செழியன் இடம் மாட்டிய கோபி... செக் வைத்த மாமியார்.. இனி வீட்டின் நிலைமை? பரபரப்பில் பாக்கியலட்சுமி
சென்னை: ராதாகாவின் வீட்டிற்கு அவருடைய அம்மா வருகிறார்.
இனி கோபி அவருடைய வீட்டிற்கு போகலாம். ஆனால் ராதிகாவை கூட்டிக் கொண்டு போக வேண்டும் என்று மாமியார் போட்ட உத்தரவை கேட்டு கோபி அதிர்ச்சி அடைகிறார்.
மீண்டும் குடித்துவிட்டு கோபி ரகளை செய்து செழியனால் காப்பாற்றப்படுகிறார்.
விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் ஏப்ரல் 13-ஆம் நாளுக்கான எபிசொட்டின் ஆரம்பத்தில் ஹாலிங் பெல் அடிக்கும் சத்தத்தை கேட்டு ராதிகா கதவை திறக்க, அவருடைய அம்மா நிற்பதை பார்த்து கோபி அதிர்ச்சி அடைகிறார். பிறகு உள்ளே வந்த அவரை ராதிகா கட்டிப்பிடித்து கண்கலங்க, கோபி இப்பதான வந்தாங்க அதுக்குள்ள எதுக்கு அழுகிறாய் என்று கேட்க, என் கஷ்டத்தை சொல்லி அழ எங்க அம்மாவை தவிர வேறு யாரு இருக்காங்க என்று ராதிகா சொல்கிறார்.
அடுத்ததாக ராதிகாவின் அம்மா நீங்கே இப்படி பண்ணுவீங்கன்னு நாங்க கொஞ்சம் கொஞ்சம் கூட எதிர்பார்க்கல. ராதிகா இந்த கல்யாணம் வேண்டாம் என்று சொன்னபோது நாங்க தான் அவளை சம்மதிக்க வைத்து கல்யாணம் பண்ணி வச்சோம். காரணம் நீங்க அவ்வளவு நல்லா பாத்துப்பீங்க என்றுதான். ஆனா இப்போ கதையே வேற மாதிரி இருக்கு என்று சொல்ல, கோபி இனி அப்படி நடக்காது என்று மன்னிப்பு கேட்கிறார்.
மேலும் ராதிகா இவர் குடிக்கிறதுக்கு நான் தான் காரணம் என்று இவங்க மொத்த குடும்பமும் சொல்றாங்க. அதோட இவங்க அம்மா நீ எங்களோட வந்துடுன்னு சொல்றாங்க என்று சொல்ல, ராதிகாவின் அம்மா போகட்டும் அவங்க அப்பா அம்மாவ தான் பாக்க போறாரு. அதுல என்ன தப்பு இருக்கு. கூடவே நீயும் போ. சட்டப்படி அவர கல்யாணம் பண்ணிக்கிட்ட மனைவி தானே அவர் எங்க இருக்கிறாரோ அங்கதான் நீயும் இருக்கணும் என சொல்ல, கோபி இது என்ன புது ட்விஸ்ட்டா இருக்கு என்று அதிர்ச்சி அடைகிறார்.
அடுத்து கோபி இது செட்டாகாது நான் எங்கேயும் போக போறது கிடையாது. ராதிகா மற்றும் மயூடன் தான் இருக்க போறேன். அந்த வீட்டில குடும்பம் எல்லாம் இருக்கு நாங்க போகவே மாட்டேன் என்று சொல்லி அங்கிருந்து நகர்ந்து போகிறார். அடுத்ததாக செழியன் ஒரு கிளையன்ட் மீட்டிங்காக ரெஸ்டாரண்ட் வந்திருக்க, அங்கு கோபி குடித்துக் கொண்டு இருக்கிறார். செழியன் மாலினி என்பவரை மீட் செய்கிறார்.

புதியதாக அறிமுகமான மாலினியிடம் தன்னுடைய குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவரையும் பற்றியும், தனக்கு காதல் திருமணம் நடந்திருக்கிறது என்பது பற்றியும் செழியன் பேசிவிட்டு, பிறகு வேலை சம்பந்தமாகவும் பேசிவிட்டு மாலினி கிளம்ப செழியனும் அங்கிருந்து கிளம்புகிறார். அப்போது போதையில் இருக்கும் கோபி நிதானம் இல்லாமல் காரை தேடிக் கொண்டிருக்கிறார்.
பிறகு செழியன் அவரை காரில் ஏற்றி வீட்டுக்கு அனுப்ப முயற்சி செய்ய கோபி கார் ஓட்ட முடியாத நிலையில் இருப்பதால் செழியனே காரை ஓட்டிக்கொண்டு வருகிறார். அப்போது கோபி நீங்க எல்லோரும் நல்லவங்க. நான் தான் பேட் பாய். நான் இந்த ராதிகாவே கல்யாணம் பண்ணி இருக்கவே கூடாது. பெரிய தப்பு பண்ணிட்டேன் என்று புலம்பிக் கொண்டிருக்கிறார். அதே நேரத்தில் ராதிகா கோபி வீட்டுக்கு வராததால் கோபிக்காக காத்துக் கொண்டிருக்கிறார்.

பாக்கியாவின் வீட்டில் ஜெனி தனக்கு பிரசவத்தை நினைத்து பயமாக இருக்கிறது என்று சொல்லிக் கொண்டிருக்க, இனியா நான் குழந்தை பிறந்த பிறகு குழந்தையை பத்திரமாக பார்த்துக்கொள்வேன் என்று சொல்ல, அதற்கு அமிர்தா சரி நீ குழந்தையை பார்த்துக்க உனக்கு பதிலா அப்போ ஜெனியா போய் எக்ஸாம் எழுதிக்கிட்டு வருவாங்க என்று கலாய்த்து கொண்டிருக்கிறார். இத்துடன் இன்று எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications