பாக்யாவுக்கு பண விஷயத்தில் உதவும் "நபர்கள்”.. கோபி கேட்ட கேள்வி.. ஆடி போன ராதிகா

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாக்கியலட்சுமி சீரியலில் கோபி இடம் பாக்கியா போட்ட சவாலில் ஜெயிப்பதற்கு பாக்யாவிற்கு எழில் மற்றும் செழியன் கடைசி நேரத்தில் உதவி செய்கின்றனர்.

பாக்கியாவிடம் பணம் இருப்பது தெரியாமல் கோபி கேவலமாக பேசி கடைசியில் மொக்கை வாங்குகிறார்.

Baakiyalakshmi Serial 2023 July 10th Episode full update Eghil and Cheliyan help Baakiya with money

அதுபோல பாக்யாவை அவமானப்படுத்த வேண்டும் என்று முயற்சி செய்தார். ராதிகாவுக்கு பல்பு கிடைக்கிறது. இந்த நிலையில் இன்றைய எபிசோட்டில் என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலின் ஜூலை 10ஆம் தேதிக்கான எபிசோட் ஆரம்பத்தில் கிச்சனில் பாக்கியா நின்றபடி பணத்திற்கு என்ன செய்வது என்று தெரியாமல் யோசித்துக் கொண்டிருக்கிறார். அப்போது அங்கே வரும் செல்வியும், அமிர்தாவும் பாக்யாவுக்கு ஆறுதல் கூறிக் கொண்டிருக்கின்றனர்.

Baakiyalakshmi Serial 2023 July 10th Episode full update Eghil and Cheliyan help Baakiya with money

அந்த நேரத்தில் பாக்கியா எழில் எங்கே என்று கேட்க அமிர்தா ராத்திரியே அவர் வீட்டுக்கு வரலை ரொம்ப வேலை என்று சொன்னாரு என்று சொல்லிக் கொண்டிருக்க, அந்த நேரம் எழில் வீட்டிற்கு வர எழிலிடம் நலம் விசாரித்து சாப்பிட்டியா ரொம்ப வேலையா என்று பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது எழில் அதெல்லாம் ஒன்னும் இல்லம்மா நான் ஒரு வேலைக்கு போயிருந்தேன் என்று சொல்லி தான் கொண்டு வந்த 5 லட்சம் பணத்தை கொடுக்கிறார்.

பணத்தை வாங்க மறுத்து பாக்யா வேண்டாம் என்று சொல்ல, நீ மட்டும் தான் எங்களுக்காக கஷ்டப்படுவியா? இதில் 5 லட்சம் பணம் இருக்கு இன்னும் நாலு நாள் கஷ்டப்பட்டு உழைத்தால் மீதி இருக்கும் 5 லட்சமும் கிடைச்சிரும். அவருக்கு முகத்தில் தூக்கி எறிஞ்சிடலாம். இதை பிடி என்று சொல்ல அமிர்தா, பாக்கியா தயங்குகிறார். அப்போது மொத்த பணத்தையும் நீயே கொடுத்து இந்த வீட்டை உனக்கே வச்சுக்கலாம்னு பாத்தியா என்று எழில் கிண்டல் செய்ய பாக்கியா சந்தோசமாக வாங்கிக் கொள்கிறார்.

Baakiyalakshmi Serial 2023 July 10th Episode full update Eghil and Cheliyan help Baakiya with money

எழில் கொடுத்த பணத்தை சந்தோஷமாக பாக்கியா பார்த்துக் கொண்டிருக்க மறுபக்கம் ஜெனி செழியனுக்கு போன் பண்ணி பணத்துக்கு ஏதாவது பண்ணுனியா? இன்னும் அஞ்சு லட்சம் மட்டும் போதும் என்று சொல்ல, ஜெனியின் நான் கொண்டு வருகிறேன் என்று சொல்லி போனை வைக்கிறார். பிறகு எல்லோரும் வீட்டில் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது அத்தை எங்கே என்று பாக்கியா விசாரித்துக் கொண்டிருக்கிறார்.

அதற்கு ராமமூர்த்தி அவ மனசு சரியில்லை என்று கோயிலுக்கு போய் இருக்கா வந்துடுவா என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் செழியனும் வீட்டுக்கு வருகிறார். பிறகு எல்லோரும் பேசிக் கொண்டிருக்கும்போது எழில் பணத்தை ரெடி பண்ணியாச்சு இன்னும் அஞ்சு லட்சம் தான் அதை இன்னும் நாலு நாள்ல கொடுத்துடலாம் என்று சொல்ல, செழியன் ஏண்டா என்னை எதிலையும் சேர்த்துக் கொள்ள மாட்டீங்களா? என்று கேட்கிறார்.

Baakiyalakshmi Serial 2023 July 10th Episode full update Eghil and Cheliyan help Baakiya with money

5 லட்சம் பணத்தை கொடுத்து எனக்கும் இதில் பங்கு இருக்கு, முறையா நாமதான் பணத்தை கொடுத்திருக்கனும். இப்ப இவ்வளவுதான் இருக்கு வாங்கிக்கோ என்று சொல்ல, பாக்கியா சந்தோசத்தில் என்ன சொல்வதென்று தெரியாமல் ஆனந்த கண்ணீர் விடுகிறார். பிறகு பாக்யா சாமி கும்பிட்டுக் கொண்டிருக்க அங்கு வரும் ராதிகாவும், கோபியும் பாக்யாவை கிண்டல் அடிக்கின்றனர்.

ராதிகா பாக்யாவிடம் என்ன பணம் கொடுக்க முடியலனு சாமிகிட்ட தீவிரமா வேண்டிக்கிட்டு இருக்கீங்களா? எல்லாம் வாய் பேச்சு மட்டும் தானா? என்று பேசிக் கொண்டிருக்க பாக்கிய நீங்க ரெண்டு பேரும் பேசி முதல்ல முடிங்க அப்புறம் நான் பேசுறேன் என்று சொல்கிறார் இத்துடன் இன்று எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+