அய்யனார் துணை சீரியல்: வானதிக்கு பதிலடி கொடுத்த நடேசன்.. நிலாக்கு வந்த மெசேஜ்! சோழன் செய்த செம சம்பவம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் (Ayyanar Thunai serial today episode) அய்யனார் துணை சீரியலில் 2026 பிப்ரவரி 24ஆம் தேதிக்கான எபிசோடில் நடேசனின் வீட்டில் பொங்கல் கொண்டாட்டம் உற்சாகமாக நடைபெறுகிறது. இந்த விழாவில் சேரனின் காதலி சந்தா, பாண்டியனின் காதலி வானதி உள்ளிட்டோர் கலந்து கொண்டு குடும்பத்துடன் கொண்டாடுகிறார்கள். அப்போது எதிர்பாராத சம்பவம் நடக்கிறது. அது பற்றி விரிவாக பார்க்கலாம்.

அய்யனார் துணை இன்றைய எபிசோடு
அய்யனார் துணை சீரியலில் ( Ayyanar Thunai serial Feb 24 2026) நடேசனின் வீட்டில் பொங்கலை எல்லாரும் கொண்டாடுகிறார்கள். அனைவரும் சேர்ந்து சாப்பிட்டு கொண்டிருக்கின்றனர். அப்போது பல்லவன் மட்டும் எதையோ யோசித்து கொண்டு இருக்க, வானதி என்ன பல்லவா என்ன யோசிச்சிட்டு இருக்க? என்று கேட்கிறார். அதற்கு சோழன் இவங்க வேற வந்திருக்காங்களே குடும்பத்தை பிரித்துவிடுவாங்களோ என்று பயப்படுறான்னு நினைக்கிறேன் என்று சொல்ல அதற்கு வானதி கடுப்புகிறார்.
நடேசன் கேட்ட கேள்வி
ஆனாலும் தன்னுடைய திருமணத்திற்கு தன் வீட்டில் சம்மதம் தெரிவித்து விட்டார்கள் என்று வானதி சொல்ல, அதற்கு நடேசன் என் பையன் இப்போ ஒரு ஒர்க் ஷாப் ஓனர் ஆனதும் உங்க வீட்டுல கல்யாணத்துக்கு சம்பாதிச்சுட்டாங்களோ என்று நக்கல் பண்ணுகிறார்.
போட்டோ ஷூட்
பிறகு எல்லோரும் சாப்பிட்டு விட்டு செல்பி எடுத்து மகிழும் போது, சேரன்-சந்தாவை ஜோடியாக நிற்க வைத்து நிலா போட்டோ எடுக்கிறார். இதைப் பார்த்து வானதி, பாண்டியனையும் கட்டாயப்படுத்தி சேரன் சந்தாவை விலகி நிற்க வைத்து பாண்டியனோடு அதே மாதிரி போட்டோ எடுக்கிறார். அதை பார்த்து அனைவருடைய முகமும் மாறுகிறது. பிறகு பாண்டியன் சோகமாகவே இருப்பதை பார்த்து வானதி என்ன ஆசசு என்று விசாரிக்க அதற்கு பாண்டிய எதுவும் சொல்லாமல் இருக்கிறார்.

அடுத்த தலை பொங்கல்
அதே நேரத்தில் பல்லவன் தனது காதலியை பார்க்க அவருடைய ரூமுக்கு பொங்கல் எடுத்துச் சென்று, அழகாக அலங்கரித்து கொடுக்கிறார். சோழன் அண்ணனுக்கு கல்யாணம் ஆகவில்லை என்பதால் தான் இப்படி இருக்கிறது, அடுத்த வருடம் தல பொங்கலை நாம சேர்ந்து கொண்டாடலாம் என்று அவர் காதலியிடம் கூறுகிறார்.
இதற்கிடையில் நிலா சோழனை வெளியே கூப்பிட்டு வந்து, தன்னை விதவிதமாக போஸ் கொடுத்து போட்டோ எடுக்கச் சொல்கிறார். எடுத்த போட்டோவில் திருப்தி இல்லாமல் உள்ளே சென்று மேக்-அப் போடுகிறார். அந்த நேரத்தில் நிலாவின் போன் சோழனிடம் தான் இருக்கும் போது ராகவ் அனுப்பிய வாய்ஸ் மெசேஜ் வருகிறது.
சோழன் செய்த செயல்
அதில் ராகவ், "இந்த பொங்கல் நீங்க தனியா கொண்டாடுற கடைசி பொங்கல்... அடுத்த வருஷம் நாம சேர்ந்து கொண்டாடலாம்... அந்த நாளுக்காக காத்திருக்கிறேன்" என்று சொல்லியிருப்பார். அதை கேட்டு கடுப்பான சோழன், நிலா போனிலிருந்தே ராகவ்க்கு "ஏன் டா டோமர் தலையா... பாஸ்னா என்ன வேணாலும் மெசேஜ் பண்ணுவியா... உன்கூட நான் ஏன் பொங்கல் கொண்டாடனும்" என்று தன் பாணியில் ரிப்ளை அனுப்புகிறார்.
பின்னர் அதை நிலா பார்த்தால் பிரச்சனை ஆகும் என்று நினைத்து அந்த மெசேஜை டெலிட் செய்து விடுகிறார். அதற்குள் நிலாவும் ரெடியாகி வந்து, இருவரும் மீண்டும் போட்டோஷூட்டை தொடர்கிறார்கள். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications