஸுக்கு தயாராகி இருக்கிறது. இந்த நிலையில் வணங்கான் திரைப்படத்தை அருண் விஜய் மற்றும் அவருடைய குடும்பத்திற்கு பிரத்யேகமாக திரையிட்டு காட்டப்பட்டிருக்கிறது.

அது குறித்து அருண் விஜய் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவு போட்டு இருக்கிறார். அதில் "மன நெகிழ்வுடன் கனத்த இதயத்துடனும் என் இயக்குனர் திரு பாலா சார் அவர்களுக்கு, நான் திரையுலகில் கால் பதித்த காலத்தில் இருந்து உங்கள் படைப்புகளின் ரசிகனாகவும், உங்களை கண்டு வியந்து நேசித்து, ஒரு நடிகனாக "எனக்கும் இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்காதா" என ஏங்கியவனுக்கு தங்களின் இயக்கத்தில் பணியாற்ற வணங்கான் படத்தின் மூலம் வாய்ப்பளித்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

vijayakumar anitha

நம் படப்பிடிப்பின் பொழுது கூட இக்கதையின் பாதிப்பை நான் முழுமையாக உணரவில்லை. ஆனால் அதனை இப்பொழுது வெள்ளித் திரையில் காண்கையில் என் உணர்ச்சிகளை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை. என் பெற்றோரை பெருமை செய்தமைக்கு உங்களை வணங்குகிறேன். எனது திரையுலக பயணத்தில் வணங்கான் ஒரு மிக முக்கியமான பாகமாக அமையும் என்பதில் எனக்கு துளி அளவு சந்தேகம் இல்லை.

இப்படைப்பின் மீது முழுமையான நம்பிக்கை வைத்து பக்க பலமாக இருந்து கொண்டிருக்கும் திரு சுரேஷ் காமாட்சி அவர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள். மக்கள் அனைவரும் இப்படத்தை விரைவில் திரையில் காணும் நாள் நோக்கி மிகவும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறேன் என்று பதிவிட்டு இருக்கிறார். அதோடு திரைப்படத்தை தன்னுடைய குடும்பத்தோடு பார்த்தபோது எடுத்த புகைப்படத்தையும், தான் இயக்குனர் பாலாவோடு இருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்து இருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+