நெப்போலியன் முதல் படத்தில் நடிக்கும் போது இப்படித்தான் இருந்தாரு! சுகன்யா பெஸ்ட்! நடிகை அஸ்வினி ஓபன்
சென்னை: புது நெல்லு புது நாத்து திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமான அஸ்வினி நம்பியார் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட போது தன்னோடு புது நெல்லு புது நாத்து திரைப்படத்தில் நடித்த நடிகர் நெப்போலியன் மற்றும் சுகன்யா குறித்து பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.
ஒரு சிலரை பார்க்கும்போது இவர்களுக்கு மட்டும் வயதே ஆகாதா என்ற வியப்பை ஏற்படுத்துகிறார்கள். அதில் ஒருவர் தான் நடிகை அஸ்வினி நம்பியார் என்ற ருத்ரா. இவர் புது நெல்லு புது நாத்து, கிழக்கு சீமையிலே போன்ற கிராமப்புறம் சார்ந்த பல திரைப்படங்களில் நடித்து பிரபலமடைந்தார். இப்போது தமிழ், மலையாளம், தெலுங்கு போன்ற பலமொழிகளிலும் சீரியல்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.

கிழக்கு சீமையிலே பட நடிகை
அதுபோல சில நடிகைகளை பார்க்கும்போது ரசிகர்களுக்கு வியப்பாக இருக்கும் அவங்களா இவங்க? என்று எல்லோருக்கும் கேள்விகள் வரும். அது போல தான் கிழக்குச் சீமை திரைப்படத்தில் "ஆத்தங்கர மரமே அதில் உறங்கும் கிளியே" என்ற பாடலுக்கு ஆட்டம் போட்ட ருத்ராவை ரசிகர்கள் இப்போதும். மறக்கவில்லை.
மாடலிங்கால் கிடைத்த வாய்ப்பு
ருத்ரா ஸ்கூல் படித்துக் கொண்டிருக்கும் போதே மலையாள பத்திரிகைகளில் தன்னுடைய தோழிகளோடு மாடலிங் புகைப்படங்களை எடுத்து வெளியிட்டு இருக்கிறார். அதை பார்த்து தான் இயக்குனர் பாரதிராஜா இவருக்கு புது நெல்லு புது நாத்து என்ற திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்திருந்தாராம்.

மரிக்கொழுந்து கேரக்டர்
புது நெல்லு புது நாத்து திரைப்படத்தில் மரிக்கொழுந்து என்ற கேரக்டரில் நடித்து இருந்தார். அதை தொடர்ந்து இவருக்கு மலையாளத்தில் சில திரைப்பட வாய்ப்புகள் கிடைத்திருக்கிறது. அதற்கு பிறகு தான் கிழக்கு சீமையிலே திரைப்படத்தில் பேச்சியம்மா கேரக்டரில் நடித்திருந்தார். இந்தப் படம் பெரிய ஹிட்டான பிறகு புதுப்பட்டி பொன்னுத்தாயி, முதல் பயணம், பெரிய தம்பி, கள்ளழகர், என்னவளே போன்ற திரைப்படங்களிலும் நடித்திருந்தார்.

புது நெல்லு புது நாத்து திரைப்படம்
திருமணத்திற்கு பிறகு சிங்கப்பூரில் செட்டில் ஆன அஸ்வினி சிங்கப்பூரில் எடுக்கப்படும் சீரியல்கள் மற்றும் குறும்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் தற்போது பேட்டி ஒன்றில் தன்னுடைய சினிமா அனுபவங்கள் குறித்து பேசி இருக்கிறார். அதில் நான் அறிமுகமான புது நெல்லு புது நாத்து என்ற திரைப்படத்தை என்னால் அவ்வளவு சீக்கிரத்தில் மறக்க முடியாது.
நெப்போலியன் கம்பீரம்
அந்த நேரத்தில் நான் சினிமாவில் அறிமுகமானபோது இருந்த சூழ்நிலையே வேறாக இருந்தது. என்னோடு அந்த திரைப்படத்தில் நெப்போலியன் சுகன்யா போன்றவர்களும் அறிமுகமானவர்கள். ஆனால் எல்லோருமே ஜாலியாக கலகலப்பாக இருப்பார்கள். நெப்போலியன் முதல் படத்திலேயே கம்பீரமான அழகாக இருப்பார். எந்த கேரக்டர் சொன்னாலும் அதை அப்படியே நடிக்க கூடியவர்.

சுகன்யாவின் டான்ஸ் திறமை
எங்களுக்கு நெப்போலியனை பார்க்கும்போதே பிரமிப்பாக இருக்கும். முதல் பட நடிகர் என்று சொல்ல முடியாத அளவிற்கு அழகாக நடிப்பார். நாங்கள் கூட சில டேக் வாங்குவோம். அவரை பார்த்து பொறாமைப்பட்டு இருக்கிறோம். ஆனால் அவர் கலகலப்பாக பேசுவார். அதுபோல சுகன்யா மேடம் அப்படித்தான்.
இப்போது பேசுவதில்லை
அவங்களும் நிறைய விஷயங்களை சொல்லித் தருவாங்க. அதுபோல சுகன்யா அருமையா டான்ஸ் ஆடுவாங்க. இப்போது எல்லாம் அவங்க கூட அதிகமா பேச முடியல. ஆனால் அந்த படத்தில் நடிக்கும் போது எல்லோரும் ஜாலியாக அரட்டை அடிச்சிட்டு ஒன்றாக தான் இருப்போம் என அந்த பேட்டியில் அஸ்வினி நம்பியார் என்ற ருத்ரா நெகிழ்ந்து பேசியிருக்கிறார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications