பாக்கியலட்சுமி சீரியலில் திடீர் திருப்பம்.. பாக்கியாவை மிரட்டும் இனியா.. ஈஸ்வரியின் அதிரடி மாற்றம்
சென்னை: பாக்கியலட்சுமி சீரியலில் காசிக்கு போயிருந்த ஈஸ்வரி மீண்டும் வீட்டிற்கு வந்து இருக்கும் நிலையில் அவருடைய நடவடிக்கையை பார்த்து மொத்த குடும்பமும் அதிர்ச்சி அடைகின்றனர்.
அதே நேரத்தில் பாக்கியா காலேஜ் விஷயத்தில் இனியா சொன்ன வார்த்தையை கேட்டு அதற்கு முடியாது என்று பாக்கியா பிரச்சனை செய்கிறார்.

இந்த நிலையில் பாக்கியலட்சுமி சீரியலின் ஆகஸ்ட் ஒன்பதாம் தேதிக்கான எபிசோட்டில் என்ன நடந்தது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.
இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில்,, வீட்டில் எல்லோரும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது அமிர்தா அம்மா காலேஜுக்கு போனது எல்லோருக்கும் ஓகே தான். ஆனால் பாட்டிக்கு தெரிந்தால் என்ன ஆகும்னு தெரியலையே என்று சொல்ல, அதைக் கேட்டு எழிலும், ஜெனியும் பயப்படுகிறார்கள். இதனால் எழில் நான் போய் அம்மா கிட்ட சொல்லி கூட்டிட்டு வருகிறேன் என்று கிளம்புகிறார்.

அதைத்தொடர்ந்து காலேஜுக்கு வந்த எழில் பாக்கியாவிடம் பாட்டி வீட்டிற்கு வந்துவிட்டாங்க, அதுவும் சாமியார் மாதிரி வந்திருக்காங்க என்று சொல்ல, பாக்கியா அதிர்ச்சி அடைந்து நான் காலேஜுக்கு போகுற விஷயம் தெரியுமா? என்று பயந்தபடியே கேட்க, இப்ப வரைக்கும் பாட்டிக்கு அதெல்லாம் தெரியாது வா வீட்டுக்கு போய் பேசிக்கலாம் என்று கூட்டிட்டு வருகிறார். பாக்கியாவை
கண்டதும் ஈஸ்வரி கோபப்படுகிறார்.
அதற்கு ராமமூர்த்தி நீ தான் கோபப்பட மாட்டாய் என்று சொல்லி இருக்கியே என்று நினைவுபடுத்த, அதை கேட்டு ஈஸ்வரி சமாதானம் ஆகிறார். பிறகு தான் காலேஜுக்கு போய்க் கொண்டிருக்கும் விஷயத்தை சொல்லாமல் மறைத்துவிட்டு ஈஸ்வரியிடம் ஆசிர்வாதம் வாங்குகிறார். அடுத்த நாள் விடிந்ததும் ஜாக்கிங் போயிட்டு வந்த செழியன் நடுவீட்டில் ஈஸ்வரி யோகா செய்வதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார்.
செழியன் போய் பாக்கியாவையும், ராமமூர்த்தியையும் கூட்டிக்கொண்டு வந்து கூட்டிக் கொண்டு வந்து காட்ட அவர்களும் அதிர்ச்சி அடைகின்றனர். அதைத் தொடர்ந்து வீட்டிற்கு வந்த செல்வி, ஈஸ்வரி யோகா செய்வதை பார்த்து ஈஸ்வரிக்கு ஏதோ ஆகிவிட்டது என்று நினைத்து குழம்ப, பாக்கியா உள்ளே கூட்டிட்டு போய் என்ன நடந்தது என்பதை பற்றி சொல்கிறார்.

அடுத்ததாக இனியா, அம்மா நீ காலேஜுக்கு வராத என்னை எல்லாரும் கிண்டல் அடிக்கிறாங்க என்று சொல்ல, பாக்யா யார் என்ன சொன்னாலும் நான் காலேஜுக்கு வருவேன் என்கிறார். அதற்கு இனியா பாட்டி கிட்ட சொன்னா வரமாட்டானே தானே? என்று கேட்டு மிரட்ட பாக்கியா பயந்து விடுகிறார். இத்துடன் இன்று எபிசோடு முடிவடைகிறது.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications