கோபி சொன்ன வார்த்தை.. கதறி அழுத இனியா..ராதிகாவின் அண்ணன், குடும்பத்திற்கு கொடுத்த அதிர்ச்சி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ஆகஸ்ட் 29ஆம் தேதிக்கான எபிசோடு வெளியாகி இருக்கிறது.
இந்த நிலையில் இனியாவோடு தன்னால் வர முடியாது என்று கோபி சொன்ன வார்த்தையை கேட்டு இனியா அழுது கொண்டிருக்கிறார்.

அதற்காக பாக்யா புது முடிவெடுக்க ஈஸ்வரி முதலில் அதிர்ச்சியானாலும் பிறகு சொன்ன வார்த்தையால் இனியா சந்தோஷப்படுகிறார். என்ன நடந்தது என்பது விரிவாக பார்க்கலாம்.
இன்றைய எபிசொடின் ஆரம்பத்தில் செழியன் இனியாவை ட்ரிப்புக்கு கூட்டிட்டு போக முடியாது என்று சொன்னதை கேட்டு எழில் என்ன செய்ய என்று யோசித்துக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் செழியன் பாக்கியாவிற்க்கு போன் பண்ணி இன்னைக்கு நைட் வர முடியாது எனக்கு ரொம்ப வேலை இருக்கு என்று சொல்ல பாக்கியா சரி என்று சொல்கிறார்.

பிறகு இனியா தனியா இருப்பா அவ கிட்ட போய் பேசுறேன் என்று ரூமுக்குள் போய் பார்க்க, அங்கே இனியா அழுது கொண்டிருக்கிறார். பிறகு பாக்கியா இனியாவை சமாதானப்படுத்துகிறார். அதோடு உன்னை எழில் கண்டிப்பாக கூட்டிட்டு போவான் நீ போய் கவலைப்படாமல் தூங்கு என்று ஆறுதல் கூறுகிறார்.
அடுத்த நாள் காலையில் இனியாவை யார் கூட்டிட்டு போறது என்பது பற்றிய பஞ்சாயத்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதற்கு எழில் சரி நானே கூட்டிட்டு போகிறேன் என்று சொல்ல, பாக்யா வேண்டாம் நீ வேலையை விட்டுட்டு போக வேண்டாம் என்று சொல்ல, அப்போ நீ கூட்டிட்டு போமா என்று எழில் சொன்னதும் பாக்யா சரி என்று சொல்கிறார். பிறகு பாக்கியா நாங்க இரண்டு பேரும் எப்படி தனியா போறது? மாமாவையும் கூப்பிட முடியாது. அத்தை நீங்க வரீங்களா? என்று கேட்க, முதலில் அதற்கு மறுப்பு தெரிவித்து பிறகு ஈஸ்வரி இனியா கேட்டதால் சரி என்று சொல்கிறார்.

அதைத்தொடர்ந்து ஈஸ்வரி எங்க கூடவே செல்வியும் வரட்டும் என்று இரண்டு பேரும் வெளியே போனால் இவா என் கூட இருப்பா தானே என்று சொல்ல, பாக்யாவும் சரி என்று சொல்கிறார். பிறகு கிச்சனில் அமிர்தாவிடம் கேண்டினில் ராதிகா ஏதாவது சொன்னா எனக்கு போன் பண்ணு என்று சொல்லிவிட்டு கிளம்ப, ஈஸ்வரி நான் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு வருகிறேன் என்று கிளம்பி போகிறார்.
எல்லாரும் போனதும் செல்வி அமிர்தாவிடம் நாங்கள் எல்லோரும் போனதும், நீயும் எழிலும் சந்தோஷமா ஜாலியா இருங்க என்று சொல்ல, அமிர்தா வெட்கப்பட்டு கொண்டே உள்ளே போகிறார். அதை தொடர்ந்து மயூவை பார்த்ததற்காக ராதிகாவின் அண்ணனும் அண்ணியும் வருகின்றனர்.

அவர்கள் கோபியிடம் பேசிவிட்டு மயூக்கு ஒரு கிப்ட் வாங்கி வச்சிருக்கோம் வாங்க பார்க்கலாம் என்று எல்லாரையும் கூட்டிட்டு போக கோபி தனியாக ரூமுக்குள் சென்று இனியாவிடம் மன்னிப்பு கேட்கிறார். அப்போது இனியா நான் ட்ரிப்புக்கு போறேன் டாடி, என்னை அம்மா கூட்டிட்டு போறாங்க என்று சொன்னதை கேட்டதும் கோபி அதிர்ச்சி அடைகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications