பாக்கியா வீட்டிலிருந்து பிரியும் ஜெனி.. பழனிச்சாமி செய்த செயல்..கண்கலங்கும் ஈஸ்வரி..திடீர் திருப்பம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலுக்கான ஆகஸ்ட் 24ஆம் தேதியிலிருந்து 26 ஆம் தேதி வரைக்குமான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
அதில் பாக்கியா வீட்டில் வைத்து ஜெனிக்கு பிரம்மாண்டமாக வளைகாப்பு பங்க்ஷன் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

அந்த நிலையில் அழையாத விருந்தாளியாக கோபி ராதிகாவோடு அங்கு வந்திருக்கும் நிலையில் ஈஸ்வரி கண்கலங்குகிறார். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
விஜய் டிவியில் அதிகமான ரசிகர்களால் பார்க்கப்படும் சீரியலாக பாக்கியலட்சுமி சீரியல் இருக்கிறது. கடந்த சில வாரங்களாக பாக்கியலட்சுமி சீரியல் விஜய் டிவியில் இரண்டாவது இடத்திற்கு டிஆர்பியில் சென்றிருந்த நிலையில் இந்த வாரம் மீண்டும் முதலிடத்திற்கு வந்திருக்கிறது. இது பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்து இருக்கிறது.
அதே நேரத்தில் இந்த சீரியலில் அதிரடியான பல மாற்றங்களும் எதிர்பாராத திருப்பங்களும் நடைபெற்று இருக்கிறது. இன்றைய எபிசோடில் அமிர்தா மற்றும் செழியனின் கிளைன்ட் மாலினி இருவர் கேரக்டரிலும் புதிய நடிகைகள் அறிமுகம் ஆகி இருக்கின்றனர். கதை எப்படி வேகம் எடுக்க போகிறது என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருக்கிறது. அதே நேரத்தில் இனி அமிர்தா மற்றும் மாலினியின் வில்லதனத்தால் பாக்யா என்ன பாடுபட போகிறார் என்று எதிர்பார்ப்பும் இருக்கிறது.
ஏற்கனவே பாக்யாவை தன்னுடைய குடும்பத்திடமிருந்து பிரித்து தனி ஆளாக நிறுத்துவேன் என்று கோபி சபதம் போட்டுக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் அடுத்தடுத்து நடக்கும் சம்பவங்களும் பாக்கியாவிற்கு பிரச்சனைகளை கொடுக்கும் என்று தெரிகிறது. அதைத் தொடர்ந்து தற்போது வெளியான ப்ரோமோ உணர்வுபூர்வமாக நெருடலாக இருக்கிறது.
அந்த வகையில் ஜெனியின் வளைகாப்பு பங்க்ஷன் பிரம்மாண்டமாக நடைபெறுகிறது. அதில் பழனிச்சாமி தன்னுடைய அம்மாவோடு கலந்து கொண்டு செழியனுக்கு நலுங்கு வைக்க அதை பார்த்து ஈஸ்வரி சிரிக்கிறார். அதை தொடர்ந்து கோபி ராதிகாவோடு இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். அது மட்டும் இல்லாமல் ஆரம்பத்தில் ஜெனியை அதிகமாக திட்டிக் கொண்டிருந்த ஈஸ்வரி இன்று ஜெனிக்கு நலுங்கு வைக்கும் போது கண்கலங்கி அழுகிறார்.

அதுபோல அனைவருக்கும் டாடா போட்டுவிட்டு ஜெனி தன்னுடைய அம்மா வீட்டிற்கு கிளம்பி போகிறார். அந்த நேரத்தில் குடும்பத்தோடு பாக்கியா மட்டும் மிஸ் ஆகி இருக்கிறார். இப்படியாக ப்ரோமோ வெளியாகி இருக்கும் நிலையில் தற்போது இது அதிகமான வரவேற்பு பெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த எபிசோடு எப்போது வரும் என்று காத்திருக்கின்றனர். அதிலும் பெண்களுக்கு பிடித்த மாதிரியே பேக்ரவுண்ட் பாடலோடு இந்த பிரமோ வெளியாகியிருக்கிறது.












Click it and Unblock the Notifications