பிக் பாஸ் காரணமாக விஜய் டிவியில் முடிவுக்கு வரும் 4 சீரியல்.. அட இந்த புது சீரியலுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் அடுத்த வாரம் ஞாயிற்றுக்கிழமை அதாவது அக்டோபர் ஆறாம் தேதி முதல் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட இருக்கிறது. இந்த நிகழ்ச்சி 9:30 மணி முதல் 10:30 மணி வரைக்கும் ஒளிபரப்பாக இருக்கும் நிலையில் விஜய் டிவியில் சில சீரியல்கள் முடிவுக்கு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடக்கப் போடும்போது டிஆர்பியில் குறைவான ஒரு சில சீரியல்கள் முடிவுக்கு வருவது வழக்கம்தான். சில சீரியல்களில் நேரமும் மாற்றம் செய்யப்படும். இது ரசிகர்கள் எதிர்பார்க்கும் வகையில் ஒரு சில நேரங்களில் அமைகிறது. சில நேரங்களில் சில சீரியல்களின் நேரம் மாற்றம் ரசிகர்கள் விரும்பாத வகையில் தான் இருக்கிறது.

television vijay tv bigg boss

ஏற்கனவே சன் டிவிக்கு போட்டியாக விஜய் டிவி பல சீரியல்களை புதியது புதியதாக கொண்டு வந்து கொண்டிருக்கிறது. ஆனாலும் டிஆர்பி யில் டாப் 10 இடங்களில் அதிகமான இடங்களில் சன் டிவி சீரியல்கள் தான் இருக்கிறது. இந்த நிலையில் சன் டிவியில் இன்னும் ஒரு சில வாரங்களில் ஐந்து சீரியல் முடிவுக்கு வருவதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது. அதைத் தொடர்ந்து விஜய் டிவியில் நான்கு சீரியல்கள் முடிவுக்கு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

சில சீரியல்களை முடிவுக்கு கொண்டு வந்து விட்டு புதிய சீரியல்கள் அறிமுகப்படுத்துவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அந்த வகையில் பாக்கியலட்சுமி சீரியல் நான்கு வருடங்களுக்கு மேலாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் இந்த சீரியல் விரைவில் முடிவுக்கு வர இருக்கிறது என்று கூறப்படுகிறது. ஏற்கனவே இந்த சீரியலுக்கு தூண் போல இருந்த ராமமூர்த்தி இறப்பு யாரும் எதிர்பார்க்காத வகையில் அமைந்தது.

ராமமூர்த்தி கேரக்டரில் நடித்து வந்த ரோசரி இந்த சீரியல் முடிவுக்கு வர இருக்கிறது அதனால் தான் உங்களுடைய கேரக்டரை முடித்து விட்டோம் என்று சீரியல் தரப்பினர் என்னிடம் சொன்னார்கள் என்று ஏற்கனவே சொல்லி இருக்கிறார். அதுபோல நேற்று இந்த சீரியலில் கோபியாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் சதீஷ் பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து நான் விலகும் நேரம் வந்துவிட்டது என்று ஒரு பதிவு வெளியிட்டு இருந்தார். இதனால் இந்த சீரியல் முடிவுக்கு வர போகிறது என்று எதிர்பார்க்கப்படுகிறது

television vijay tv bigg boss

அதைத்தொடர்ந்து கடந்த 2021 ஆம் ஆண்டு விஜய் டிவியில் தொடங்கப்பட்ட முத்தழகு சீரியல் இரண்டு வருடங்களை கடந்து ஒளிபரப்பாகி வரும் நிலையில் இந்த சீரியலும் வரும் வாரத்தோடு முடிவுக்கு வர இருக்கிறது. இதற்கான இறுதி கட்ட சூட்டிங் நடைபெற்று இருக்கிறது. இந்த சீரியலில் அஞ்சலிக்கு பழையது எல்லாம் நினைவிற்கு வந்ததும் சீரியல் முடிவுக்கு வரும் என்று கூறப்படுகிறது

television vijay tv bigg boss

அடுத்ததாக மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்போடு தொடங்கப்பட்ட பணிவிழும் மலர்வனம் என்று சீரியலும் முடிவுக்கு வர இருப்பதாக கூறப்படுகிறது. இந்த சீரியல் எதிர்பார்த்த அளவுக்கு டிஆர்பி கிடைக்காததால் இந்த சீரியல் முடிவுக்கு வர இருக்கிறது என்று கூறப்படுகிறது. இந்த சீரியலில் முக்கியமான பல நடிகர்கள் நடிக்கிறார்கள். ஆனாலும் இந்த சீரியலுக்கு எதிர்பார்த்த டிஆர்பி கிடைக்காமல் இருக்கிறது.

television vijay tv bigg boss

அதுபோல விஜய் டிவியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட வீட்டுக்கு வீடு வாசல் படி என்று சீரியலும் முடிவுக்கு வர இருப்பதாக கூறப்படுகிறது. அதற்கு காரணம் இந்த சீரியல் 100 எபிசோடுகளை எட்டியுள்ள நிலையில் அதற்கும் சரியான டிஆர்பி கிடைக்காத நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. ஏற்கனவே சில சீரியல்களில் நேரம் மாற்றம் செய்யப்பட்டிருக்கும் நிலையில் டிஆர்பி அதிகரித்தால் சீரியல் தொடர்ந்து ஒளிபரப்பாகுவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

television vijay tv bigg boss
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+