அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் (Azhage Azhagu Serial) அழகே அழகு சீரியலில் 2026 மார்ச் முப்பதாம் தேதி முதல் ஏப்ரல் நான்காம் தேதி வரைக்குமான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் சுரேஷ் செய்த செயலுக்கு அழகுமதி சரியான பதிலடி கொடுத்திருக்கிறார். இதுவரைக்கும் அழகுமதியை குடும்பத்தினர் அடிமைத்தனமாக நடத்தி வந்தாலும் இந்த வாரம் ப்ரோமோவில் செம சம்பவம் செய்திருக்கின்றனர். என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.

அழகே அழகு சீரியல் நடிகர்கள்
விஜய் டிவியில் அழகே அழகு சீரியல் சமீபத்தில் தான் தொடங்கப்பட்டது இந்த சீரியலில் அழகுமதி கேரக்டரில் நடிகை நக்ஷத்ராவும், அழகு மலர் என்ற கேரக்டரில் நடிகை அன்ஷிதாவும் நடித்திருக்கின்றனர். அதேபோல அழகுமதியின் கணவராக சுரேஷ் என்ற கேரக்டரில் பிரேம் ஜேக்கப் நடித்து வருகிறார். இந்த சீரியல் சமீபத்தில் தான் ஒளிபரப்பாக தொடங்கியது. ஆனாலும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பிடித்து வருகிறது.
அழகே அழகு சீரியல் எபிசோடு
இந்த சீரியலிலும் வழக்கம்போல ஹீரோ சுரேஷுக்கும், ஹீரோயினி அழகு மதிக்கும் கட்டாய திருமணம் நடைபெறுகிறது. எப்போதும் சுதந்திரமாக தைரியமாக பேசும் அழகுமதி பெண்களை கட்டுப்பாடு என்ற அடிமைத்தனத்துக்குள் நடத்தும் சுரேஷ் குடும்பத்திற்குள் வந்த பிறகு என்ன செய்யப் போகிறார் என்ற எதிர்பார்ப்புடன் இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.
அழகே அழகு சீரியல் கதை
போன வாரத்தில் சுரேஷ் மற்றும் அழகுமதியின் திடீர் திருமணம் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்தது. திருமணத்திற்கு பிறகு சுரேஷின் மாமாவை அழகுமதி "போயா" என்று திட்ட, அதை எல்லோரும் பாராட்டி வந்தனர். கல்யாணமான பிறகு பெண் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும், அப்படி இருக்க வேண்டும் என்று திமிரா பேசிக் கொண்டிருந்த சுரேஷ் மாமாவை லெப்ட் ஹேண்டில் அழகுமதி டீல் செய்த விஷயம் பலராலும் பாராட்டப்பட்டது.
அழகே அழகு ப்ரோமோ
இந்த நிலையில் இந்த (Azhage Azhagu Serial promo) வாரமும் அழகுமதி தன்னுடைய ஆட்டத்தை தொடங்கி இருக்கிறார். அதாவது தற்போது வெளியான ப்ரோமோவில், சுரேஷ் அதிகமாக குடித்துக் கொண்டு கட்டிலில் படுத்துக்கொண்டு, உன்னை விருப்பப்பட்டோ அனுதாபப்பட்டோ நான் கல்யாணம் பண்ணல, உன்னுடைய திமிரை அடக்குறதுக்காக தான் கல்யாணம் பண்ணுனேன் என்று சொல்கிறார்.
அதற்கு அழகுமதி நீங்களாவது என்னுடைய திமிர அடக்கணும் என்கிற ஒரு காரணத்துக்காக கல்யாணம் பண்ணுனீங்க ஆனால் எனக்கு அந்த காரணம் கூட இல்லை என்று கெத்தாக பேசியதும், இது என்னுடைய கட்டில் இந்த கட்டிலில் உனக்கு இடம் இல்லை என்று சுரேஷ் சொல்ல அதனால் போர்வையையும் தலகாணியையும் எடுத்துக்கொண்டு மதி ஹாலில் படுத்து இருக்கிறார்.
அழகுமதிக்கு கிடைத்த வெற்றி
இதை பார்த்த அவருடைய மாமனார் என்ன ஆச்சு என்று கேட்க உங்க மகன் தான் என்னை ரூமுக்குள் படுக்க கூடாது, என்னுடைய கட்டில் என்று சொன்னாரு என அழகுமதி போட்டு கொடுத்ததும் சுரேஷை தூக்கி ஹாலில் போட்டுவிட்டு மதியை கட்டிலில் படுக்கச் சொல்லி இருக்கின்றனர். இதுவே அவருக்கு கிடைத்த வெற்றி தான். ஆனாலும் இதை வைத்து அடுத்த வாரம் என்ன பஞ்சாயத்து வரப்போகிறது என்ற எதிர்பார்ப்புடன் இந்த ப்ரோமோ இருக்கிறது.
-
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: அஞ்சலி பற்றி பாண்டியன் கேட்ட கேள்வி! சரவணன் சொன்ன விஷயம்! மீனா கண்டுபிடித்த உண்மை -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ்












Click it and Unblock the Notifications