அமிர்தாவின் குழந்தையை தூக்கிய கணேஷ்.. பழனிச்சாமி கேட்ட வார்த்தை.. இக்கட்டான சூழ்நிலையில் பாக்கியா
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலின் அக்டோபர் 13ஆம் தேதிக்கான எபிசோடு வெளியாகி இருக்கிறது.
அதில் அமிர்தாவும் எழிலும் ஜோடியாக பைக்கில் போவதை பார்த்து கணேஷ் கோபப்படுகிறார்.

அதே நேரத்தில் கணேஷ் மீண்டும் மீண்டும் தன்னுடைய வீட்டை சுற்றி வருவதை பார்த்து பாக்கியா சந்தேகப்படுகிறார். இந்த நிலையில் இன்று என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
அந்த வகையில் எபிசோடின் ஆரம்பத்தில் பாக்யா பழனிசாமி வீட்டிற்கு வந்து அவரை சந்தித்து பேசிக் கொண்டிருக்க அப்போது பழனிச்சாமி உங்களுக்கு ஏதேனும் பண தேவை இருக்கிறதா? சொல்லுங்க? என்று கேட்க, அதற்கு பாக்கியா அதெல்லாம் ஒன்றும் இல்லை. வேண்டாம் சார் நானே சமாளித்துக் கொள்கிறேன் என்று பேசிவிட்டு கிளம்புகிறார்.

அதைத்தொடர்ந்து வீட்டில் எழிலும் அமிர்தாவும் ஜோடியாக வெளியே கிளம்புகின்றனர். அப்போது அவர்களை பாக்யா வழி அனுப்பி கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் அமிர்தாவும் எழிலும் பைக்கில் நெருக்கமாக போவதை பார்த்து அங்கு ஒளிந்து கொண்டிருந்த கணேசன் கோபப்படுகிறார். பிறகு அவர்கள் இருவரும் கிளம்பி போன பிறகு கோபத்தோடு அந்த இடத்தில் நிற்கும் கணேசனை பார்த்து பாக்கியா ஏய் தம்பி என்று கூப்பிட கணேசன் அங்கிருந்து ஓடி விடுகிறார்.

இதனால் பாக்கியாவிற்க்கு சந்தேகம் ஏற்படுகிறது. பிறகு ராமமூர்த்தியோடு நிலா பார்க்குக்கு வர, கணேசன் அங்கு வந்து ராமமூர்த்தி இடம் அனுமதி வாங்கிக்கொண்டு நிலாவுடன் கொஞ்சி விளையாடிக் கொண்டிருக்கிறார். ராமமூர்த்தியும் நிலாவை கணேசன் இடம் ஒப்படைத்து விட்டு பக்கத்தில் போய்விட்டு வருகிறேன் என்று கிளம்பி போகிறார்.
அதே நேரத்தில் பாக்யா செல்விக்கு கொடுக்க வேண்டிய பணத்தை கொடுத்து வட்டு மற்றவர்களுக்கு எப்படி பணம் கொடுக்க என்று தெரியவில்லை என்று யோசித்துக் கொண்டிருக்கும் போது கேண்டினில் இருந்து வரவேண்டிய பணம் வந்தால் கொஞ்சம் உதவியாக இருக்கும் என்று சொல்ல, அதற்கு செல்வி உன்னை கஷ்டப்படுத்தி பாக்கறது தான் அந்த ராதிகாவோட வேலை. அதுக்காக தான் இப்படி அலைய வைக்கிறார் என்று திட்டிக் கொண்டிருக்கிறார். அதற்கு அமிர்தா நான் மெயில் போட போறேன் அதற்கு அவங்க என்ன சொல்றாங்கன்னு பார்க்கலாம் என்று பேசிக் கொண்டிருக்கிறார்.

அதை தொடர்ந்து சென்னைக்கு வந்த கணேசனின் அம்மாவும், அப்பாவும் கணேசனுக்கு போன் போட்டு நாங்க சென்னை வந்து விட்டோம். உன்ன பாக்கணும் நீ எங்க இருக்கன்னு சொல்லு என்று கேட்டு கணேசனை பார்க்க கிளம்பி போகின்றனர். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைந்தது.
-
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications