பாக்கியாவை வீட்டை விட்டு விரட்ட சவால் விடும் ராதிகா.. ஈஸ்வரி கொடுத்த பதிலடி.. பரபரப்பான தருணம்
சென்னை: கோபி ராதிகா செய்தது தவறு என்று எவ்வளவு புரிய வைக்க முயற்சி செய்தாலும் ராதிகா பிடிவாதமாக இருக்கிறார்.
ராதிகாவை செல்வி அவமானப்படுத்த கடைசியில் பாக்கியா பதிலடி கொடுக்கிறார்.
ஈஸ்வரி ராதிகாவை வீட்டை விட்டு வெளியேறுவேன் என்று சபதம் போடுகிறார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ஏப்ரல் 24ஆம் தேதிக்கான எபிசோட்டின் ஆரம்பத்தில் கோபி சோகமாக உட்கார்ந்து இருக்க, நான் இது எல்லாம் வேணும்னு பண்ணல. நான் உங்களுக்காகத்தான் எல்லாமே பண்ணுரேன். உங்களை என்ன விட்டு பிரிச்சு கூட்டிட்டு போயிருவாங்களான்னு பயமாக இருக்கு. அதனால்தான் இப்படி இருக்கேன் என்று ராதிகா கூறுகிறார்.

நான் ராஜேஷை எதற்காக டைவர்ஸ் பன்னுனேன்னு உங்களுக்கு தெரியும்.. நீங்க இப்படி எல்லாம் இனி பண்ணாதீங்க கோபி என்று கோபியிடம் கெஞ்சி கொண்டிருக்கிறார். அதே நேரத்தில் அமிர்தா, பாக்யாவிடம் நீங்க இந்த வீட்டை விட்டு போய்விடனு மட்டும் நினைச்சுடாதீங்க. உடைஞ்சு போயிருங்க என்று ஆறுதல் கூறிக் கொண்டிருக்கிறார். பிறகு ஜெனி, செல்வி என எல்லோரும் பாக்கியாவிற்கு ஆறுதல் கூறிக் கொண்டிருக்கின்றனர்.
பிறகு செல்வி கோபி மற்றும் ராதிகா மீது போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுக்க சொல்லி கூறிக் கொண்டிருக்கிறார். அதற்கு ஜெனி அது எப்படி கொடுக்க முடியும் என்று கேட்டு நாம எப்படியாவது பணத்தை அரேஞ்ச் பண்ணி கொடுத்துவிடலாம் என்றாலும் இந்த ராதிகா வீட்டை விட்டு போற மாதிரி தெரியலையே என்று பேசிக் கொண்டிருக்கின்றனர். பாக்யா எதுவுமே பேசாமல் அமைதியாக யோசிக்கப்படியே இருக்கிறார்.

அப்போ இந்த பேச்சை இனி விட்டுருவோம் அம்மாவே ரொம்ப வெறுப்புல இருக்காங்க என்று அமிர்தா கூறிக் கொண்டிருக்க, அதே நேரத்தில் கோபி தண்ணி தாகமா இருக்கு என்று சொல்ல, ராதிகா நீங்க பாட்டிலில் எடுத்து குடிக்கலாமே என்று சொல்ல கீழே போகிறதுக்கே ஒரு மாதிரி இருக்கு என்று சொல்ல, நான் போய் தண்ணி எடுத்துட்டு வருகிறேன் என்று ராதிகா கிளம்ப, கோபி வேண்டாம் ஆர்டர் போடலாம் என்று கூறுகிறார். பிறகு ராதிகா கீழே தண்ணி எடுக்க போக, சொல் பேச்சை கேட்காமல் ராதிகா போறா என்ன பஞ்சாயத்து இழுத்துட்டு வரப்போறாளோ என்று கோபி புலம்பிக் கொண்டிருக்கிறார்.
கீழே கிச்சனுக்கு வந்த ராதிகாவை பார்த்து செல்வி, அக்கா உன்னோட கிச்சனுக்கு கண்டவர்கள் எல்லாம் வந்துட்டு இருக்காங்க. நீ ஏதும் பேசாம இருக்க, எங்க வீட்டில் எல்லாம் இப்படி எல்லாம் நடந்துச்சுனா நடக்கிறதே வேற என்று பேச, அதற்கு ராதிகா நீ இங்க வேலைக்காரி தானே, வேலைக்காரங்க வேலை மட்டும் பாக்கணும் குடும்ப பிரச்சனைகளை எல்லாம் தலையிடக்கூடாது. இந்த வீட்டுல தான் வேலைகாரங்களை தலையில் தூக்கி வைத்து ஆடுறாங்க என்று திட்டுகிறார்.
அதற்கு பாக்கியா செல்வி நீ கண்டவங்க கிட்ட எல்லாம் பேசிகிட்டு இருக்காத, ஃப்ரெண்ட், ஃப்ரெண்ட்னு என் கூடயே இருந்தவங்க எல்லாம் எனக்கு துரோகம் தான் பண்ணிகிட்டு இருக்காங்க, நீ நல்ல பிரண்டா தான் இப்ப வரைக்கும் இருந்துகிட்டு இருக்க என்று பேச, பாக்கியா என்னை எப்பவும் விட்டுக் கொடுக்காது என்று செல்வி சொல்ல, ஜெனி சிலர் சண்டை போடுவதற்கு என்று வந்து நிற்கிறார்கள். அவங்க கிட்ட பேச்சு கொடுக்காதிங்க என்று திட்டுகிறார்.
பிறகு தண்ணீர் எடுத்துக் கொண்டு ராதிகா மாடிக்கு மேலே செல்ல அங்கே மாடியில் இருந்து இனியா கீழே இறங்கி வர இருவரும் முறைத்துக் கொண்டிருக்கின்றனர். அப்போது அங்கு வரும் ஈஸ்வரி ராதிகாவை திட்டுகிறார். அதற்கு இப்ப கூட உங்களுக்கு உங்க பையன கேட்க முடியல, இல்லை என்று கேட்க, உன்னை இந்த வீட்டில் இருந்து அனுப்பிட்டு என்னுடைய மகனை இந்த வீட்டில் தங்க வைக்கிறேன் பாரு என்று ஈஸ்வரி சொல்ல, நான் இந்த வீட்டில் இருந்து பாக்கியாவை விரட்டிவிட்டு நான் இங்கேயே இருப்பேன் என்று ராதிகா சொல்கிறார்.
பிறகு எல்லோரும் பாக்கியாவிடம், ஒண்ணுமே பண்ணாதவங்க கூட இப்படி எல்லாம் பேச மாட்டாங்க, இவங்க இப்படி பேசுறாங்கன்னா, நம்ம எந்த அளவுக்கு பேசணும் என்று பேசி கொண்டிருக்கின்றனர். அதற்கு பாக்கியா நான் எதற்கு சொல்லணும். எனக்கு செய்யதுக்கு ஆயிரம் வேலை இருக்கு நான் கண்டவங்களுக்கு பதில் சொல்லிக்கிட்டு இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கூறுகிறார். இத்துடன் இன்று எபிசோடு முடிவடைகிறது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications