AVM Saravanan: ஏவிஎம் சரவணன் உடலுக்கு மல்லிகை பூவோடு வந்து அஞ்சலி செலுத்திய பார்த்திபன்.. கண்கலங்கிய சிவகுமார்
சென்னை: 86 வயதான ஏவிஎம் சரவணன் வயது மூப்பு காரணமாக இன்று டிசம்பர் 4ஆம் தேதி உயிரிழந்திருக்கிறார். அவருடைய உடலுக்கு பல திறை பிரபலங்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி இருக்கின்றனர். அப்போது நடிகர் பார்த்திபன் கையில் மல்லிகை பூவே கொண்டு வந்து அஞ்சலி செலுத்தி இருந்தார். அதுபோல நடிகர் சிவக்குமார் ஏவிஎம் சரவணன் உடலை பார்த்து கண்கலங்கி அழுது தனது அன்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
தமிழ் திரைப்பட வரலாற்றில் அழியாத தடத்தை பதித்த தயாரிப்பு நிறுவனங்களில் முதன்மையானது ஏ.வி.எம் நிறுவனம். ஏ.வி. மெய்யப்ப செட்டியார் தொடங்கிய இந்த நிறுவனம் பல தலைமுறைகளாக தமிழ் சினிமாவின் வளர்ச்சி, மாற்றம், புதுமை ஆகியவற்றிற்கு முக்கிய காரணமாக திகழ்ந்துள்ளது. அவருக்கு பிறகு நிறுவனத்தை மேம்படுத்தி புதிய உச்சிக்கு கொண்டு சென்றவர் அவரது மகன் ஏ.வி.எம் சரவணன்.

2014ஆம் ஆண்டை தொடர்ந்து ஏ.வி.எம் நிறுவனம் திரைப்பட தயாரிப்பில் இருந்து ஓரளவு விலகி இருந்தாலும், சினிமா வரலாற்றில் அவர்களின் பங்களிப்பு என்றும் அழியாததாகவே தொடர்கிறது. கடந்த சில மாதங்களாக உடல்நலம் சரியில்லாமல் இருந்த 86 வயதான ஏ.வி.எம் சரவணன் இன்று (டிசம்பர் 4) அதிகாலையில் காலமானார். அவரது உடல் ஏ.வி.எம் ஸ்டூடியோவில் உள்ள மூன்றாவது தளத்தில் பொது மக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ளது.
இந்த துயரச் செய்தி வெளியாகியதும், அரசியல், சினிமா, கலையுலகத்திலிருந்து பலரும் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். முதல்வர் மு. க. ஸ்டாலின் உட்பட பல்வேறு பிரபலங்கள் நேரடியாக சென்று அவருக்கு இறுதி மரியாதை செலுத்தினர்.
அஞ்சலி செலுத்திய பார்த்திபன்
ஏ.வி.எம் சரவணனின் மனிதநேயத்தையும், ஒழுக்கத்தையும் நினைவு கூறிய பார்த்திபன்,"ஏ.வி.எம் என்ற மூன்று எழுத்துகள் போலத்தான் அவர் வாழ்ந்த விதமும்-பணிவு, பண்பு, ஒழுக்கம். அவர் மிக எளிமையானவர் என்றாலும், உள்ளிருந்து வரும் மரியாதை ஒன்றை அனைவரிடமும் பெற்றவர். 'இறுதி மரியாதை' என்பதற்கே அவர் தகுதியில்லாதவர்; அவர் எப்போதும் மரியாதைக்குரியவரே," என உணர்ச்சியுடன் நினைவு கூர்ந்தார்.
மேலும்,"சரவணன் சாரின் படத்தை அஞ்சலியாக வைத்து, குறைந்தது 100 படங்களையாவது ஏ.வி.எம் நிறுவனத்தார் மீண்டும் தயாரிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டிருக்கிறேன்," எனவும் தெரிவித்தார்.
நடிகர் விஷாலின் இரங்கல்
ஏ.வி.எம் ஸ்டூடியோ தன்னுடைய கற்றல் தளமாக இருந்ததாக நினைவு கூறிய நடிகர் விஷால், "இந்திய திரைப்படத் துறையே ஒரு பெரும் ஆளுமையை இழந்துள்ளது. தயாரிப்பாளர்களின் அர்ப்பணிப்புக்கும் உழைப்புக்கும் அவர் ஒரு பள்ளி. அவரின் நினைவுகள் என்றும் நிலைத்து நிற்கும்," என தனது பதிவில் சோகத்தோடு கூறியுள்ளார்.
கண் கலங்கிய சிவகுமார்
ஏவிஎம் சரவணன் இறந்த செய்தியை கேட்டதும் நடிகர் சிவகுமார் தன்னுடைய மகன் சூர்யாவோடு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி இருந்தார். அப்போது சரவணன் உடலை பார்த்ததும் சிவக்குமார் கண்கலஙகி இருந்தார். பக்கத்தில் இருந்த நடிகர் சூர்யா ஆறுதல் சொல்லி சோகத்தின் உருவமாகவே நின்று கொண்டிருந்தார்.
ஏ.வி.எம் சரவணனின் மறைவு தமிழ் திரைப்பட வரலாற்றில் ஒரு காலத்தின் முடிவாக பலராலும் கருதப்படுகிறது. தொழில்நுட்ப முன்னேற்றம், புதிய முறைகள், தொழில் நுட்ப ஒழுக்கம் ஆகியவற்றை சினிமாவிற்கு கொண்டு வந்த குடும்பத்தின் முக்கிய தூணாக அவர் திகழ்ந்தார். அவரின் இழப்பு சினிமா துறைக்கு ஈடு செய்ய முடியாதது என்றே அனைவரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications