Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வெட்கத்தில் முகம் சிவந்த ஷபானா.. சந்தோஷத்தில் நெகிழ்ச்சி போஸ்ட் போட்ட ஆரியன்.. இந்த அன்பு தொடரட்டும்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜீ தமிழில் ஒளிபரப்பான செம்பருத்தி சீரியல் மூலம் பிரபலமடைந்த சீரியல் நடிகை ஷபானாவும் பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து வந்த நடிகர் ஆரியனும் திருமணம் செய்து கொண்டனர். ஆரியன் தன்னுடைய மனைவியின் புகைப்படத்தை தன்னுடைய சோஷியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து நெகிழ்ந்து இருக்கிறார்.

சின்னத்திரையில் ஒன்றாக நடிக்கும் பலர் காதலித்து திருமணம் செய்து இருக்கிறார்கள். அவர்களுடைய திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக பயணித்துக் கொண்டிருக்கிறது. அந்த வரிசையில் சீரியல் நடிகை ஷபானா மற்றும் ஆரியன் தம்பதியும் பலருடைய ஃபேவரைட் ஆக இருக்கிறார்கள். ஷபானா சின்னத்திரையில் செம்பருத்தி சீரியல் மூலமாகத்தான் முதல் முறையாக அறிமுகமானார்.

Zee Tamil Shabana

செம்பருத்தி கதாநாயகி

இவருக்கு முதல் சீரியலே பெரிய அளவில் பெயர் வாங்கி கொடுத்து விட்டது. பொதுவாக டிஆர்பியில் சன் டிவி சீரியல்கள் தான் எப்போதும் டாப் ஒன் இடத்தில் இருக்கும். ஆனால் அந்த வரலாறையே செம்பருத்தி சீரியல் உடைத்து விட்டது. செம்பருத்தி சீரியல் டிஆர்பியில் டாப் 10 இடத்தில் முதல் இடத்தில் பல மாதங்களாக இருந்திருக்கிறது. அதே நேரத்தில் அந்த சீரியலால் ஷபானாவுக்கு அதிகமான ரசிகர்கள் உருவாகிவிட்டனர்.

இணையத்தில் காதல்

ஷபானா சீரியல் நடிகர் ஆரியனை காதலிக்கிறார் என்ற செய்தி தெரிய வந்ததும் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது. அந்த நேரத்தில் ஆரியன் பாக்கியலட்சுமி சீரியலில் செழியன் கேரக்டரில் நடித்துக் கொண்டிருந்தார். இவர்கள் இருவரும் வேறு வேறு சேனலில் நடித்துக் கொண்டிருக்கும் போது இவர்களுக்குள் காதல் எப்படி ஏற்பட்டது என்ற கேள்வி அதிகமாக இருந்தது. ஆனால் சோஷியல் மீடியாவில் தான் இவர்களுக்குள் காதல் ஏற்பட்டு இருக்கிறது என்று பிறகு இவர்களே அறிவித்திருந்தார்கள்.

காதல் திருமணம்

அதுபோல இவர்கள் இருவரும் வெவ்வேறு மதத்தை சார்ந்தவர்கள் என்பதால் திருமணத்திற்கு ஷபானா குடும்பத்தினர் சம்மதிக்கவில்லை. ஆரியன் குடும்பத்தினர் தான் திருமணத்தை நடத்தி வைத்திருந்தனர். திருமணத்திற்கு பிறகு ஷபானா சன் டிவியில் மிஸ்டர் மனைவி சீரியலில் கதாநாயகியாக நடித்துக் கொண்டு இருந்தார். பிறகு அந்த சீரியலில் இருந்து விலகிவிட்டார்.

ஷபானா புகைப்படம்

அதுபோல ஆரியன் பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகி ஜீ தமிழில் ஒளிபரப்பான மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் கதாநாயகனாக நடித்திருந்தார். இப்போது சில திரைப்படங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் இன்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷபானாவின் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து இருக்கிறார். அதில் ஷபானா முன்பு இருந்தது விட உடல் எடை கூடியது போல இருக்கிறது.

காதல் பெருகட்டும்

இதை பார்க்கும் பல ரசிகர்கள் ஷபானா கர்ப்பமாக இருக்கிறாரா? என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள். ஆனால் அந்த பதிவில் ஆரியன் பதில் கொடுக்கவில்லை. தன் மனைவி மீது தனக்கு இருக்கும் காதலை வெளிப்படுத்தி இருக்கிறார். அதில் "இந்த பதிவு நன்றி தெரிவிக்கும் பதிவு. யாரும் என்னை நம்பாத போது அவள் என்னை தேர்ந்தெடுத்தாள். எனக்கு வேலை இல்லாத போது அவள் என்னை ஒழுக்க ரீதியாகவும், நிதி ரீதியாகவும் ஆதரித்தாள்.

மகிழ்ச்சி பதிவு

நாங்கள் சிரமப்படும் போதெல்லாம் நான் பாதுகாப்பாகவும் வசதியாகவும் இருப்பதை அவள் உறுதி செய்தாள். இந்த வாழ்நாளில் ஒரு ஆணுக்கு இதைவிட என்ன வேண்டும்? பாக்கியம் மற்றும் நன்றிக்கு அப்பாற்பட்டவள். ஒரு நாள் உன்னை பெருமைப்படுத்துவேன் என்று உறுதி அளிக்கிறேன். என்னுடைய லேடி லக்.. எல்லாவற்றிற்கும் நன்றி ஷபானா" என்று அந்த பதிவில் பகிர்ந்து இருக்கிறார்.

ஆசிர்வாதங்கள்

இதற்கு சின்னத்திரை பிரபலங்கள் பலரும் உங்களுடைய இந்த அன்பு இதேபோல வாழ்நாள் முழுக்க பெருகிக்கொண்டே இருக்கட்டும் என்று ஆசீர்வதிக்கிறார்கள். பல ரசிகர்கள் விரைவில் உங்கள் வீட்டிற்கு ஒரு குட்டி குழந்தை வரவேண்டும் என்று ஆசீர்வதித்து இருக்கிறார்கள். இன்னும் சிலர் இவர்களுடைய காதலை பார்க்கும்போது சந்தோஷமாக இருக்கிறது என்று கூறி இருக்கிறார்கள்.

Zee Tamil Shabana

குவியும் கமெண்ட்ஸ்

இன்னும் ஒரு சிலர் ஷபானா மீண்டும் சீரியலுக்கு நடிக்க வரவேண்டும் என்று அன்பு கட்டளை போட்டு இருக்கிறார்கள். இப்படியாக இந்த போஸ்ட் போட்ட சில நிமிடங்களிலேயே ஆயிரத்துக்கும் மேற்பட்ட கமெண்ட்டுகள் குவிந்து கொண்டு இருக்கிறது. சீரியல் தம்பதிகளான ஷபானா மற்றும் ஆரியன் உங்களுக்கு எவ்வளவு பிடிக்கும்? மக்களே!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+