Ayyanar Thunai: விவாகரத்தா? காதலா? - அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கப்போகும் ட்விஸ்ட்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அய்யனார் துணை சீரியல், குடும்ப உறவுகள் மற்றும் காதலை மையமாகக் கொண்டு ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது. குறிப்பாக, நிலா மற்றும் சோழன் கதாபாத்திரங்கள், தங்கள் வாழ்க்கையில் ஏற்படும் போராட்டங்களை எப்படிச் சமாளிக்கிறார்கள் என்பதே கதையின் முக்கிய அம்சம். இந்த வார எபிசோட்களில், நிலா குடும்பத்துக்கு ஆதரவாகப் பேசியது முதல், விவாகரத்து பற்றிய பேச்சு வரை பல திருப்பங்கள் நிகழ்ந்துள்ளன.

Ayyanar Thunai serial Vijay TV

குடும்ப மானத்தைக் காத்த நிலா

சமீபத்தில், வானதியின் அப்பா, அம்மா இருவரும் சோழனின் வீட்டிற்கு வந்து, பாண்டியன் குடும்பத்தைப் பற்றி மோசமாகப் பேசிக்கொண்டிருந்தார்கள். அப்போது, நிலா அவர்களைப் பார்த்து, கோபத்துடன் சோழனிடம் தாலியைக் கேட்டார். தாலியைப் பெற்றுக்கொண்டு கழுத்தில் அணிந்த நிலா, "நான் இந்த வீட்டில் தான் வாழ்கிறேன். நீங்கள் நினைப்பதுபோல இங்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. இந்த வீட்டில் உள்ளவர்கள் போல வேறு எங்குமே இருக்க முடியாது. அவ்வளவு தங்கமாகப் பெண்களைப் பார்த்துக் கொள்வார்கள். நீங்கள் உங்கள் மகளைத் திருமணம் செய்து கொடுங்கள் அல்லது கொடுக்காமல் போங்க. அது உங்கள் விருப்பம். ஆனால், இந்தக் குடும்பத்தைப் பற்றியும், இவர்களையும் பற்றியும் பேசுவதற்கு உங்களுக்கு எந்த உரிமையும் கிடையாது!" என்று பெருமையாகப் பேசினார்.

நிலாவின் இந்த வார்த்தைகள், சோழன் குடும்பத்தினர் அனைவரையும் பெருமைப்படுத்தின. நான் சோழன் சினி நிலா தன்னுடைய மனைவியாக இந்த வீட்டில் இருப்பார் என்று நினைத்தார். ஆனால் சண்டை முடிந்த பிறகு, நிலா வழக்கம்போல தாலியைக் கழட்டி சோழன் கையில் கொடுத்தார்.

காதலில் சிக்கிய சோழன்

மறுநாள், நிலாவும் சோழனும் பீச்சுக்குச் சென்று சந்தோஷமாக விளையாடினார்கள். அப்போது, நடேசன் குடித்துவிட்டு பிரச்சனை செய்ததால், போலீஸ் அவரை எச்சரித்தது. இதனால், சோழன் குடும்பத்தினர் நடேசனைத் திட்டினார்கள். மறுநாள், நிலா ஸ்கூட்டி ஓட்டுவதற்குக் கற்றுக்கொள்ள சோழனை அழைத்துச் சென்றார். எல்லாம் சரியாகப் போய்க்கொண்டிருக்கும்போது, ஒரு புதிய சிக்கல் உருவாகிறது.

பல்லவன் மற்றும் நிலா இருவரும் வேலைக்குக் கிளம்பும்போது, வானதியின் அண்ணன் அவர்களை வழிமறித்து, நிலாவைப் பற்றி மோசமாகப் பேசினார். இதனால், கோபப்பட்ட பல்லவன் அவர்களை அடிக்கப் போக, நிலா தடுத்துவிட்டார். ஆனாலும் பல்லவன் வானதியின் அண்ணன் மீது கடும் கோபத்தில் இருக்கிறார் அதனால் அடுத்து என்ன பிரச்சனை வரப்போகிறதோ என்ற எதிர்பார்ப்பும் இருக்கிறது.

விவாகரத்தா? காதலா?

இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் புதிய ப்ரோமோ, அடுத்த வார எபிசோட்கள் இன்னும் பரபரப்பாக இருக்கும் என்பதைக் காட்டுகிறது. ஒரு வழக்கறிஞர், "விவாகரத்துக்கு அப்ளை செய்ய வேண்டும், நிலாவை அழைத்து வாருங்கள்" என்று சோழனிடம் கூறுகிறார். ஆனால், சோழன், "இன்னும் கொஞ்ச நாள் தள்ளிப்போட முடியுமா?" என்று கேட்கிறார். அதற்கு வழக்கறிஞர், "நீங்கள் உங்கள் மனைவியிடம் தான் பேச வேண்டும்" என்று சொல்கிறார்.

இதைக் கேட்ட சோழன், "நான் நிலாவிடம் என் மனதில் இருக்கும் காதலைச் சொல்லப் போகிறேன்" என்று தன் தம்பி சேரனிடம் கூறுகிறார். அதைக்கேட்டு சேரனும் சரி என்கிறார். அதன் பிறகு, சோழன் நிலாவை அழைத்துக் கொண்டு கடற்கரைக்குச் செல்கிறார். அங்கு நிலாவிடம் கொஞ்சம் பேச வேண்டும் என்று சோழன் கேட்க அதற்கு நிலாவும் சரி என்று சொல்கிறார். அப்போது நம்முடைய கல்யாணம் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் நடந்தது, அது ஒரு கல்யாணமே இல்லை அப்படித்தானே என்று கேட்க, ஆமாம் என்று நிலாவும் சொல்கிறார். அதற்கு சோழன் நமக்கு கல்யாணம் எப்படி நடந்திருந்தாலும் அந்த நேரத்தில் நான் உங்க கழுத்தில் தாலி கட்டியதில் இருந்து நான் உங்களை காதலிக்கிறேன் என்று சொன்னதும் நிலா அதிர்ச்சி அடைகிறார்.

ஒருபுறம் விவாகரத்துப் பேச்சு, மறுபுறம் காதலை சொல்கிறார் ரசூல். இனி நிலா மற்றும் சோழனின் வாழ்க்கையில் அடுத்தது என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+