நடு ரோட்டில் விழுந்த கோபி.. உதவி செய்த பாக்கியா.. ராதிகா பற்றிய உண்மைகளை உளறல்.. எழில் செய்த அதிரடி
சென்னை: அளவுக்கு அதிகமாக மது அருந்திய கோபி வண்டி ஓட்ட முடியாமல் ரோட்டிலே விழுந்து கிடக்கிறார்.
பாக்கியாவிற்கு போன் வந்ததால் கோபியை காப்பாற்றி வண்டியில் கூட்டிக் கொண்டு வருகிறார்.
ராதிகா பற்றி பாக்கியாவிடமே கோபி புலம்பி தள்ளுகிறார்.

இப்பவும் மனைவி பாக்கியாதானா
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ஏப்ரல் ஆறாம் தேதிக்கான எபிசோட் ஆரம்பத்தில், இனியா பாக்யாவோடு போனதை பற்றி நினைத்துப் பார்த்த கோபி ஒயின் ஷாப்பில் அளவுக்கு அதிகமாக குடித்துக் கொண்டிருக்கிறார். அங்கேயே தகராறு செய்துவிட்டு நிதானம் இல்லாமல் காரை ஓட்டி வரும் கோபி ஒரு இடத்தில் கல்லின் மீது மோதி கீழே விழுகிறார். அந்த வழியாக ரோட்டில் சென்ற நபர்கள் கோபியின் ஃபோனை எடுத்து அவரது குடும்பத்தினர் நம்பரை தேட மனைவி என்ற பெயரில் பாக்யா நம்பர் சேவ் செய்யப்பட்டு இருக்கிறது.
பாக்கியாவிற்கு வந்த ஃபோன் கால்
உடனே அந்த நபர்கள் பாக்யாவிற்கு போன் செய்து உங்க வீட்டுக்காரர் குடிச்சிட்டு ரோட்ல விழுந்து கிடக்கிறார் வந்து கூட்டிட்டு போங்க என்று சொல்ல, பாக்கியா எந்த இடம் என்று கேட்டுக் கொண்டு போனை வைக்கிறார். அப்போது அங்கு வரும் எழிலிடம் விஷயத்தை சொல்ல முதலில் அப்படியே விட்டு விடலாம் என்று கூற பிறகு பாக்கியா விஷயத்தை தெரிஞ்சுட்டு எப்படி அமைதியா இருக்கிறது என்று கேட்கிறார்.

எழிலின் கோபம்
பிறகு எழில் சரி வாமா போயிட்டு பாத்துட்டு வந்துடலாம் என சொல்லி இருவரும் கிளம்பி போக கோபி விழுந்து கிடக்கும் இடத்திற்கு வருகின்றனர். பிறகு என்ன செய்யலாம் என கேட்க? எழில் இப்படியே விட்டுட்டு போயிடலாம். இல்லனா போலீசுக்கு போன் பண்ணி சொல்லலாம், குடிச்சிட்டு வண்டி ஓட்டிட்டு வந்து இருக்கார் என்று உள்ள தூக்கி வைக்கட்டும் அப்ப தான் இவர் திருந்துவார் என்று சொல்ல அதெல்லாம் வேண்டாம் என்று பாக்கியா தடுக்கிறார்.
காமெடி பண்ணும் கோபி
பிறகு எழில் சரி கூட்டிட்டு போயிட்டு அவர் வீட்டில் விட்டு விடலாம் என சொல்ல, அங்க போய் நாம எப்படி விடுவது என்று பாக்யா யோசித்து பிறகு சரி என்று ஒப்புக்கொள்ள, காரில் கோபியை கூட்டிக்கொண்டு செல்கின்றனர். பாக்கியா காரை ஓட்டிக்கொண்டு வருகிறார். அப்போது நான் காரில் வந்தேன் என் பக்கம் இருந்து ஸ்டீரிங்கை காணவில்லை என்று கோபி தேடிக்கொண்டே புலம்பி கொண்டிருக்கிறார். பிறகு பாக்யாவை டிரைவர் என்று நினைத்து பாக்கியாவிடம் ராதிகாவை பற்றி பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது ராதிகாவிடம் இருந்து போன் வருகிறது.

உண்மைகளை உளறிட்டீங்களே கோபி
பாத்தீங்களா டிரைவர் எனக்கு இப்போ ராதிகா தான் போன் பண்ணுறா. எப்படியும் என்னை திட்ட தான் போறா என்று புலம்பிக் கொண்டிருக்கும் கோபி, இப்பல்லாம் பாக்கியா ரொம்ப ஸ்டைலா மாறிட்டா, இங்கிலீஷ்ல பேசுறா இங்கிலீஷ் கத்துக்கிட்டு இருக்கா, புதுசு புதுசா கத்துக்கிட்டு இருக்கா, அவா இப்ப ரொம்ப சந்தோஷமா இருக்கா, நான் தான் ராதிகாவை கட்டிக்கிட்டு சந்தோஷம் இல்லாமல் இருக்கிறேன் என்று புலம்பி கொண்டிருக்கிறார். இத்துடன் இன்று எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications