மாலினிக்காக செழியனை விட்டுக் கொடுத்த ஜெனி.. அடுத்தது விவாகரத்துக்கு ரெடியாகும் பாக்கியாவின் மருமகள்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் அக்டோபர் 14ஆம் தேதிக்கான எபிசோடு வெளியாகி இருக்கிறது.
அதில் மீண்டும் மீண்டும் பாக்கியா வீட்டிற்கு வரும் மாலினியிடம் செழியனை விட்டுக் கொடுத்துவிட்டு ஜெனி கிளம்பி போகிறார்.

அதே நேரத்தில் அமிர்தாவின் முன்னாள் கணவர் மீண்டும் உயிரோடு வந்துவிட்டார் என்ற செய்தியை கேட்டு பாக்கியா அதிர்ச்சியில் இருக்கிறார். இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை பற்றி பார்க்கலாம்.
அந்த வகையில் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் கணேசனின் அம்மாவும் அப்பாவும் கணேசனை வந்து பார்க்கின்றனர். அப்போது கணேசன் அவர்களிடம் நீங்க எப்படி உங்க மருமகளுக்கு இன்னொரு கல்யாணம் பண்ணி வைக்கலாம்? நான் அமிர்தாவுடன் தான் வாழுவேன். கண்டவன் கூட என் பொண்டாட்டிய வாழ வைக்க முடியாது.

எனக்கு என் குழந்தையும் அமிர்தாவும் வேணும். முதல் புருஷன் உயிரோடு இருக்கும்போது இரண்டாவது கல்யாணம் செல்லாது. இனி நான் பண்ண போற வேலைய பாருங்க என்று மிரட்டி விட்டு, இனி நீங்க என்கிட்ட பேசாதீங்க என்று சொல்லி திட்டி விட்டு அவர்கள் பேசுவதை கேட்காமல், பார்க்கும் ரசிகர்களை கடுப்பாக்கி கொண்டு கிளம்பி போகிறார்.
அதைத்தொடர்ந்து பாக்கியா வீட்டில் செழியன், ஜெனி, அமிர்தா, பாக்கியா, செழியன் என எல்லோரும் உட்கார்ந்து ஜெனி குழந்தையை கொஞ்சி கொண்டு இருக்கின்றனர். அப்போது மாலினி வீட்டிற்குள் வருகிறார். அதை பார்த்து செழியன் அதிர்ச்சியாக, மாலினி கேஷுவலாக எல்லாரிடமும் பேசுவது போன்று பேசிக்கொண்டு செழியன் உடன் ப்ராஜெக்ட் விஷயமாக பேசுவதற்காக வந்ததாக கூறுகிறார்.

செழியன் தான் இப்போது ஆபீசுக்கு வரமாட்டேன் என்கிறாரே அதனால நான் இங்கேயே வந்து விட்டேன் என்று சொல்ல, அதற்கு ஜெனியும் சரி அப்போ நீங்க இங்க இருந்து வேலையை பாருங்க நான் குழந்தையை தூக்கிட்டு ரூமுக்கு போகிறேன் என்று தியாகி மாதிரி( அடுத்த பாக்கியவாக) நடந்து கொண்டிருக்கிறார். இந்த நேரத்தில் யாரும் அங்கு இல்லாததால் ஹாலில் தனியாக செழியனும் மாலினியும் இருக்கின்றனர். அப்போது மாலினி இங்கே சத்தம் கேட்டுக் கொண்டே இருக்கிறது இது டிஸ்கஸ் பண்ணதுக்கு டிஸ்டபன்ஸா இருக்கிறது என்று சொல்ல, அதற்கு பாக்கியா நீங்க பாட்டியோட ரூம்ல போய் உட்கார்ந்துக்கோங்க என்று சொல்லி அங்கு அனுப்பி வைக்கிறார்.
பிறகு ரூமிற்கு சென்றதும் செழியன் கையை பிடித்துக் கொண்டு மாலினி நான் உன்னை விட மாட்டேன். நீ வரலைன்னாலும் நான் தினமும் இங்கே வருவேன் என்று அதிர்ச்சி கொடுக்கிறார். அதைத்தொடர்ந்து பாக்யா இவர்களுக்கு காபி கொண்டு போக அங்கு இவர்கள் இருப்பதை பார்த்து மனதிற்குள் லேசாக சந்தேகப்படுகிறார். அப்படியே வெளியே வந்து அமிர்தாவிடம் ஏதாவது கிளைன்ட் இப்படி வீட்டிற்கு வந்து வேலை பார்ப்பார்களா? என்று கேட்க அதற்கு அமிர்தா அது அவங்களோட வேலை அவசரமா இருக்கும் என்று லூசுத்தனமாக பேசிக் கொண்டிருக்கிறார்.
அந்த நேரத்தில் கணேசனின் அம்மா பாக்யாவுக்கு போன் போட்டு உங்களிடம் தனியாக பேசணும் நீங்க வாங்க என்று சொல்லி எல்லோரும் ஒரு பார்க்கில் சந்தித்து பேசுகின்றனர். அப்போது எந்த வீட்டிலும் நடக்காத அதிசயம் எங்க வீட்டில் தான் நடந்திருக்கு என்று கணேசன் மீண்டும் உயிரோடு திரும்ப வந்த விஷயத்தை சொல்ல, அதைக் கேட்டு பாக்யா அதிர்ச்சி அடைந்து நிற்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைந்து இருக்கிறது. இந்த நிலையில் இனி வழக்கம் போல பாக்கியா தன்னுடைய மகன்களின் வாழ்க்கையை காப்பாற்ற போராட போகிறார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications