கணேசன் குடும்பத்தை பற்றி எழில் சொன்ன வார்த்தை.. கோபியின் நாடகம்.. செழியனை சந்தேகப்படும் குடும்பம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலின் அக்டோபர் 18ஆம் தேதிக்கான எபிசோடு வெளியாகி இருக்கிறது.

அதில் செழியனுக்கு மாலினி போன் அடிக்கடி பண்ணிக் கொண்டே இருப்பதால் பாக்யாவும் எழிலும் சந்தேகப்படுகின்றனர்.

Baakiyalakshmi Serial 18th of October 2023 promo and episode full update

அதைத் தொடர்ந்து எழில் கணேசனின் அம்மா, அப்பா பற்றி பேச அதைக் கேட்டு பாக்கியா அதிர்ச்சி அடைகிறார். இப்படியாக இன்றைய எபிசோட்டில் என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.

அதில் எபிசோட்டின் ஆரம்பத்தில் கோபி தலைவலி என்று ஏமாற்றி மயூவையும், ராதிகாவையும் ஷாப்பிங் போயிட்டு வாங்க என்று கூறி தூங்கி விடுகிறார். அடுத்த நாள் ஆபீஸில் இருக்கும்போது கோபிக்கு போன் செய்து ராதிகா அவசரமாக வீட்டுக்கு வாங்க என்று கூப்பிடுகிறார். அதைக் கேட்டு கோபியும் ஏன் என்ன ஆச்சு என்று விசாரிக்க, அதற்கு ராதிகா டி நகர் கோல்ட் பேலஸ் போறோம் என்று சொல்கிறார்.

பேலஸ் எதுக்கு போறோம் என்று கோபி கேட்க, தங்க மாளிகை என்று ராதிகா சொல்ல அதைக் கேட்டு கோபி அதிர்ச்சி அடைகிறார். அதற்கு அத்தைக்கு தானே எடுக்க போறோம் அவங்க வந்ததும் போவமா என்று கேட்க, அதற்கு ராதிகா இல்லை சர்ப்ரைஸா தானே போறோம் அவங்க வேண்டாம். உங்களுக்கு எங்க மேல பாசம் இருந்தா வாங்க என்று சொல்ல அதைக் கேட்டு கோபி அதிர்ச்சி ஆகிவிடுகிறார்.

அதோடு பர்ஸ், கார்ட் எல்லாம் இருக்கா? என்று ராதிகா கேட்க, அதற்கு மைண்ட் வாய்ஸில் தன்னுடைய நிலைமை மோசமாக இருக்கிறது என்பதை பற்றி புலம்பி கொண்டிருக்கிறார். அதைத் தொடர்ந்து ராதிகா, மயூவோடு கோபி ஷாப்பிங் செய்கிறார். அதே நேரத்தில் வீட்டில் எழில், பாக்யா, ஜெனி மூவரும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது எழில் பாப்பாக்கு இன்னும் பெயரையே சொல்லல என்று கிண்டல் செய்து கொண்டிருக்கிறார்.

அப்போது வீட்டிற்கு வரும் செழியன் ஜெனிக்கு புடவை வாங்கி வந்து கொடுக்கிறார். அதற்கு எழில் உன்னை பெத்த அம்மாவுக்கு ஒரு புடவை வாங்கி கொடுக்க தோணுச்சா என்று கலாய்க்க, அதற்கு நான் அம்மாக்கு வாங்கி இருக்கிற புடவை பாரு என்று செழியன் எடுத்து கொடுக்க அது ரொம்ப விலை உயர்ந்ததாக இருப்பதால் அதை பார்த்து பாக்கியா ஆச்சரியப்பட்டு வெளியே எட்டிப் பார்க்கிறார்.

அதனால் எல்லோரும் என்னாச்சு என்று கேட்க எது மழை வருதா என்று பார்த்தேன் என்று கலாய்க்கிறார். அந்த நேரத்தில் செழியனுக்கு மாலினி கால் பண்ணி கொண்டே இருக்க செழியன் அங்கிருந்து சமாளித்து விட்டு எழுந்து போகிறார். பிறகு பாக்கியா எழிலிடம் செழியன் சரியில்லை என்று சொல்ல, அதற்கு நானும் கவனித்தேன் மாலினியை பார்த்தாலே பயப்படுகிறார் என்று எழில் கிண்டலாக பேசிக் கொண்டிருக்கிறார்.

அதை தொடர்ந்து அமிர்தாவின் மாமனார் மாமியார் உனக்கு போன் செய்தார்களா? என்று பாக்யா கேட்க, இல்லை போய் பார்த்துட்டு வரலாம்னு இருக்கேன் என்று எழில் சொல்ல, அதைக் கேட்டு பதறிப்போன பாக்கியா அதெல்லாம் வேண்டாம். அவங்களுக்கு எதுவும் தேவை என்றால் அவங்களே கால் செய்வாங்க. நீ எங்கேயும் போகக்கூடாது என்று சொல்லிவிட்டு பாக்யா போவதையே ஒன்றும் புரியாமல் எழில் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+