பாக்கியலட்சுமியில் நாளை: இனியாவை வீட்டை விட்டு அனுப்பிய சுதாகர்.. பாக்கியாவுக்கு அடுத்த அதிர்ச்சி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் நாளை என்ன நடக்கப்போகிறது என்று ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் பாக்யாவை ஏமாற்றி எழுதி வாங்கிய ரெஸ்டாரன்ட் விஷயத்தில் சுதாகர் முக்கிய முடிவு எடுத்து இருக்கிறார். அதனால் பாக்கியா அதிர்ச்சியில் அழுது கொண்டிருக்கிறார். என்ன நடந்தது என்று பார்க்கலாம்.
பாக்கியலட்சுமி சீரியலில் எதிர்பாராத பல திருப்பங்கள் வந்து கொண்டே இருக்கிறது. இனியாவின் திருமணம் கண்டிப்பாக நடக்காது, கடைசி நேரத்தில் பாக்கியா நிறுத்தி விடுவார் என்று எல்லோரும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் இனியாவுக்கு சுதாகர் மகன் நிதிஷுடன் திருமணம் நடைபெற்று விட்டது. திருமணத்திற்கு பிறகு சுதாகர் தன்னுடைய வேலையை காட்ட தொடங்கி இருக்கிறார்.

பாக்கியா சொன்னது நடந்தது
பாக்யாவின் ரெஸ்டாரண்டை பிடுங்க வேண்டும் என்பதற்காகத்தான் தன்னுடைய மகனுக்கு இனியாவை திருமணம் செய்து வைத்தார். அதற்கான வேலையை இப்போது அவர் தொடங்கி விட்டார். ஏற்கனவே குடும்பத்தினர் எல்லோரையும் ஏமாற்றி வெற்று பேப்பரில் பாக்கியாவை கையெழுத்து போட வைத்திருந்தார். அந்த பத்திரத்தை வைத்து அடுத்த நாளே ரெஸ்டாரண்ட் பெயரை இனியாவிற்கு மாறிவிட்டது என்று கூறியிருந்தார்.
சுதாகர் சூழ்ச்சி
ஆனால் அதற்குப் பிறகு இந்த மேனேஜ்மென்ட் முழுக்க இனியா பேருக்கு மாறிவிட்டது. அதை எங்களுடைய கம்பெனியில் நாங்கள் சேர்க்கப் போகிறோம். இனி எங்க கம்பெனியில் உள்ள செஃப் மற்றும் கம்பெனியில் வேலை பார்க்கிறவர்கள் தான் இனி இங்கே வேலை பார்க்கப் போகிறார்கள். அதனால் ஏற்கனவே இங்கே இருப்பவர்கள் எல்லோரும் இனி வெளியில் போகலாம் என்று சுதாகர் சொல்லி இருக்கிறார். இதனால் பாக்கியா அதிர்ச்சியில் இருக்கிறார்.

ஏமாந்த கோபி
ஏற்கனவே சுதாகர் தன்னுடைய ரெஸ்டாரண்டை ஏமாற்றி வாங்கி விட்டார், அவர் சொன்னதை செய்யவில்லை என்று பாக்யா குடும்பத்தினரிடம் வந்து சொன்னபோது கோபி சுதாகரிடம் நேரடியாகவே சென்று விசாரித்து இருந்தார். ஆனால் கோபி மற்றும் செழியனை சமாளித்து அவர்களை மனதை குழப்பி சுதாகர் அனுப்பி வைத்திருந்தார். அதனால் ஈஸ்வரி சம்மந்தி ரொம்ப நல்லவரு இனி ரெஸ்டாரண்ட் பொறுப்பை எல்லாம் நீ தான் பாத்துக்க போற கம்பெனி பெயர் மட்டும்தான் அவர் பெயருக்கு மாறியிருக்கு வேற எதுவும் நடக்கவில்லை என்று பாக்யாவை திட்டிக் கொண்டிருந்தார்.
சுதாகர் பிளான்
இந்த நிலையில் இப்போது இனியா மற்றும் நித்திஷை சுதாகர் பிளான் போட்டு வெளிநாட்டு ஹனிமூனுக்கு அனுப்பி வைத்திருக்கிறார். அதுவும் 20 நாட்களாக இனியா அங்கே இருப்பதாக கூறி இருக்கிறார்கள். அந்த நேரத்தில் ரெஸ்டாரண்டை விட்டு பாக்கியாவை சுதாகர் வெளியே அனுப்புகிறார். இதனால் பாக்கியாவும் செல்வியும் மனது உடைந்து வெளியே உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

பாக்கியாவின் வார்த்தை
நம்மளை முன்னேறவே விடமாட்டாங்களா அக்கா என்று செல்வி கேட்க, அதற்கு பாக்கியா நான் ஏற்கனவே பல இடங்களில் உடைந்து போய் உட்கார்ந்து இருக்கிறேன் ஆனாலும் மீண்டும் போராடி வந்திருக்கிறேன். எவ்வளவு சோதனைகளும், எவ்வளவு ஏமாற்றங்களும் வந்தாலும் அதையெல்லாம் தாண்டி நாம மேலே வர வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். ஏற்கனவே சுதாகர் ரெஸ்டாரண்டை ஏமாற்றி வாங்கி விட்டார் என்று கம்ப்ளைன்ட் கொடுக்க சொல்லி எழில் கூறி இருக்கிறார். இதனால் இனி பாக்யா போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுத்து மீண்டும் ரெஸ்டாரண்டை பெற போகிறாரா? அல்லது இனியாவிடம் இந்த விஷயத்தை சொல்லப் போகிறாரா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.












Click it and Unblock the Notifications