கிச்சனில் பாத்திரத்தை உடைக்கும் ராதிகா..செல்வி செய்த செயல்.. பரபரப்பாக வெளியான வீடியோ

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலுக்கான ஏப்ரல் 27 முதல் 29ஆம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.

ராதிகா கிச்சனில் காபி போட வந்து பிரச்சனை செய்கிறார்.

ராதிகாவை ஈஸ்வரி மிரட்ட, ராதிகா பாத்திரத்தை தூக்கி எரிந்து பிரச்சனை செய்கிறார்.

Baakiyalakshmi Serial 2023 April 27th to 29th April promo Highlights

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் யாரும் எதிர்பார்க்காத பல திருப்பங்கள் நடந்து வருகிறது. கோபி குடித்துக் கொண்டு கார் ஓட்ட முடியாமல் தவித்த நிலையில் செழியன் கோபிக்கு உதவி செய்வதற்காக வீட்டிற்கு கூட்டிக் கொண்டு வந்ததால் இப்போது பெரும் பிரச்சனை வெடித்துக் கொண்டிருக்கிறது.

சமையல் அறையில் பங்கு போடும் ராதிகா... பாக்கியா சொன்ன பதிலை கேட்டு அதிர்ச்சியான இனியா
ராதிகாவும் பாக்கியாவின் வீட்டில் வந்து இருந்து கொள்கிறார். ஈஸ்வரி எப்படியோ பிரச்சனை செய்து ராதிகாவை விரட்டி விடலாம் என நினைத்த நிலையில், அதை எல்லாம் ராதிகாவும் அவருடைய அம்மாவும் கண்டு கொள்ளாமல் தங்களுடைய முடிவில் உறுதியாக இருந்து பாக்யாவின் வீட்டிலேயே தங்க தொடங்கி விட்டனர்.

இந்த நிலையில் இன்றைய எபிசோட்டில் பாக்கியா போட்ட காபியின் வாசனையால் தனக்கு காபி வேண்டும் என்று கோபி கேட்க நான் உங்களுக்கு காபி கிச்சனில் போய் போட்டு வருகிறேன் என்று ராதிகா சொல்ல, வேண்டாம் பிரச்சனையாகி விடும் என்று கோபி தடுத்து பார்க்கிறார். ஆனால் அதுவெல்லாம் முடியாது இனி நாம இங்கேதான் இருக்கிறோம். இங்கே தான் சமையல் செய்யப் போகிறோம் என்று ராதிகாவும் கூறுகிறார்.

Baakiyalakshmi Serial 2023 April 27th to 29th April promo Highlights

இந்த நிலையில் தற்போது வெளியான ப்ரோமோவில் செல்வி பாத்திரம் கழுவி கொண்டிருக்க, அங்கே வரும் ராதிகா செல்வியின் கையில் இருந்த பால் பாத்திரத்தை வெடுக்கென்று பிடுங்கி அதிகாரம் செய்ய, ஈஸ்வரி ஏ செல்வி என்று மிரட்ட, ராதிகா கையில் இருந்த டிகாஷன் பாத்திரத்தை செல்வி போய் பிடுங்குகிறார். பிறகு ராதிகா செல்வியிடம் சர்க்கரை எங்கே இருக்கிறது என்று கேட்க, அதற்கு செல்வி கடையில் இருக்கிறது என்று பதிலடி கொடுக்கிறார்.

செல்வி பேச்சால் கடுப்பான ராதிகா மரியாதையாக பேசு என்று அதட்ட, அதற்கு ஈஸ்வரி என்ன அவளை அதட்டுற என்று சொல்ல, அங்கிருக்கும் பாத்திரத்தை தூக்கி ராதிகா எரிந்து விடுகிறார். அதனால் அங்கிருந்து அனைவரும் பயந்து விட, இது எங்க வீட்டு சமையல் கட்டு, நீ யாரு இங்க வந்து சும்மா நாட்டாமை பண்றதுக்கு, சீ வெளியே போயிரு என்று திட்டுகிறார். தற்போது இந்த பிரமோ பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+