மாலினியிடம் கொஞ்சி பேசும் செழியன்..கோபத்தில் திட்டும் எழில்..ஜெனி செய்த செயல்..ஈஸ்வரி சொன்ன வார்த்தை
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ஆகஸ்ட் 26 ஆம் தேதிக்கான எபிசோடு வெளியாகி இருக்கிறது.
அதில் ஜெனி வீட்டை விட்டு கிளம்பியதும் மாலினியிடம் செழியன் கொஞ்சி பேசிக் கொண்டிருக்கிறார்.

அதே நேரத்தில் கோபிக்கு புதிய பிரச்சனை வருகிறது. இந்த நிலையில் இன்றைய எபிசொட்டில் என்ன நடந்தது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.
இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் ஜெனிக்கு வளைகாப்பு முடிந்ததும் அவருடைய அம்மா வீட்டுக்கு போவதற்காக ரெடியாகி கொண்டிருக்கிறார். அப்போது எல்லோரிடமும் போயிட்டு வருகிறேன் என்று சொல்லிவிட்டு, பிறகு அவருடைய அம்மாவிடம் நான் இங்கேயே இருந்து கொள்ளட்டுமா என்று கேட்க, பாக்யா ஈஸ்வரி என எல்லோரும் சமாதானம் செய்து அனுப்பி வைக்கின்றனர்.
அதைத்தொடர்ந்து பாக்யா, ஈஸ்வரி, ராமமூர்த்தி மூவரும் வீட்டில் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது செல்வி அங்கு ஒரு அவரும் இவர்களோடு பேசிக் கொண்டிருக்கின்றனர். அந்த நேரத்தில் இனியா நான் நாளைக்கு ட்ரிப்புக்கு போறதுக்கு எல்லாம் எடுத்து வச்சுட்டேன். நீ வந்து பாருமா என்று பாக்கியாவிடம் சொல்லி இதுவரைக்கும் நான் எல்லார் கூடவும் ட்ரிப் போய் இருக்கேன். ஆனா முதல் முறையாக நான் எனக்காக ட்ரிப் போறேன் என்று நினைக்கும் போது சந்தோசமா இருக்கு என்று பேசிக் கொண்டிருக்கிறார்.

அதைத் தொடர்ந்து மொட்டை மாடியில் செழியன் ஜெனி வீட்டிற்கு போனதை நினைத்து பீல் பண்ணிக் கொண்டிருக்கிறார். அப்போது எழில் செழியன் நிலைமையை பார்த்து கிண்டல் செய்துவிட்டு நீ அவங்களுக்கு போன் பண்ணு, நீ ஏன் வெயிட் பண்ற நீயே பேசு என்று திட்டிவிட்டு கிளம்ப, செழியன் ஃபோனை எடுத்து ஜெனிக்கு போன் பண்ண ட்ரை பண்ண அந்த நேரத்தில் மாலினி இடம் இருந்து போன் வருகிறது. பிறகு மாலினியும் செழியனும் பேசிக் கொண்டிருக்கின்றனர்.
அடுத்ததாக செழியன் ஜெனிக்கு போன் ட்ரை பண்ண ஜெனி அந்த நேரம் அமிர்தாவுக்கு போன் செய்து வீட்டில் உள்ளவர்கள் எல்லோரிடமும் பேசிக் கொண்டிருக்கிறார். கடைசியில் போனை வைத்ததும் செழியனுக்கு போன் செய்யலாம் என்று போனை எடுக்க அந்த நேரத்தில் வந்த ஜெனியின் அம்மா போனை வச்சுட்டு வா என்று கூட்டிக்கொண்டு போகிறார். ஜெனி போன் பண்ணுனதுக்கு எடுக்கவில்லையே என்று செழியன் குழப்பத்தில் இருக்கிறார்.

அதே நேரத்தில் ராதிகா வீட்டில் கோபியும் ராதிகாவும் வளைகாப்பு பங்க்ஷன் பற்றி பேசிக் கொண்டிருக்கின்றனர். அந்த நேரத்தில் ராதிகா அம்மா வந்து மயூ பெரிய பொன்னாகிட்டா என்று சொல்ல ராதிகாவும் கோபியும் சந்தோஷப்படுகின்றனர். பிறகு நாளைக்கு பங்க்ஷன் வைக்கலாம் என்று சொல்ல கோபி, நாளைக்கு நான் இனியா கூட போறேன் என்று சொல்லவும் ராதிகா கோவப்பட்டு திட்டுகிறார். இத்துடன் இன்று எபிசோடு முடிவடைகிறது.
-
சிறகடிக்க ஆசை: ஜெயிலுக்கு போன சத்யா.. மீனா கண்டுபிடித்த ரகசியம்.. இனி தான் பெரிய சம்பவம் இருக்கு! -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு!












Click it and Unblock the Notifications