மாலினியிடம் கொஞ்சி பேசும் செழியன்.. கண்கலங்கி அழும் ஜெனி.. ராதிகா கேட்ட கேள்வி.. அதிர்ந்த குடும்பம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலின் ஆகஸ்ட் 25ஆம் தேதிக்கான எபிசோடு வெளியாகி இருக்கிறது.
அதில் ஜெனியின் வளைகாப்பு பங்க்ஷன் பிரம்மாண்டமாக நடைபெற்று இருக்கிறது.

அதில் நடந்த பிரச்சனைகள் மற்றும் எதிர்பாராத நிகழ்வுகள் குறித்து விரிவாக பார்க்கலாம்.
இன்றைய எபிசொடின் ஆரம்பத்தில் ஜெனி வளைகாப்பிற்கான வேலைகளை எல்லோரும் வீட்டில் பரபரப்பாக பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அப்போது செழியனை காணவில்லையே என்று ஈஸ்வரி கேட்க, அதற்கு செழியன் கொஞ்சம் பொருள் வாங்க போயிருக்கான் என்று எழில் சொல்லி, நான் கூட இன்னைக்கு போகாத ஜெனி போகாத ஜெனி என்று கையை புடிச்சு அழுதுகிட்டு இருப்பானு நெனச்சேன்.

ஆனா இவன் வேலை எல்லாம் பாக்குறானே என்று கிண்டல் செய்ய, உனக்கும் இதுபோல ஒரு நாள் வரும் இல்ல அப்போது தெரியும் டா என்று ஈஸ்வரி சொல்ல அமிர்தாவின் முகம் மாறுகிறது. அதற்கு பாக்யா சமாளித்து அமிர்தாவை அங்கிருந்து அனுப்பி வைத்து விட அதைத்தொடர்ந்து செல்வி அங்கு வர செல்வி இடமும் குழந்தைகளை ஏன் கூட்டிட்டு வரல என்று பாக்கியா கேட்டுவிட்டு பிறகு பலகாரங்களை எடுத்து வைக்க சொல்கிறார்.
அடுத்ததாக ஜெனியின் அம்மா உறவினர்களோடு தாம்பூல தட்டுடன் வீட்டிற்கு வருகிறார். பிறகு எல்லோரும் நலம் விசாரித்து பேசிக்கொண்டு இருக்கின்றனர். அப்போது ஜெனியின் அப்பா ஏன் வரவில்லை என்று கேட்க அவ ரொம்ப ட்ரை பண்ணினார். ஆனால் அவரால் வர முடியவில்லை என்று பேசிக் கொண்டிருக்கின்றனர். அதைத்தொடர்ந்து பழனிச்சாமியும் அவருடைய அம்மாவும் வீட்டிற்கு வருகின்றனர்.

பிறகு பழனிச்சாமியின் அம்மாவிடம் ஜெனியின் அம்மாவை பாக்கியா அறிமுகப்படுத்தி வைக்க யார் என்று ஜெனியின் அம்மா கேட்க இவர் அம்மாவோடு படித்த நண்பர் என்று எழில் அறிமுகம் செய்கிறார். அடுத்ததாக செழியன் அங்கு வர செழியன் எல்லோரிடமும் பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது மாலினி செழியனுக்கு மெசேஜ் செய்து கொண்டிருக்க செழியன் சிரித்தபடியே மாலினிக்கு மெசேஜ் செய்து கொண்டிருக்கிறார்.
அதற்கு எழில் உனக்கு இன்னைக்கு லீவு தானே இன்னைக்கு கூட உன்ன ப்ரீயா விட மாட்டாங்களா? என்று கேட்க, அதெல்லாம் ஒன்னும் இல்லை என்று சொல்லிக் கொண்டு மீண்டும் செழியன் மாலினி இடம் பேசிக்கொண்டே இருக்கிறார். பிறகு ஜெனியை மடியில் இருந்து கீழே கூட்டிட்டு வர ஜெனி இடம் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது மீண்டும் செழியன் மாலை நேரம் பேசிக் கொண்டிருக்க ஈஸ்வரி திட்டுகிறார்.
அதைத்தொடர்ந்து ஃபங்ஷன் தொடங்குகின்றது. எல்லோரும் நலுங்கு வைத்துக் கொண்டிருக்கின்றனர் அதைத்தொடர்ந்து பழனிச்சாமியும் நலுங்க வைத்துக் கொண்டிருக்கிறார். அப்போது கோபி ராதிகா மையூடன் அங்கு வருகிறார் பழனிச்சாமியை பார்த்ததும் இந்த லேம்போஸ்ட் இங்கேயே செட்டில் ஆகிவிட்டானா என்று திட்ட ராதிகா கோபப்படுகிறார்.

பழனிச்சாமி, கோபியை பார்த்ததும் கோபி அண்ணா வாங்கண்ணா இப்பதான் வாரீங்களா? என்று விசாரிக்க கோபி கோபப்படுகிறார். பிறகு கோபி நலங்கு வைக்க அதைத்தொடர்ந்து ராதிகாவும் நலுங்கு வைக்க பாக்யா முகம் வாடுகிறார். பிறகு மையூ உடன் ரகசியமாக நல்லா இருக்கியா என்று பாக்கியா கேட்கிறார்.
எல்லோரும் நலங்கு வைத்துக் கொண்டிருக்கும் போதும் செழியன் போனை பார்த்துக் கொண்டே இருக்க பாக்யா செழியனை திட்டுகிறார். அதை தொடர்ந்து எல்லோரும் சாப்பிட போகின்றனர். பிறகு எல்லோரும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது ஜெனி அழுது கொண்டிருக்கிறார். அதற்கு எல்லோரும் சமாதானம் சொல்லிக் கொண்டிருக்கின்றனர். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications