சூட்டிங்கில் நடந்த பரிதாபம்.. ஜீ தமிழ் சீரியல் ஹீரோவுக்கு வயிற்றில் காளை குத்தியதால் படுகாயம்
சென்னை: நடிகர் அசோக் படப்பிடிப்பின்போது எதிர்பாராத விபத்தில் சிக்கிய சம்பவம் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 'வட மஞ்சு விரட்டு' என்ற புதிய படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது, அவரை ஒரு காளை முட்டி தூக்கியுள்ளது. இந்த எதிர்பாராத விபத்தால் படக்குழுவினர் அதிர்ந்து போயினர்.

யார் இந்த நடிகர் அசோக்
நடிகர் அசோக், தமிழ் சினிமாவில் நன்கு அறியப்பட்டவர். இவர் 'பிடிச்சிருக்கு', 'கோழி கூவுது' உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். கோழி கூவுது படத்தில் இடம்பெற்ற "சாரப்பாம்பு போல", "வாடாமல்லி காரி என் வருங்கால கொலைகாரி" போன்ற பாடல் 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட். இந்த பாடல் மூலம் இவருக்கு அதிகமான பெண் ரசிகைகள் உருவாகி இருந்தனர்.
சினிமாவில் மட்டுமில்லாமல், ஜீ தமிழ் போன்ற சின்னத்திரை சீரியல்களிலும் இவர் நடித்து, ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமான ஒரு முகமாக உள்ளார். அதுவும் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் "மௌனம் பேசியதே" சீரியலில் இவர் கதாநாயகனாக நடித்து சின்னத்திரை ரசிகர்கள் மனதிலும் தனக்கென ஒரு இடம் பிடித்திருக்கிறார். தனது கடுமையான உழைப்பாலும், எளிமையான குணத்தாலும் ரசிகர்களின் ஆதரவைப் பெற்றுள்ளார்.

படப்பிடிப்பில் நடந்த விபரீதம்
அசோக் நடிக்கும் படத்திற்கான சூட்டிங்கில் காளை முட்டியதில், நடிகர் அசோக்கின் வயிற்றுப் பகுதியில் ரத்தக் காயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். படக்குழுவினர் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.
பொதுவாக, இதுபோன்ற ஆக்ஷன் காட்சிகளைப் படமாக்கும்போது மிகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும். இருப்பினும், இப்படி ஒரு விபத்து நடந்தது படக்குழுவினரை கவலையில் ஆழ்த்தியுள்ளது. நடிகர் அசோக் விரைவில் குணமடைய வேண்டும் என ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications