இனியாவை அடித்த ஈஸ்வரி.. பதிலடி கொடுத்த பாக்கியா.. பயத்தில் தவித்த மருமகள்கள்.. கோபி செய்த சூழ்ச்சி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ஆகஸ்ட் 17ஆம் தேதிக்கான எபிசோடு வெளியாகி இருக்கிறது.
அதில் ஈஸ்வரி செய்யும் செயலால் வீட்டில் இருக்கும் மருமகள்கள், ராமமூர்த்தி என அனைவரும் தவித்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் பாக்கியா ஈஸ்வரியை சரி செய்வதற்காக புது முயற்சி ஒன்று எடுக்கிறார். அதே நேரத்தில் இனியவால் பாக்யாவுக்கு பிரச்சனையும் வருகிறது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் பழனிச்சாமியின் அம்மா அவரிடம் இன்னும் எத்தனை நாளைக்கு தனியாகவே இருப்பா. அதனால பாக்யா வீட்டுக்கு போய் பொண்ணு கேட்கட்டுமா? என்று கேள்வி கேட்க, அதற்கு பழனிச்சாமி நாங்க ரெண்டு பேரும் நல்ல நண்பர்களாகத்தான் இருக்கிறோம். இருந்துட்டே போயிருதோம். நீங்க தேவையில்லாம இதை பத்தி யோசிச்சு உங்களையும் குழப்பி புது பிரச்சனையும் உருவாக்கிடாதீங்க என்று அட்வைஸ் கொடுக்கிறார்.
அதைத்தொடர்ந்து வீட்டில் இனியா ஹாலில் உட்கார்ந்து போன் பார்த்துக் கொண்டிருக்கும்போது ஈஸ்வரி போன் அதிகம் பார்க்காத ஃபோனை கொடு என்று வாங்க இனியா கோபப்படுகிறார். அதற்கு ஈஸ்வரி உனக்கு கோபம் வருவதற்கு காரணம் மூச்சு பயிற்சி செய்யாதது தான் என்று சொல்லி இனியாவை மூச்சுப் பயிற்சி செய்ய வைக்கிறார்.
ஈஸ்வரி இனியாவை அடித்து மிரட்டி அவரை மூச்சுப் பயிற்சி செய்ய சொல்லிக் கொண்டு இருப்பதை பார்த்து ராமமூர்த்தி, ஜெனி, அமிர்தாவும் அதிர்ச்சி அடைகின்றனர். பிறகு அப்போது சமைத்துக் கொண்டிருந்த அமிர்தா கரண்டியை கீழே போட்டதை பார்த்து ஈஸ்வரி கோவப்பட்டதும் ராமமூர்த்தி கோவப்படக்கூடாது என்று சொல்லி நக்கல் அடிக்கிறார்.
பிறகு ராமமூர்த்தி எனக்கு ஒரு டீ போட்டுட்டு வாம்மா என்று அமிர்தாவிடம் சொல்ல, இனி யாரும் டீ குடிக்க கூடாது என்று சொல்லி அங்கு இருக்கும் ஒரு பவுடரை கொண்டுவர சொல்லி கசாயம் போட சொல்லி அனைவரையும் குடிக்க வைக்கிறார். இனியா எனக்கு இனி நீங்க போன் தரலனாலும் பரவால்ல இந்த கசாயம் மட்டும் வேண்டாம் என்று எழும்பி ஓடி விடுகிறார்.

பிறகு மார்க்கெட்டுக்கு போயிட்டு வந்த பாக்கியாவிடம் வீட்டில் நடந்ததை எல்லாம் ஜெனியும் சொல்ல பாக்கியா அதிர்ச்சியாகி இதற்கு சீக்கிரமா ஒரு வழி பண்ணனும் என்று யோசித்துக் கொண்டிருக்கிறார். பிறகு தூங்குவதற்காக பாக்யா தன்னுடைய ரூமுக்கு போகும்போது இனியா உனக்கு நிறைய வேலை இருக்குலாமா நீ காலேஜை விட்டு விடு அதை படிக்க வேண்டாம் என்று சொல்ல, இது நீயா பேசல யாரோ சொல்லிக் கொடுத்து பேசுறாங்க என்று பாக்கியா கேட்க, ஆமாம்மா இது டாடி தாமா சொன்னாரு என்று இனியா போட்டுக் கொடுக்கிறார்.
அதற்கு பாக்யா நான் காலேஜுக்கு போற என்னுடைய கனவை விடனும் என்று அவர் சொல்றாரு, ஆனா அவரு ராதிகாவை காலேஜில் லவ் பண்ணினாரு. அந்த கனவை இப்போ எல்லாரையும் எதிர்த்து நிறைவேற்றி இருக்கிறார் தானே..? அவர் தன்னுடைய பொறுப்பை உணர்ந்து இருந்தால் இப்படி எல்லாம் பண்ணி இருப்பாரா? என்று கேட்க இனியா யோசிக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications