பாக்கியலட்சுமியில் பரபரப்பு.. ஜெனியின் அலட்சியத்தால் தப்பான வழியில் செழியன்..ராதிகாவின் நறுக் கேள்வி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலின் ஆகஸ்ட் 24 நான்காம் தேதிக்கான எபிசோடு டிஸ்னி ஹாட் ஸ்டாரில் வெளியாகிவிட்டது.
அதில் ஜெனி செழியனை அலட்சியப்படுத்தும் போது செழியன் தப்பான பாதையில் போகிறார்.

அதைத்தொடர்ந்து கோபியிடம் ராதிகா அடுக்கடுக்கான கேள்விகளை கேட்க, கோபி மன்னிப்பு கேட்டுக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் இன்றைய எபிசோட்டில் என்ன நடந்தது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.
இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் ராதிகாவும் கோபியும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது நீங்க எப்ப பாத்தாலும் கூட உங்க குடும்பத்தை பற்றியே பேசுறீங்களே எங்களை பத்தி எப்பவாவது பேசுறீங்களா? என்று ராதிகா கேட்க அதற்கு பதிலாக கோபி இனிமேல் அப்படி நடக்காது. இனி நம்ம ஜாலியாக இருக்கலாம் என்று ராதிகாவுக்கு சத்தியம் செய்து கொடுக்கிறார்.

அதைத்தொடர்ந்து பாக்யா வீட்டில் இனியா தன்னுடைய பிரண்டுடன் போனில் பேசிக் கொண்டிருக்கிறார். போன் பேசி முடித்ததும் பாக்கியாவுடன் ஜாலியாக பேசிக் கொண்டிருக்க, பாக்யா நீ சந்தோஷமாக உங்க அப்பா கூட டூருக்கு போயிட்டு வா என்று சொல்லி வழி அனுப்புகிறார்கள். விடிந்ததும் ஜெனிக்கு வளைகாப்பு வருவதால் பாக்யா கிச்சனில் விதவிதமான ஸ்வீட்டுகளை செய்து கொண்டிருக்கிறார்.
அப்போது ஜெனி வளகாப்பு முடிஞ்ச உடனே என்ன நீங்க அனுப்பி விட்ருவீங்களா? நான் ஒவ்வொரு நாளும் நாட்களை எண்ணிக்கொண்டே இருப்பேன். நீங்க வந்து சீக்கிரமா என்னை கூட்டிட்டு வந்துடனும். இல்லையென்றால் நானே வந்துடுவேன் என்று சொல்கிறார். அதற்கு ஈஸ்வரி அப்படியெல்லாம் பண்ணிடாதம்மா என்று சமாதானப்படுத்துகிறார்.
அதைத்தொடர்ந்து தனக்கு வளைகாப்பு முடிஞ்சு வீட்டுக்குப் கிளம்பும்போது ராமமூர்த்தி தனக்கு முன்பாக அந்த காருக்குள் போய் இருந்த விஷயத்தை பற்றி சொல்ல, எல்லோரும் சிரிக்கின்றனர். பிறகு தன்னுடைய அறைக்கு வரும் ஜெனி இடம் செழியன் இன்னைக்கு ஒரு நாள் தான் வீட்டிலேயே இருக்கப் போறா, என்கிட்ட கொஞ்ச நேரம் பேசு. என் கூட டைம் ஸ்பென்ட் பண்ணு என்று கேட்கிறார்.

அந்த நேரத்தில் சரியாக அமிர்தா கூப்பிடுகிறார். உடனே ஜெனியும் கொஞ்சம் வெயிட் பண்ணு கீழ போயிட்டு வருகிறேன் என்று செழியனிடம் சொல்லிவிட்டு கீழே வருகிறார். அப்போது செழியனின் லேடி கிளைன்ட் போன் பண்ணி தன்னை பார்க்க வர சொல்ல, முதலில் செழியன் மறுப்பு தெரிவித்து பிறகு வருகிறேன் என்று வேண்டா வெறுப்பாக சொல்கிறார்.
கீழே எல்லோருக்கும் பாக்கியா தான் செய்த சுவீட்டுகளை பரிமாறிக் கொண்டு இருக்க, எல்லோரும் சாப்பிட்டு விட்டு நல்லா இருக்கு என்று பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது ஜெனி வீட்டிற்கு போவதை நினைத்து இனியா கவலைப்பட பாக்கியா இனியாவை சமாதானப்படுத்துகிறார். பிறகு ராமமூர்த்தி தன்னுடைய காதல் கதை பற்றி சொல்லிக் கொண்டிருக்க எல்லோரும் சிரித்துக் கொண்டிருக்கின்றனர். அந்த நேரத்தில் மறுபடியும் செழியன் கூப்பிடுகிறார்.

அதற்கு ஜெனி தாத்தா கதை சொல்றாரு அதை கேட்டுட்டு வரேன் கொஞ்சம் வெயிட் பண்ணு என்று சொல்கிறார். அதனால் செழியன் அவருடைய லேடி கிளைண்டை சந்திப்பதற்காக போகிறார். அங்கே செழியனை கண்ட கிளைண்ட் செழியனை பற்றி புகழ்ந்து பேசிக் கொண்டிருக்கிறார். அதோடு தான் தனியாக இருப்பதாகவும் எமோஷனாக பேசுகிறார்.
இதனால் தள்ளி இருந்த செழியன் பக்கத்தில் சென்று ஆறுதல் படுத்துகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது. அதே நேரத்தில் இந்த சீரியலில் இன்று செழியனின் லேடி கிளைண்ட் கேரக்டரில் நடித்து வந்த நடிகையும் புதியதாக மாறி இருக்கிறார். அதுபோல அமிர்தாவும் இன்றைய எபிசோடில் மாறி இருக்கிறார்.












Click it and Unblock the Notifications